பாராளுமன்றத் தேர்தல்

எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது நாட்டின் எமது இருப்பை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற பல்வேறு சிந்தனைகளையும் வழிக்காட்டுதல்களையும்எம் சமூகத்தில் சென்றடைய வேண்டும் என்பதே எனது அவா.

தேர்தல் பற்றிய விழிப்புணர்வுகள் அற்ற சமூகமாகவும் வாக்குகளை வீணடிக்கும் சமூகமாகவும் எமது இருப்பை கேள்விக்கு உட்படுத்த கூடிய ஒரு கட்டற்ற சமூகமாக நாம் மாறி விடக் கூடாது. கற்ற வர்க்கத்தின் தார்மீக கடமை மற்றைய மக்களுக்கு இது போன்ற சமூக விடயங்களை எத்தி வைப்பதாகும்.

எமது நாட்டின் இன்றைய சூழலில் பலமான ஒரு எதிர்க் கட்சி இருந்தால் மாத்திரமே எமது இருப்பை காப்பாற்றி இந்த நாட்டில் நாம் வாழ முடியும். (இன்ஷா அல்லாஹ்)

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எமது வாக்குகள் சிதறடிக்கப்படுமானால் எமது இருப்பு கேள்விக் குறியாகி நாம் பலவீனப்பட்டு கட்டற்ற சமூகமாக ஆகி விடுவோம் (அல்லாஹ்வே போதுமானவன்)

எனவே எமது வாக்குகள் அனைத்தும் அமானிதங்கள் ஆகும். அதை நாம் சரிவர பயன்படுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அதேபோல் யாரும் வாக்களிக்காமல் இருக்க வேண்டாம். இதுவும் ஒரு பாரிய அளவிலான பிரச்சினைகளை எம் சமூகத்திற்கு கொண்டுவரும்.

எனவே அனைவரும் எமது வாக்குகளை அளித்து எமது இருப்பையும் எமது உரிமையையும் பெற்றுக் கொண்டு இந்த நாட்டில் சிறந்த மக்களாக வாழ சிந்தனையுடன் செயற்படுவோமா. வல்லவன் அல்லாஹ் சிறப்பான ஆட்சியை அமைத்துத் தர பிராத்திப்போமாக. ஆமின்

(இன்ஷா அல்லாஹ்)

நபீஸ் நளீர்
(இர்பானி)

Leave a Reply