கறுப்புத் தொப்பி

  • 13

கிழிக்கப்பட்ட பக்கங்கள்
மனம் ஆறா வடுக்களாய்
நாடெங்கிலும் நாமம்
வேறாய் இனவாதம் வேரூன்றி

கண்கட்டிய நீதி தேவதை
முன் நீதியும் குருடனாய் போக
சட்டங்கள் சட்டைப் பைக்குள்
சத்தமின்றி நிற்க
பேனா முனையும்
ஆயுதத்தின் முன்னிலையில்
பேச வழியின்றியே போனாலும்
மனச்சாட்சிக் கூண்டில்
என்றாவது நின்றாகனும்!

கல்வியில் சமத்துவமென்பது
ஏட்டுப் படிப்புக்கு மட்டுமா?
மொழியில் சமவுரிமையென்பது
மேடைப் பேச்சிலேயே நிற்குமா?
மதத்தில் சுதந்திரமென்பது
மதம் பிடித்து நசுக்குமா..??
என்று மாறுமோ இன்றைய நிலை?
இனியும் தொடருமா இந்த கதை?

வளரும் தலைமுறை நாம்
உலகின் தலையெழுத்தை
கல்வியால் மாற்றியமைப்போம்!

Binth Muzammil
Beruwala

கிழிக்கப்பட்ட பக்கங்கள் மனம் ஆறா வடுக்களாய் நாடெங்கிலும் நாமம் வேறாய் இனவாதம் வேரூன்றி கண்கட்டிய நீதி தேவதை முன் நீதியும் குருடனாய் போக சட்டங்கள் சட்டைப் பைக்குள் சத்தமின்றி நிற்க பேனா முனையும் ஆயுதத்தின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *