கற்பனை உலகில் ரஞ்சித்

  • 10

யார் நீ
காட்சி :-06
களம் :- ரஞ்சித்தின் வீடு
கதாபாத்திரங்கள் :- (ரோஷன், ரஞ்சித், உயர் பொலிஸ் அதிகாரி, செல்லய்யா சாஜன்)

(டயரி ரோஷனின் கையில் கிடைத்தவுடன் ரஞ்சித், ரோஷன் இருவரும் அதனைப் படித்து விட்டு பத்திரத்தை எடுத்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தனர். உலகையே ஏமாற்றி வந்த ரஞ்சித்திற்கு இறுதி தருணத்தில் ஏமாற்றத்தை வழங்க இறைவன் ஒரு நபரை அருகிலே வைத்தே இருந்தான்.)

(ரோஷன் இரவில் ரஞ்சித் வருவதற்கு முன்பாகவே அவனது வீட்டிற்கு வந்து விட்டான். இனி நடக்கிறது என பார்ப்போம்.)

செல்லய்யா :- சார்! கதவ தெறந்துட்டன் சார்! வாங்க வீட்டுக்குள்ள போகலாம்.

ரோஷன் :- ஓகே செல்லய்யா மெல்லமாக பேசுங்க யாருக்காவது கேட்றபோவுது.

செல்லய்யா :- சரிங்க சார். நாம இப்ப எந்த பக்கமா போவனும் சார்?

ரோஷன் :- வெயிட் செல்லய்யா. நான் சொல்றன். பஸ்டு வீட்ட சுத்தி ஒரு தடவ பாத்துட்டு வந்துடுறன்.

செல்லய்யா :- சரிங்க சார்! பத்துரமா போன் டார்ச்ச ஓன் பண்ணிகிங்க.

ரோஷன் :- பயப்படாதீங்க செல்லய்யா எனக்கு ஒன்னும் ஆகாது. இங்கயே இருங்க எங்கயும் போவாதிங்க.

ரோஷன் :- செல்லய்யா வாங்க என் பின்னாலேயே வாங்க.

செல்லய்யா :- லைட் கொஞ்சம் போட்டு விடவா சார்?

ரோஷன்:- வேனாம் செல்லய்யா. வெளிச்சம் ஏதாச்சும் வெளில வெளங்கிச்சின்னா அவனுக்கு யாராச்சும் சொல்லிருவானுங்க நீங்க அப்படியே கீழ இறங்குங்க.

செல்லய்யா :- சார் இங்க ரெண்டு வழியிருக்கே. இது என்ன சார் இது இடது பக்கத்துல இருட்டா சொரங்கம் மாதிரி ஒரு வழி இருக்கு?

ரோஷன் :- அதே வழி தா! அதே வழி தா! அப்படியே எறங்கி போங்க. பத்துரம் செல்லய்யா!

செல்லய்யா :- இப்ப என்ன சார் பண்ணனும்? சொல்லுங்க.

ரோஷன் :- செல்லய்யா இங்க இருக்குற லாச்சு, பாக்ஸ், கபோர்ட் எல்லாத்துலயும் வீட்டு பத்திரம் மத்தது என்ன சொத்து பத்திரத்தோட ஒரிஜினல் இன்னொன்னு காபி இருக்கான்னு பாருங்க. நேரம் கொஞ்சமா தான் இருக்கு சீக்கிரம் சீக்கிரம்.

செல்லய்யா :- சரிங்க சார். இதோ ஆரம்பிக்கிறேன்.

(நேரம் நகர்ந்து கொண்டே செல்கிறது. இன்னும் பத்திரம் கையில் சிக்கவில்லை. இந்த நேரம் பார்த்து ரோஷனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.)

செல்லய்யா :- சார் சீக்கிரமா எட்டன்ட் பண்ணுக சார். வெளில கேட்டுற போவது!

ரோஷன் :- ஹலோ ரஞ்சித் சொல்லு மச்சா!

ரஞ்சித்:- மச்சா நீ எங்க இருக்க? ஸ்டேஷன்லயா? நீ வருவல்ல இன்னக்கி?

ரோஷன் :- மச்சா நா இங்க ஸ்டேஷன்ல முக்கியமான வேலைல இருக்கே. கண்டிப்பா வர்ரே மச்சா.

ரஞ்சித்:- சரி மச்சா நீ வேலய கவனி.

ரோஷன்:- அப்டி இல்லன்னா மச்சான் அந்த மேடர யென் கிட்டயே விட்ரு நா பார்த்துக்கிறேன். ஒனக்கு விருப்பம்னா பண்றேன்.

ரஞ்சித்:- ரொம்ப டேன்க்ஸ் மச்சா! நீ வர்ர வழில தா வீடிருக்கு. வீட்டு தெரப்பு கூட உன் கிட்ட தா இருக்கு. அத எடுத்து வச்சிக்க மச்சான். அதோட அத ஒன்னோட வீட்ல பத்திரமா வெச்சிட்டு நா கூப்புடும் போது வாடா.

ரோஷன் :- சரி நண்பா! இப்ப நா என்னோட வேலய பாக்கலாமா?

ரஞ்சித்:- ஒ கே டா. பாய்.

ரோஷன்:- அப்பா இப்ப சரி வெச்சு தொலஞ்சானே.

செல்லய்யா :- சார் இங்க கொஞ்சம் டார்ச் புடிங்க. இங்க ஏதோ பெரிய மரப் பெட்டி ஒன்னு இருக்குர மாறில்ல இருக்கு.

ரோஷன் :- ஒகே செல்லய்யா இதோ வர்ரேன். அட கண்டிப்பா இதுல தா அது இருக்கும் பட் இத எப்படி தெரக்கிறது?

செல்லய்யா:- ஆனா சார் இந்த பொட்டிக்கு பூட்டுபோட்டிருக்கு. தெரக்க்றதுக்கு சாவி எங்க தேடுறது? என்ன சரி பாரமான பொருள் இருக்குதா?

ரோஷன் :- ரஞ்சித் வந்தானுன்னா அவனுக்கு முன்னாடி இங்க யாரோ வந்திருகாங்கன்னு புரிஞ்சிடும். சோ தேடி பாக்கலாம் சாவி கெடக்கிதான்னு.

செல்லய்யா :- அந்த லாச்சு ஒரு தெரப்பு இருந்த மாதிரி ஞாபகம். இன்னும் ஒரு தடவ பாக்கவா சார்?

ரோஷன் :- இததான் நீ சொல்லிருக்கனும் வா தெறந்து பாக்கலாம்!

ரோஷன் :- சரி சார் முயற்சி பண்ணி பாக்கலாம்.

ரோஷன் :- செல்லய்யா ஸக்ஸஸ். பெட்டிய தெரந்தாச்சு.

ஆஆஆ செல்லய்யா கால்ல என்னமோ குத்திரிச்சி!

செல்லய்யா :- சார் என்னாச்சு? ரெத்தம் வேர வருது. இருங்க கட்டு போட்டு விட்றே சார் ரெத்ததயும் தொடச்சிட்டே.

ரோஷன் :- டேன்க்ஸ் செல்லய்யா! நீங்க வேலய கவனிங்க.

அம்மா வலிக்குது. வெய்ட் தேவா டயிரில ரெட் கலர் அப்டின்னு எழுதியிருக்காரு. செல்லய்யா இதுல ரெட் கலர் பைல் என்ன மாச்சும் இருக்கான்னு பாருங்க!

செல்லய்யா :- சார் எல்லாமே தூசி படிஞ்சி, ஒற்ற புடிச்சி போய் இருக்கே. எப்படி நான் பாக்குறது? சார் இந்தா இருக்கு செகப்பு கலரு பைலு ஒன்னு.

ரோஷன் :- எங்க பாப்பம் கொடுங்க R. தேவா மகேந்திரன். ஆகா ஆகா. இதே தான் பத்துரம் இது தான். வேற என்ன இருக்கு??

செல்லய்யா :- ஏதோ பேக் ஒன்னு இருக்கு சார்! பணம், இல்லன்னா நகைனு நெனக்கிறேன்.

ரோஷன் :- எங்க பாக்கலாம். அடடா இவ்வளவு நகயா? கொஞ்சம் பணமும் வேற? இதனால தா அவன் பேராச பட்டானா? ஓ கே எல்லாத்தயும் மாத்தி வெச்சிடுங்க செல்லய்யா.

செல்லய்யா :- சார் ஒங்களோட கூலிங்கிளாஸ் மாட்டிக்கவா போறிங்க! வாங்க சார் எல்லாம் ஓகே. இப்ப நாம போகலாம்.

ரோஷன் :- டேன்க்ஸ் செல்லய்யா. வாங்க போகலாம். என்ற போல எதயும் வச்சிட்டு வந்திங்களா?

***************************

ரோஷன் :- சார்.. ஹலோ நான் ரோஷன். வேல முடிஞ்சிரிச்சி! இப்ப நா என்ன பண்ணணும் சார்??

உயர் பொலிஸ் அதிகாரி :- சூப்பர் நீங்க அத ஒங்க கிட்ட பத்தரமா வச்சிகிங்க. பஸ்ட்டு ஒடனடியா அங்க இருந்து வெளிய வந்துடுங்க. பொருள் எல்லாம் பத்தரம் ரோஷன். என்ட் நாளக்கி நம்ம ரஞ்சித்தோட ஆபிஸ் ல மீட் பண்ணலாம். ஓ கே.

ரோஷன் :- ஓகே சார் டேன்க் யூ.

செல்லய்யா:-  சார் நாங்க போகலாமா?

ரோஷன் : – ஆமா போகலாம் சீக்கிரமா போங்க நா மறுபடியும் இங்க வரனும். ஜாக்கிரதை…

(இதற்கிடையே ரோஷனின் கைத்தொலைபேசி கூச்சலிடுகிறது.)

ரோஷன் :- டேய் சொல்லு நண்பா.

ரஞ்சித்:- என்ன இன்னும் அங்கயா?

ரோஷன் :- இல்லப்பா நா அப்பவே நீ சொன்ன வேலய செஞ்சிட்டு வீட்டுக்கு வந்துட்ட. பயப்படாதடா அதெல்லாம் பத்தரமா தா இருக்கு. வீட்டு சாவி என்கிட்ட இருக்கு இப்ப அத தர வரனும்.

ரஞ்சித்:- டேய் என்ன மச்சான் நா அப்டி நெனப்பனா? நான் இப்ப ஆபிஸ் ல இருந்து கெழம்ப போறேன். நீயும் வந்துடு. டேய் மேடர் கவனம்டா.

ரோஷன் :– ஹேய் ஹேய் கூல் டா தங்கம் அத நான் பார்த்துக்கிறேன்.


ரோஷன் :- அட செல்லய்யா நீங்க இன்னும் போவ இல்லயா? சீக்கிரம் வாங்க.

செல்லய்யா :- ஒங்கள எப்படி சார் தனியா பத்துரம் சார்.

ரோஷன் :- ஓகே நான் பார்த்துக்கிறேன்.

(ரோஷன் தனது வீட்டில் பத்திரம் மற்றும் பொருட்களை வைத்து விட்டு பின்பு மீண்டும் ரஞ்சித்தின் வீட்டை அடைகிறான். அவனுக்கு தெரியாமலே வீடு முழுவதையும் ஒரு தடவை பார்த்துக் கொள்கிறான்.)

ரஞ்சித்:- நண்பா நாளயோட நான் நெனச்சதெல்லாம் நடக்க போவுது நாளோட நான் பணக்காரன் தான்..

ரோஷன் :- அப்ப இப்போ மட்டும் என்னடா?

ரஞ்சித்:- இப்ப என்னடா அவனோட பேன்க்ல உள்ள பணத்துல மட்டும் இவ்ளோ செலவு பண்றேன். நாளக்கி மொத்த சொத்தே எனக்கு கெடக்க பொவுது!

ரோஷன் :- நாளயோட நீ வாழப்போற வாழ்க்கையே வேர. அப்பறமா என்ன பாப்பாயானு கூட தெரியாது. டேய் விட்றாதடா!

ரஞ்சித்:- நான் எப்பவும் உன்னோட தான் டா. கௌஷலல்யா ஒரு மக்கு மாப்புள மாப்புளனு கிட்டு. அந்த டாக்டர் தேவராம் செத்துனு சொன்னதுல இருந்து என் மேல நக்கிட்டு கெடந்தான்.

எப்டி மச்சான் நீ எடைல வந்த. ஒன்னோட துட்டும் தான் டா. என்ன உச்சமெ தொட வச்சிருக்கு. ஒன்ன! என்ன சொல்றது ரொம்ப டேன்க்ஸ் நண்பா! ஒன்ன மறக்கவே மாட்டேன்.

ரோஷன் :- (எதையுமே பொர்ட்படுத்தாது போலவே) அது எல்லாம் எதுக்குடா? வா சாப்புடலாம்.

(இவ்வாறு ரஞ்சித் கற்பனை உலகில் கோட்டை கட்டிக் கோபுரம் எழுப்பிய வண்ணம் இருக்க ரோஷன் நாளைய தினத்தில் தேவா பற்றிய உண்மைகளை உலகுக்கு தெரியப்படுத்த தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தான். இன்னும் ரஞ்சித்தின் நாளைய நிலையை திட்டம் தீட்டி முடித்து கொண்டான்.)

(நாளை உண்மையாகவே தேவா விடுதலை அடைவாரா? ரஞ்சித்தின் வேஷம் உலகுக்கு வெளிவருமா? ரோஷனின் உண்மை வடிவம் சிக்கியிருக்கும் அந்த வேட்டைக்காரர்களுக்கு தெரிய வருமா? பதில்களை எதிர்பாருங்கள்.)

தொடரும்
Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka.

 

யார் நீ காட்சி :-06 களம் :- ரஞ்சித்தின் வீடு கதாபாத்திரங்கள் :- (ரோஷன், ரஞ்சித், உயர் பொலிஸ் அதிகாரி, செல்லய்யா சாஜன்) (டயரி ரோஷனின் கையில் கிடைத்தவுடன் ரஞ்சித், ரோஷன் இருவரும் அதனைப்…

யார் நீ காட்சி :-06 களம் :- ரஞ்சித்தின் வீடு கதாபாத்திரங்கள் :- (ரோஷன், ரஞ்சித், உயர் பொலிஸ் அதிகாரி, செல்லய்யா சாஜன்) (டயரி ரோஷனின் கையில் கிடைத்தவுடன் ரஞ்சித், ரோஷன் இருவரும் அதனைப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *