ஒரு ஆம்புளக்கி நாலும் முடிக்க ஏலும் தானே?

  • 50

திருப்பு முனை
பாகம் 5

பேரதிர்ச்சியில்  இருந்த லீனா அவனை பார்த்து, “என்ன கேட்டீங்க?” என்றாள்.

“ஒரு ஆம்புளக்கி நாலும் முடிக்க ஏலும் தானே?” என்றான் ஷரீப். அவள் மனம் கனத்தது.

“ம்ம்… ஏலும்” என்றாள் மௌனமாக.

“இத சொல்லவா இவ்வளவு நேரம்” என்று நக்கலாக சிரித்தான் ஷரீப்.

அந்த ஒரு கேள்வி அவன் மீது அவள் கொண்டிருந்த ஒட்டு மொத்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்குவதை போலிருந்தது அவளுக்கு. ஹனாவின் வார்த்தைகள் அவள் கண் முன் நிழலாடியது.

‘யா அல்லாஹ்! ஏன் இப்படி ஒரு கேள்விய அதும் இன்டக்கி இவர் கேக்கனும். இவர்ட மனசுல அப்படி ஒரு  எண்ணம் இருக்கா? அப்படி என்டா எல்லாரும் சொன்னது உண்மயா? நா தான் மோடயாவிட்டேனா? அப்படி என்டா ஏன்ட வாழ்க்கை என்னாகுமோ ரப்பே?’

என்று லீனா மனதால் புலம்பிக் கொண்டிருந்தாள்.

“என்ன  யோசன ஒஙல்க்கு, யோசிக்காம மொதல்ல தின்னுங்க”

“நா தின்டுட்டேன் எனக்கு போதும். மீதிய நீங்க தின்னுங்க.” என்றான் ஷரீப்.

அவன் வார்த்தைகள் அவள் மனதை தைத்தது. கண்கள் குழமாகின. வேண்டா வெறுப்புடன் உணவை உண்டாள் லீனா. அவன் அறையில் இருந்து வெளியே சென்றதும் அவள் அழுதாள். அவள் கண்ட கனவெல்லாம் சிதைக்கப்பட்டு விடுமோ என்ற பயம் அவளுக்கு. அந்த நிமிடமே தாய் வீட்டுக்கு சென்று விட அவள் மனம் கெஞ்சியது. ஆனாலும் அது சாத்தியமாகுமா? நிச்சயம் இல்லை.

அவள் அழுகை சத்தம் கேட்டு மதினி அறைக்குள் வந்தாள்.

“ஏன் மைனி அழுறீங்க. ஊட்டு நெனவா? அழாதீங்க மைனி. நாங்க எல்லாம் ஒஙல்க்கு இருக்கிறோம். நீங்க கலவபடவே தேவல்ல. ஒஙல்க்கு என்னன்டாலும் எனக்கு சொல்லுங்க. நா help பண்றேன். சரியா?”

“சரி” யென்று தலையசைத்தாள் லீனா.

“நீங்க மட்டும் தனியாவா தின்னுரீங்க நானா எங்க தின்னல்லயா மைனி?”

“இல்ல அவர் தின்னுட்டு தான் வெளிய போன.”

“நானாக்கு என்ன பைத்தியமா. இப்படி ஒஙல மட்டும் தின்ன சொல்லிட்டு போறதுக்கு. ஒன்னும் வெளங்குரல்ல அவருக்கு.” என்று மதினி சொல்லும் போதே ஷரீப் வந்து நின்றான்.

“என்ன நானா மைனி தின்னகாடும் சரி இரிக்காம எங்க போனீங்க? பாவம் மைனி அழுறா”

“அவ பொய்க்கி அழுறா. நீங்க அவவ இன்னம் அழ வெக்காம பெய்த்து வேலய பாருங்க” என்றான் நக்கலாக.

கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு  மதினி குசினிக்குள் சென்றாள்.

“ஏன்  அழுறீங்க. உம்மா நெனவா? ஊட்டுக்கு கோல் எடுத்து தாரேன் பேசுங்க சரியா அழாதீங்க.”

என்றவனின் மார்பில் முகம் புதைத்து அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு, ஆனால் அவன் எதையும் புரிந்து கொள்ளவில்லை.

**********************

மறுநாள். அவனோடு மனம் விட்டு பேச அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். அவனோ எங்கோ சென்றிருந்தான். எங்கு போனான் என்று அவளுக்கும் தெரியாது. சற்று நேரத்தில் அவன் வந்ததும் காலை உணவை உண்டு விட்டு மதினியுடன் கதைத்துக் கொண்டிருந்தாள்.

“லீனா நா கொஞ்சம் வெளிய போறேன் ஒங்களுக்கு என்ன சரி வேணுமா” என்றான் ஷரீப்.

“நீங்க ஒங்களுக்கு எடுக்குறதயே எனக்கும் எடுங்க.”

என்று கூறிவிட்டு அவனை வழியனுப்பி வைத்தாள் லீனா. ஆனாலும் அவள் மனம் அவன் வருகைக்காக ஏங்கியது. எவ்வித பேச்சும் புரிந்துணர்வும் இன்றி ஒரு வாரமும் கழிந்தது.

*************

லீனா அவள் வாழ்வில் எவ்வித பிடிப்பும் இன்றி தனது மனதில் உள்ள ஏக்கங்களையும் காயங்களையும் மறைத்து தனது குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக வெளியில் சிரித்து மகிழ்ந்து வாழ்ந்துக் கொண்டிருந்தாள். அவள் தோற்றுப் போனதாய் ஓர் உணர்வு அடிக்கடி அவளை ரணப்படுத்தியது. அவள் கண்ட கனவெல்லாம் கானல் நீராய் மறைந்து போனது. ஆனாலும் எல்லாம் சரி வரும் என்ற நம்பிக்கையில் அவள் ஆறுதல் அடைந்தாள். ஒரு நாள் இருவரும் மதிய உணவுக்காக விருந்தினர் வீட்டுக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தனர். அப்போது ஷரீப் அவளிடம்,

“அங்க போனா என்னோடயே இரிங்க. நீங்க உள்ளுக்கு பெய்த்து ஒன்டும் பேச தேவல்ல. வெளங்குதா”என்றான் ஷரீப்.

“ஏன் அப்படி சொல்ரீங்க?”

“நா சொன்னா அத மட்டும் நீங்க கேட்டா சரி குறுக்கு கேள்வி தேவல்ல லீனா.” என்றான் கடுமையாக. லீனா எதுவும் பேசாது சரி என்பதை போல் தலையசைத்தாள்.

ஷரீபின் ஒவ்வாரு நடவடிக்கையும் அவள் மனதை காயப்படுத்தி கொண்டே இருந்தது. என்றாலும் அவள் காயங்களை சொல்லி அழ அங்கு யாரும் இல்லை அவளுக்கு.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

திருப்பு முனை பாகம் 5 பேரதிர்ச்சியில்  இருந்த லீனா அவனை பார்த்து, “என்ன கேட்டீங்க?” என்றாள். “ஒரு ஆம்புளக்கி நாலும் முடிக்க ஏலும் தானே?” என்றான் ஷரீப். அவள் மனம் கனத்தது. “ம்ம்… ஏலும்”…

திருப்பு முனை பாகம் 5 பேரதிர்ச்சியில்  இருந்த லீனா அவனை பார்த்து, “என்ன கேட்டீங்க?” என்றாள். “ஒரு ஆம்புளக்கி நாலும் முடிக்க ஏலும் தானே?” என்றான் ஷரீப். அவள் மனம் கனத்தது. “ம்ம்… ஏலும்”…

8 thoughts on “ஒரு ஆம்புளக்கி நாலும் முடிக்க ஏலும் தானே?

  1. I want to show thanks to the writer for bailing me out of this particular crisis. Right after exploring through the internet and coming across opinions that were not pleasant, I thought my life was gone. Being alive without the solutions to the issues you have resolved by means of your entire review is a crucial case, as well as ones which could have in a wrong way affected my entire career if I hadn’t encountered your blog post. Your main know-how and kindness in touching all things was tremendous. I don’t know what I would have done if I hadn’t encountered such a step like this. It’s possible to now look forward to my future. Thanks so much for your high quality and results-oriented guide. I will not hesitate to propose the blog to anybody who requires recommendations on this area.

  2. Normally I do not read article on blogs, but I wish to say that this write-up very forced me to try and do it! Your writing style has been amazed me. Thanks, quite nice article.

  3. I am now not positive the place you are getting your info, but great topic. I needs to spend a while finding out more or working out more. Thanks for fantastic info I used to be looking for this info for my mission.

  4. What is Alpha Tonic? Alpha Tonic stands as a natural health supplement designed to comprehensively address men’s overall well-being.

  5. magnificent points altogether, you simply gained a emblem new reader. What may you suggest about your post that you simply made a few days in the past? Any certain?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *