கேப்டன் குக்குடைய பரம்பரை கனவு

  • 18

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 11】

மாரியாவுக்கு ஏதோ ஒன்று தவறாக நடப்பதாகவே தோன்றியது. நிக்கலஸிடம் அதைப்பற்றி சொன்னாள்.

“எனக்கு ஏதோ தப்பாவே தோணுதுங்க, நம்ம பொண்ணு வேற கண்காணா எடத்துல வேலைபார்த்துகிட்டு இருக்கா. இந்த நேரம் பார்த்து அப்பா இறந்து போய்ட்டார். அவருக்கு ஐரிஸ் மேல அவ்வளவு அன்புங்க. எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல்ல.” என்றாள்.

அப்போது தான் கப்பல் தீவில் இருந்து புறப்பட ஆரம்பித்தது. கேப்டன் குக் தனது பழைய தோரணையில் அவர்களிடம் வந்தான். கூடவே அவன் முன்னர் பிடித்து வைத்திருந்த குடும்பத்தையும் அவனது ஆட்களை கொண்டு இழுத்து வரவைத்தான். புரூஸிலும் அவரின் குடும்பத்தினரும் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் கேப்டன் குக் பின்னாடி இழுத்து வரப்பட்டதை பார்த்து மாரியாவும், நிக்கலஸும் அதிர்ச்சி அடைந்தனர்.

“என்ன என்ன நடக்குது இங்கே. யார் நீங்க?” என்று மாரியா எழுந்து கேட்டாள்.

“நீ கொஞ்சம் ஆவேசப்படாம நான் சொல்றதை கேளு!” என்றான் குக்.

“ஆமா ஐயா சொல்லுறத்தை கேளு” என்றான் கூட இருந்தவன்.

“உண்மையை சொல்லுங்க. எதுக்காக எங்களை கூட்டிட்டு போறீங்க. அப்படின்னா இவளோட அப்பா இறந்துட்டார் என்று சொன்னது பொய்யா?”என்று ஆவேசப்பட்டான் நிக்கலஸ்.

“இல்ல இல்ல. அது ஒன்னும் பொய் கிடையாது. உண்மையிலேயே உங்க அப்பா பர்மீஸ் இறந்துட்டாரு. ஆனா அதுல ஒரு சின்ன திருத்தம் அவர் ஒன்னும் மாரடைப்பால் சாகல்ல. நான் தான் அவரை கொன்னுட்டேன்.” என்றதும் இருவரும் ஒரு கணம் விக்கித்து விறைத்து போய் நின்றார்கள்.

“நீ என்னோட அப்பாவை கொன்னுட்டியா?” என்று கத்திகொண்டே மாரியா கேப்டன் குக்கின் சட்டைக்காளரை பிடித்து இழுக்க பளார் என்று அவள் கன்னத்தில் அறைந்தான் குக்.

“மாரியா! ஏய் உன்னை.” என்று அவனை அடிக்க சென்ற நிக்கலசை சிப்பாய்கள் இருவர் பின்னாடி வந்து பிடித்து கொண்டனர். கீழே விழுந்த மாரியா உதட்டில் ரத்தம் சொட்ட சொட்ட எழுந்து நின்றாள்.

“என்னை மன்னிச்சிடுமா என்னையும் என்னோட குடும்பத்தையும் கத்தி முனையில் வெச்சு தான் நீ இருக்குற இடத்தை தெரிஞ்சி கிட்டாங்க. இவங்க கேக்குற அந்த உண்மையை சொல்லிடுமா. இல்லேன்னா நம்ம யாரையும் இவனுங்க சும்மா விடமாட்டாங்க.” என்று பிடிப்பட்டவன் அழுதான்.

“ஒழுங்கு மரியாதையாக உங்க வம்சாவளி பரம்பரை பரம்பரையாக மறைச்சிட்டு வார டோரடோ தீவு இருக்குற இடத்தை சொல்லிடீங்க என்றாள். உங்க எல்லோரையும் விட்டுடுவேன்.” என்றான்.

“என்னது? நீ எங்களை கொன்றாலும் அந்த ரகசியத்தை மட்டும் எங்க கிட்ட இருந்து உன்னால வாங்கவே முடியாது.” என்றாள் மாரியா.

“இப்படியே சொல்லி சொல்லி தான் உங்க அப்பாவை கொன்னுட்டேன். இப்போ நீ. உன்னை கொன்னுட்டு போறதில எனக்கு ஒன்னும் லாபம் கிடையாது. ஆனா உனக்கு ஒரு பொண்ணு இருக்கிறதா கேள்விப்பட்டேன் உண்மையா?” என்று குரூரமாக கேட்டான்.

அதிர்ச்சி அடைந்த மாரியாவும் நிக்கலஸும் கேப்டன் குக் எப்படி அவர்களது மகள் பற்றி அறிந்தான் என்று குழம்பி போனார்கள். கேப்டன் குக்கிற்கு ஒருவிஷயம் நன்றாக தெரியும். அவன் அறிந்த கேட்ட படித்த விடயங்கள் மீது அவனுக்கு அலாதியான நம்பிக்கை இருந்தது.

“கடற்கொள்ளையர்களாக ஒரு காலத்தில் வாழ்ந்து அத்தொழிலை விட்டு விட்டு நாடேறி வாழ்ந்த மக்கள் தங்கள் பூர்வீக குடியை மறக்காமல் இருக்க ஒவ்வொரு சந்ததியினரும் அந்த அடையாளத்தை உடலில் பச்சை குத்தி கொள்வார்கள். அதே சமயம் டோரடோ என்னும் மறைந்துள்ள தீவில் அவர்கள் வாழ்நாள் பூராக கொள்ளையடித்த அனைத்தையும் பதுக்கி வைத்திருப்பதாகவும் கடல் தேவதை அதற்கு காவல் இருப்பதாகவும். அதை உரிய வம்சத்தினர் இன்றி அடைய நினைப்பவர்கள் யாரும் உயிரோடு இருந்ததில்லை” என்ற விடயத்தில் ஊறிப்போய் இருந்தான். கேப்டன் குக்குடைய மொத்த பரம்பரைத் தலைவர்களும் இப்புதையலுக்காக தமது உயிரை தியாகம் செய்துள்ளனர்.

தன் வம்சத்தில் எல்லோரது கனவாகவே இருக்கும் டோரடோ புதையலை அடைவதே அவனது வாழ்நாள் அவா என உறுதி பூண்டான். அதற்காக எந்த எல்லை வரை செல்லவும் தயாராக இருக்கிறான்.

தொடரும்
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 11】 மாரியாவுக்கு ஏதோ ஒன்று தவறாக நடப்பதாகவே தோன்றியது. நிக்கலஸிடம் அதைப்பற்றி சொன்னாள். “எனக்கு ஏதோ தப்பாவே தோணுதுங்க, நம்ம பொண்ணு வேற கண்காணா…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 11】 மாரியாவுக்கு ஏதோ ஒன்று தவறாக நடப்பதாகவே தோன்றியது. நிக்கலஸிடம் அதைப்பற்றி சொன்னாள். “எனக்கு ஏதோ தப்பாவே தோணுதுங்க, நம்ம பொண்ணு வேற கண்காணா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *