உயர் தரமே உங்களுடன்

  • 72

பாலர் நாம் என்ற பருவம் கடந்து பதினொன்று பயின்று பள்ளிப் பருவத்தில் உயர் தரம் பயின்றிட வாய்ப்பு பெற்றோமல்லவா?

பள்ளி மாணவர்களாக இருந்த மாணவர்கள் உயர் தரம் பயில ஆரம்பித்த மரு கணமே பள்ளியில் உள்ள மாணவர்களுக்கே உதாரண புருஷர்களாக மாறுவது தான் கலைக் கூடத்துக்கே அழகு. ஆனால்  பாடசாலை உயர்தர மாணவர்கள் ஒரு சிலரை நோக்குவோமானால்  அலட்சியமாக இரு வருட படிப்பை தொடர்ந்து அதில் தோல்வி காண்பது வழக்கமாகி வருகின்றமை. கவலைக்குரியவிடயமாகிவிட்டது.

ஆரம்ப கல்வி தொடக்கம் ஐந்தாம் தரம் வரை புலமை பரிசில்  எனும் இலக்குப் பாதையில் ஆசிரியர் மற்றும் பெற்றோர் வழி காட்டலில் பயணிப்பதும் தொடர்ந்து பெற்றோர் துணையில் உயர் தரம் எனும் இலக்குப் பாதையில் கல்வியை தொடர்ந்த போதும் இதன் பின்னர் தான்  பயணிப்பது தான் நம் இலக்குப் பாதையில் உன்னதமான இடத்தை அடையலாம் என்பதை உணர்வதில்லை.

இலட்சக்கணக்கு  மாணவச் செல்வங்களில் பல்கலைக்கழக தெரிவு என்பதும் முன்னேற்றகரம் காணமைக்கு உயர் தர மாணவர்களின் அலட்சியப் போக்கே மூல காரணம். பல் கலைக்கழகமே நம் நோக்காக பயணிப்பது தான்  நம் பள்ளிப் படிப்புக்கே அர்த்தம் பெற்றுத்தரும்.

நம் மாணவச் செல்வங்களுக்கும் உயர் படிப்பை தொடராத சில பெற்றோர்களுக்கும் இது தொடர்பான தெளிவு இன்மையே நம் தோல்விக்கு முதற் காரணம் .

முதலில் நீங்கள்
  • உயர் தரப்பிரிவில் உங்கள் முயற்சிக்கு பயன் தரக் கூடிய பிரிவை தெரிவு செய்வது புத்திசாலித்தனம்.
  • தெரிவு செய்த பிரிவு தொடர்பாக ஆசிரியர்/ சிரேஷ்ட மாணவர்கள் வாயிலாக ஆலோசனைகளைப் பெற்று நாம் சுயமாக அது தொடர்பான தெளிவைப் பெறுவது தான் சிறப்பு. ஆனால் இன்று உயர்தரமானதும் சிரேஷ்ட மாணவர்களின் கருத்துக்களை ஏற்று நாம் சுயமாக ஆராயமல் பிரிவு மற்றும் பாடங்களைத் தெரிவு செய்து பின் அவற்றில் ஈடு பாடு இல்லாமல் அல்லல் படுவதும் இடைவிலகுவதும் முட்டாள்தனம்.
  • தெரிவு செய்த பின் அவற்றை விருப்புடன் கற்கவும் மேலும் அதி சித்தி பெறுவதில் முழு முயற்சியுடன் கவனம் செலுத்தல்.
  • பாடங்களில் குழப்பகரமான முடிவுகளுடனும் சித்தி பெறாத மாணவர்களை வைத்தும் கஷ்டம் என தீர்க்கமாய் நம்பிக்கை கொண்டு தன்னம்பிக்கையை தானாய் இல்லாமல் செய்து கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்
  • பாடங்களில் அக்கறை செலுத்தி முயற்சி செய்வது தான் சிறந்தது.
  • இனி உங்கள் தனி முயற்சியில் கல்வியினைத் தேடுங்கள் பாடப்பரப்புக்கான அறிவினை மேலதிகமாகப் பெற்று பல்கலை எனும் வெற்றிப் மகுடத்தை சூடிக்கொள்ளுங்கள்.
  • பாடசாலை/ ஆசிரியர்கள்/ தனியார் வகுப்புக்கள் என தங்கி இருந்த நிலையில் இருந்து தனி முயற்சி மட்டுமே இங்கு தேவை.
  • அலட்சியப் போக்கில் தோல்வி கண்ட பின் சமூகத்தின் மேல் பழிச் சொல்வது ஈன செயல்இனியாவது வெற்றிக்கு நாம் காரணமாகுவோம்.

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்! ஆனால் முயலாமை ஒரு போதும் வெல்லாது!

ASHRA MINSAR

பாலர் நாம் என்ற பருவம் கடந்து பதினொன்று பயின்று பள்ளிப் பருவத்தில் உயர் தரம் பயின்றிட வாய்ப்பு பெற்றோமல்லவா? பள்ளி மாணவர்களாக இருந்த மாணவர்கள் உயர் தரம் பயில ஆரம்பித்த மரு கணமே பள்ளியில்…

பாலர் நாம் என்ற பருவம் கடந்து பதினொன்று பயின்று பள்ளிப் பருவத்தில் உயர் தரம் பயின்றிட வாய்ப்பு பெற்றோமல்லவா? பள்ளி மாணவர்களாக இருந்த மாணவர்கள் உயர் தரம் பயில ஆரம்பித்த மரு கணமே பள்ளியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *