சிந்தனைக்குள் சிதறியவைகள்

  • 33
  • மரணம் மிகுந்த அச்சத்திற்குரியது. ஆனால் அதுவே அல்லாஹ்விற்காக அனைத்தையும் துறந்து, அவனுடைய அருளை மாத்திரமே வேண்டி நின்றவர்களை நோக்குமிடத்து மரணமும் மகிழ்விற்குரியது.
  • இறை நினைவும் அதில் திழைத்து மகிழ்வதும் கூட அல்லாஹ் அவன் அளித்த அருட்பெரும் பாக்கியமாகும். இறைவனுடன் அதிக நேரத்தை கடத்திப் பாருங்கள். அதனூடாக இறைநெறி தவறாது இனிமையுடன் வாழ்வீர்கள். இதுவே உண்மையும் கூட அனுபவித்தால் உலகில் எம்மை விட திருப்தியுடனும் வெற்றியுடனும் வாழ்பவர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.
  • அல்லாஹ்வை மாத்திரம் சார்ந்து, அவனுக்காகவே அனைத்தையும் முன்னிறுத்தி, அவனுடைய அருளுக்காகவே ஏங்கித் தவித்து, மனம் போன போக்கில் வாழாது மனசாட்சியுடன் வாழ நினைக்குமிடத்து உலக மானிடரிடத்து ஏது அச்சம். அல்லாஹ்வுக்காக எனும் போது வேறு எவற்றினதும் எதிர்புகளுக்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை.
  • காலம் மாறும். கயவர்களின் கொடூரம் ஓயும். அல்லாஹ் உண்மையின் புறம் இருக்கிறான். அவனிருக்க அச்சம் எதற்கு. எம் உள்ளங்களை அவனே ஒளிரச்செய்பவன். ஒரு போதும் கைவிட மாட்டான்.
  • எத்தனை பெரிய மா வீரனாக இருந்தாலும் அவனை வீழ்த்தி கண்ணீர் மல்க வைக்கும் தருணம் எது தெரியுமா? ஒருயிராய் உறவாடி துரோகம் இழைப்பது தான். போர் வீரனாயினும் அன்பினில் குழந்தையானால் அவனை வெல்லும் ஆயுதம் அதுவே.
  • வரலாற்றைப் புரட்டிப் பார்க்கிறேன். எத்தனை வீரமிக்க மா வீரர்கள். சத்தியத்திற்காக உயிரையே துறந்து அர்ப்பணித்தவர்கள் தன்னை மறந்து சமூகத்திற்காக குரல் கொடுத்தவர்கள். உண்மையான கதாநாயகர்கள் இத்தகையோரை மறந்த உலகம் தான் சினிமா என்ற வலைக்குள் சிக்கி ரசிகன் என்ற பெயரில் மாய ரசனைகளை மென்று மயக்கமுற்றுக் கிடக்கின்றனர். இறைவனை அஞ்சிக் கொள்வோம்.
  • தனிமை போற்றுதற்குரியது. இறை நினைவுதனில் உள்ளம் நிலைத்திருக்கும் போது.
  • நிறைவான வணக்கங்கள் வாழ்விற்குத் தகுந்த அழகான தருணங்களை இறைகாதலோடு மேன்மேலும் மெரூகூட்டும்.
  • இறைவனை சார்ந்ததாக உன் அன்றாட அலுவல்களை மாற்றிக் கொள்வாயானால் நீ கடந்து போகும் திசைகள் அச்சம் மிகுந்ததாயினும் இலகுவான முறையில் இடரின்றியே இறைவன் அருள்கள் பலவற்றை எதிர்பாராத புரத்திலிருந்து வழங்கி விடுவான்.
  • இறைவனின் புறத்தினின்றும் எம்மை தூரமாக்கும் எண்ணங்களையும்,செயல்களையும் விட்டும் தவிர்ந்து கொள்வோம். அதுவே நம்மில் பலரது பாவங்களை குறைத்து விடும்.
அப்துல் வாஹித் பாதிமா முனீரா.
சில்மியா புர.

மரணம் மிகுந்த அச்சத்திற்குரியது. ஆனால் அதுவே அல்லாஹ்விற்காக அனைத்தையும் துறந்து, அவனுடைய அருளை மாத்திரமே வேண்டி நின்றவர்களை நோக்குமிடத்து மரணமும் மகிழ்விற்குரியது. இறை நினைவும் அதில் திழைத்து மகிழ்வதும் கூட அல்லாஹ் அவன் அளித்த…

மரணம் மிகுந்த அச்சத்திற்குரியது. ஆனால் அதுவே அல்லாஹ்விற்காக அனைத்தையும் துறந்து, அவனுடைய அருளை மாத்திரமே வேண்டி நின்றவர்களை நோக்குமிடத்து மரணமும் மகிழ்விற்குரியது. இறை நினைவும் அதில் திழைத்து மகிழ்வதும் கூட அல்லாஹ் அவன் அளித்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *