காத்திருந்தாள்

  • 7

கருவில் சுமந்தாள் தாய்
கருமம் என்றே சென்று விட்டாள்.
கருணையுடன் சீராட்ட,
கரங்கள் இன்றி காத்திருந்தாள்.

காலம் சட்டென சுழன்றடிக்க,
கல்வியூட்டும் பருவம் தான்
கல்லுடைத்து கரங்களும் கனத்தது.
கன்னியவள் ஆசைகள் துறந்து நின்றாள்.

கடைசிப் பருவம் தந்தைக்கும்
கிடத்தியது பாயில் பரிதாபமாய்
வறுமைப் பிடியில் அனாதையானவள்
பறந்தாள் சிட்டாக வெளிநாடு.

காலம் கடந்து மீண்டு வந்தாள்.
கல்யாணப் பேச்சும் பறையடிக்க,
கனவுகள் நெஞ்சில் கண்டவளாய்
கைப்பிடித்தாள் கணவனை துணையாக.

கடவுள் வைத்த விதியென்ன?
கல்வியில்லா மடமையுடன்
காலம் ஓட்டி தேய்ந்துவிட்டாள்.
கண்ணீர் விட்டு கல்லானது இதயம்.

”பிள்ளை”என்ற பெயருடனே
பெற்றாள் பெரும் செல்வங்களாய்
பொறுப்புக்கள் தலைமேல் ஏறிநிற்க,
பெற்றாள் தைரியத்தை தளராமல்.

காத்திருந்தாள் காலத்திற்காய்
கண்களும் வெளிச்சமதை நோக்கி நிற்க
கனவாழ்வை நொடிகளில் தகர்த்து
கண்மணி அவளும் இன்பக் காற்றை மூச்சுயிர்க்க

கல்லம், கபடம் ஏதுமில்லா
கல்வியுடன் வாழ்வை ஒளியேற்றி
கண்ணியமாய் செல்வங்களை செதுக்கி விட்டு
கண்ணயர்ந்தாள் கொஞ்சம் தளர்வாக,

காத்திருந்தாள் – கடமைகளை
கண்ணெதிரே வைத்து,
கண்ணயரும் போதெல்லாம் – ”என்
கண்மூடி மூச்சயர்வதற்குள்
கரையேற்றிட செல்வங்களை
காத்திருக்கிறாள் இன்றும்.

Rifka Marsook
SEUSL
deltota, Kandy

கருவில் சுமந்தாள் தாய் கருமம் என்றே சென்று விட்டாள். கருணையுடன் சீராட்ட, கரங்கள் இன்றி காத்திருந்தாள். காலம் சட்டென சுழன்றடிக்க, கல்வியூட்டும் பருவம் தான் கல்லுடைத்து கரங்களும் கனத்தது. கன்னியவள் ஆசைகள் துறந்து நின்றாள்.…

கருவில் சுமந்தாள் தாய் கருமம் என்றே சென்று விட்டாள். கருணையுடன் சீராட்ட, கரங்கள் இன்றி காத்திருந்தாள். காலம் சட்டென சுழன்றடிக்க, கல்வியூட்டும் பருவம் தான் கல்லுடைத்து கரங்களும் கனத்தது. கன்னியவள் ஆசைகள் துறந்து நின்றாள்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *