மனசாட்சி

கேள்விகள் வேள்வியின்
வெற்றிப்படி என்பர்
கேட்டவர்கள் தோல்வியை
துரத்தி அடித்தர் என்பர்.

அநீதம் அறங்கேறுகையில்
நீதத்தைப்பற்றிக் கேட்க நாதியில்லை
அபாண்டம் சுமத்தப்படுகையில்
செவி சாய்க்க யாருமில்லை.

செவிப்புலன் இருந்தும் செவிடர்களாய்
நாவில் நரம்பிருந்தும் ஊமைகளாய்
நமக்கென்னவென்று
நடைமுறையில் நடைப்பினமாய்
நாலடைவில் அங்கவீனமாய்…

விடை தெரியாமல் வினாக்குறி இட்டனர் – அன்று
விடை தெரிந்தும்
குறியீடின்றி வியக்கிறது உலகின்று.

நாணயம் இருபக்கம் கொண்டது
அது குற்றியில் மட்டுமல்ல
குணத்திலும்கூட.

பேதங்கள் வேண்டாம்
என்கிறது வேதங்கள்
குரோதங்கள் வேண்டாமென்று
குடிபெயருது மேகங்கள்.
வாத மேடைகளை விட்டுவிட்டு
வாழ்கையில் தொட்டதெற்கெல்லாம்
விவாதிக்கிறது சமூகம்.

நம்பிக்கைதான் வாழ்கையென்று
நம்மில் பிறரை
நம்பிக்கெட்டவர் எத்தனைபேர்.

நாடக மேடயாய் நாட்களை நகர்த்தி
உயிரிருந்தும் கதாபாத்திரமாகிறோம்
உணர்விருந்தம் உலகுக்கு அடிமையாகிறோம்

ஐந்தோடு ஒன்று அதிகமிருந்தும்
அடைவுகள் நம்மில் அவ்வளவாய் இல்லை.

கேள்வி கேட்கவேண்டியது
மனசாட்சியிடம்
விடைதேட வேண்டியது
விதைத்திருக்கும் எம் உள்ளத்தில்.

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

Leave a Reply