நேர் கொண்ட பார்வை
- by admin
- 26
என்னைப் பார்த்துக்கொண்டே
எவ்வளவுதான்
தள்ளித் தள்ளிப் போவாய்?
பின்புறமாக நடக்காதே
உன் காலடியில்
மலைச்சரிவொன்று
இருக்கக்கூடும்
என்னைவிட்டு எவ்வளவு
விலகிச் சென்றாலும்
ஏன் இந்த தூரம்
அதிகரிக்கவேயில்லை
என்றுனக்கு
குழப்பமாக இருக்கிறது
உன்னைத்தொடரும்
நட்சத்திரத்தின்
பார்வையிலிருந்து
நீ விலக வேண்டும் எனில்
இந்தப் பிரபஞ்சத்திலிருந்து
நீ வெளியேற வேண்டும்
அல்லது அந்த நட்சத்திரம்
எரிந்து விழும்வரை
காத்திருக்க வேண்டும்
அதுவரை இந்த இரவில்
இன்னுமொரு மைல்தூரம்
என்னைவிட்டு விலகிப்போ!
மனுஷ்ய புத்திரன்
என்னைப் பார்த்துக்கொண்டே எவ்வளவுதான் தள்ளித் தள்ளிப் போவாய்? பின்புறமாக நடக்காதே உன் காலடியில் மலைச்சரிவொன்று இருக்கக்கூடும் என்னைவிட்டு எவ்வளவு விலகிச் சென்றாலும் ஏன் இந்த தூரம் அதிகரிக்கவேயில்லை என்றுனக்கு குழப்பமாக இருக்கிறது உன்னைத்தொடரும் நட்சத்திரத்தின்…

Saved as a favorite, I really like your blog!
Hello. excellent job. I did not anticipate this. This is a impressive story. Thanks!