முஸ்லிம் பிரதிநிதித்துவம்

  • 18

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 09 நாட்களே உள்ள நிலையில் எல்லா எல்லா கட்சிகளும் மும்முரமாக பிரச்சார வேலைகளில் ஈடுபடடுக் கொண்டிருக்கின்றன. COVID 19 சவால்களையும் தாண்டி எவ்வாறாயினும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளர். இந்த வேளையில் முஸ்லிம்களாகிய எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பாக பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. கடந்த பாராளுமன்றத்தில் 21 உறுப்பினர்கள் SLMC, ACMC, UNP, SLFP ஆகிய கட்சிகளல் இருந்து தெரிவாகியவராகி இருந்தனர். இன விகிதாசார அடிப்படையில் சுமார் 22 உறுப்பினராகள் வேண்டும்.

இம்முறை தேர்தலில் வெற்றிவாய்ப்புகள் மாவட்ட அடிப்படையில்,

திகாமடுல்லை – 03
மட்டக்களப்பு – 02
திருகோணமலை – 02
வன்னி – 02
கண்டி – 02
கேகாலை- 01
கொழும்பு – 03
அநுராதபுரம் – 01
புத்தளம் – 01
குருநாகல் – 01

மொத்தமாக 18 உறுப்பினர்கள் வெற்றிபெற வாய்புகள் உள்ளது இது தவிர தேசிய பட்டியல் மூலமாக இரண்டு அல்லது மூன்று உறுப்பினரகள் நியமிக்கப்படலாம் எனவே 20 அல்லது 21 முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியும். கிழக்கு மாகாணத்தில் திகாமடுல்லை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் கொழும்பு, கண்டி, வன்னி, கேகாலை மாவட்டங்களிலும் உறுதியாக கூறமுடியும் அதேபோல் அநுராதபுர மாவட்டத்தில் கடந்த முறை மக்கள் ஒன்றுபட்டு தமது பிரதிநிதியை தேர்ந்தெடுத்தனர்.

இம்முறையும் அவ்வாறு ஒன்றுபட்டு வாக்களித்தல் நிச்சயமாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழுகின்றனர் ஒரு பிரதிநிதியை வெற்றிகொள்ள முடியும்.மக்கள் ஒன்றுபட வேண்டும்.

எனவே எந்தெந்த மாவட்டங்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளனவோ அங்கே எமது முஸ்லிம்கள் வியூகங்களை வகுத்து வாக்களிக்க வேண்டும். உதாரணமாக சில மாவட்டங்களில் மூன்றாவது தெரிவை தவிர்த்துக்கொள்வது எமது பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்யம்.

அதேபோல சில மாவட்டங்களில் மூன்று தெரிவையும் எம்மவருக்கு அளிப்பதன் மூலம் கொழும்பு, திகாமடுல்லை மாவட்டங்களில் மூன்று உறுப்பினர்கள் முறை பெற முடியும். இவ்வாறு சற்று சிந்தித்துசெயல்பட்டால் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும்.

நாச்சியாதீவு
எம். சஹ்ரின் அஹமட்

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 09 நாட்களே உள்ள நிலையில் எல்லா எல்லா கட்சிகளும் மும்முரமாக பிரச்சார வேலைகளில் ஈடுபடடுக் கொண்டிருக்கின்றன. COVID 19 சவால்களையும் தாண்டி எவ்வாறாயினும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல்…

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 09 நாட்களே உள்ள நிலையில் எல்லா எல்லா கட்சிகளும் மும்முரமாக பிரச்சார வேலைகளில் ஈடுபடடுக் கொண்டிருக்கின்றன. COVID 19 சவால்களையும் தாண்டி எவ்வாறாயினும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தல்…

One thought on “முஸ்லிம் பிரதிநிதித்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *