அல்-குர்ஆன், அறிவியல் பார்வையில் திசைகாட்டி

  • 13

குர்ஆன் பேசும்  வரைபடங்களில் பயன்படுத்தும் திசைகளின் குறிப்பு பற்றி அறிவீர்களா முதலில் சில அடிப்படைகளை பகிர்ந்த பின் குர்ஆன் திசை பற்றி பேசும் அறிவியலை பார்ப்போம்.

திசை:

ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு நகரக்கூடிய போக்கு திசை என்று பெயர்.

திசைகாட்டி:

திசையை அறியப்பயன்படும் காந்தக்கருவி. திசையைக் காட்டிய முதன்முதலில் எடுத்துக் குறிப்பிட்டவர் அலெக்சாண்டர் நெக்காம் என்ற துறவியாவார்.

திசைக்காட்டியின் வகைகள்
  1. நிலத்திசைக்காட்டி
  2. கடல் திசைக்காட்டி
  3. வானூர்தி திசைக்காட்டி
  4. காம்பஸ்
நிலத்திசைக்காட்டி

கையடக்கமான திசைக்காட்டி. இந்த திசைக்காட்டியை சாரனர், நில ஆய்வாளர், காநல்நடைப்பயணம் மேற்கொள்வோர் ஆகிய அனைவரும் பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு முக்காலியின் மீது சரிவு கோணத்தை அளக்க ஏற்றவாறு ஒரு தொலைநோக்கியும் பொருத்தப்பட்டிருக்கும். இக்கருவி சமதள நில அளவீட்டு ஆய்வுக்காக பயன்படுகிறது.

கடல் திசைக்காட்டி

கடற் பயணங்களின்போது கப்பல் செல்லும் கடல் திசையை அறிய இந்த கடல் திசைக்காட்டி பயன்படுகிறது. இது தானாக மட்டத்தைச் சரிபடுத்திக் கொள்ளும் அமைப்புடையது. எடையற்ற வட்ட அட்டையில் 360 டிகிரி கோண குறியீடுகள், காந்த குறிமுள்ளின் கீழே பொருத்தப்பட்டிருக்கும்.

வானூர்தி திசைக்காட்டி

விமானத் திசைக்காட்டியல் வட்டத்தகட்டு அடைக்குப் பதிலாக உருளை வடிவ அட்டையின் வெளிப் பரப்பில் கோணங்கள் குறிக்கப்பட்டிருக்கும். நீர்மம், நிரப்பப்பட்ட பெட்டியிலுள்ள அளவுகோள் ஒரு கண்ணாடி ஜன்னல். முன் பொருத்தப்பட்டிருக்கும் இத்திசைக் காட்டியில் ஏற்படும் குறைகளைத் தவிர்க்க இது மின் கருவிகளிலிருந்து தொலைவில் பொருத்தப்பட்டிருக்கும். 12ம் நூற்றாண்டு திசைக்காட்டி வட்ட அளவுகோலில் பிரிக்கப்பட்டிருந்தது. எட்டு சம பாகங்களாகவும், அவை ஒவ்வொன்றும் 1 பாகை இடைவெளியில் நான்கு சம பிரிவுகளாக பிரிக்கப்பட்ட திசை காட்டிகளாக இருந்தன.

காம்பஸ்

காம்பஸ் என்பது ஒரு திசைகாட்டும் கருவி. இதில் காந்த ஊசிகள் பொருத்தப்பட்டிருக்கும். காந்த ஊசியை எப்படித் திருப்பி வைத்தாலும் அதன் முனைகள் வடக்கு, தெற்கு நோக்கியே இருக்கும்.

  1. 11ம் நூற்றாண்டில் இது கடலோட்டிகளுக்குத் திசைக் காட்டப் பயன்படுத்தப்பட்டது.
  2. ஊசியின் முனை தெற்கு நோக்கிக் காட்டும்.
  3. 12ம் நூற்றாண்டில் பாலஸ்தீனம் வந்த கார்டினல் காம்பஸ் இந்தியாவிலிருந்து வந்தது என்றார்.
  4. சீனர்கள் காம்பஸை மேஜிக் செய்வதற்காக பயன்படுத்தினார்கள்.
  5. அரேபியர்கள் கப்பலுக்கு திசைக்காட்டும் கருவியாக பயன்படுத்தினர்.
  6. காம்பஸ் முனைகளில் காந்தம் இருப்பதால் வடக்கு தெற்காக திசை காட்டுகிறது. இதற்கு காரணம் பூமியின் ஒரு காந்தம் போல இருப்பதால்தான்,காந்தத்தின் அச்சும் பூமி சுழம் அச்சும் ஒரே திசையில் உள்ளது.

(மேற்கோள் நூல்கள்: விஞ்ஞானத் தேடல்கள், அறிவியல் களஞ்சியம்)

பல வகையான பண்டைய திசை குறிப்புகள் இருப்பினும் பண்டைய திசைகளை குறிக்கும் குறிப்புகள் அனைத்தும் இன்று பயன்படுத்துவதில்லை. இன்று எல்லா வரைபடங்களும் ஒரே திசை குறியீட்டை பயன்படுத்துகின்றன.

மேலே வடக்கு, வலது கிழக்கு, இடது மேற்கு மற்றும் கீழே தெற்கு. இதன் பொருள் நீங்கள் நிற்கிறீர்கள் என்றால் சூரியன் உங்கள் வலது புறமாக  உதித்து, சூரியன் உங்கள் இடது புறமாக மறைவதற்கு அடைந்தால், நீங்கள் வடக்கை எதிர்கொள்கிறீர்கள், உங்களுக்கு பின்னால் தெற்கு இருக்கிறது. (காந்த புலத்தை கொண்டு அளவிட்டாலும் இதே குறிப்புகளே பெறப்படும்.)

வரைபடங்களில் பயன்படுத்தப்படும் இதே திசை காட்டித் திசைக் குறிப்பு செய்தி 1400 ஆண்டுகளுக்கு முன்பு  குர்ஆனில் பேசப்படுகிறது என்றால் நம்புவீர்களா? ஆம்

وَتَرَى الشَّمْسَ اِذَا طَلَعَتْ تَّزٰوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِيْنِ وَاِذَا غَرَبَتْ تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِىْ فَجْوَةٍ مِّنْهُ‌  ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ‌  مَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ‌ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهٗ وَلِيًّا مُّرْشِدًا‏

(நீர் குகையில் அவர்களைப் பார்த்தால்) சூரியன் உதயமாகும்போது அவர்களின் குகையைவிட்டு விலகி வலப்பக்கமாக உயர்வதையும் அது மறையும்போது அவர்களை விட்டுக் கடந்து இடப்பக்கமாகத் தாழ்வதையும் காண்பீர்; ஆனால், அவர்களோ குகையினுள் ஒரு விசாலமான இடத்தில் இருப்பார்கள். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாரை அல்லாஹ் நெறிபிறழச் செய்கின்றானோ அவருக்கு உதவி புரிந்து வழிகாட்டுபவரை ஒருபோதும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் : 18:17)

“அதாவது சூரியன் உங்கள் வலப்புறம் உதயமாகி, உங்கள் இடது புறத்தில் சூரியன் மறைந்தால்” நிச்சயமாக நீங்கள் வடக்கை எதிர்கொள்கிறீர்கள், உங்களுக்கு பின்னால் தெற்கு இருக்கிறது. இன்று எல்லா வரைபடங்களிலும் பயன்படுத்தப்படும் அதே குறிப்பீடு இதுதான். ஒரு இடத்தின் இருப்பை குறிக்க நவீனத்தில் வரைபடங்களில் பயன்படுத்தும் திசைக்குறிப்பை வேதம் பதிவு செய்திருக்கிறது. இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும்.

1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு உம்மி மனிதர் இன்று திசைகளுக்கு நாம் பயன்படுத்தும் திசைக்குறிப்பை  எப்படி அன்று அறிந்து கொண்டு பயன்படுத்தி இருக்க முடியும்.? ஆக இது எல்லாம் அறிந்த இறைவேதமன்றி வேறில்லை.

وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ يُّفْتَـرٰى مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏

இந்தக் குர்ஆன் அல்லாஹ்(வின் வஹியே தவிர அவன்) அல்லாதவர்களால் புனைந்துரைக்கப்பட்டதன்று; உண்மையில் இது தனக்கு முன்னால் வந்துள்ள வேதங்களை மெய்ப்படுத்தக் கூடியதாகவும், ‘அல் கிதாபின்’ விளக்கமாகவும் திகழ்கின்றது. இது அகிலங்களின் அதிபதியிடமிருந்து வந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. (அல்குர்ஆன் : 10:37)

உசாத்துணை/ மேலும் கற்க
  1. குர்ஆன்
  2. https://en.m.wikipedia.org/wiki/History_of_the_compass
  3. https://all-free-download.com/free-vector/old-maps-and-compass.html
  4. https://www.rei.com/learn/expert-advice/navigation-basics.html
  5. https://www.nationalgeographic.org/encyclopedia/compass/
MUM. Faris (BSc)
oddamavadi

குர்ஆன் பேசும்  வரைபடங்களில் பயன்படுத்தும் திசைகளின் குறிப்பு பற்றி அறிவீர்களா முதலில் சில அடிப்படைகளை பகிர்ந்த பின் குர்ஆன் திசை பற்றி பேசும் அறிவியலை பார்ப்போம். திசை: ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு நகரக்கூடிய…

குர்ஆன் பேசும்  வரைபடங்களில் பயன்படுத்தும் திசைகளின் குறிப்பு பற்றி அறிவீர்களா முதலில் சில அடிப்படைகளை பகிர்ந்த பின் குர்ஆன் திசை பற்றி பேசும் அறிவியலை பார்ப்போம். திசை: ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு நகரக்கூடிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *