நிஜத்தின் நிழலில்

  • 24

கனவுகள் பல – சுமந்து
கண்மூடா இரவுகள் பல – கடந்து
ஆசைகள் பல – துறந்து
அகிலமதில் வலம் வருபவள் – இவள்

வீதியிலிறங்கி நடக்கையிலே – இவளை
வீரியமாய் பார்த்தவர் – பலர்
குனிந்த தலை நிமிராமல் பாதையில் – தன்
பயணம் அதனை முடித்தவள் – இவள்

நிஜமாய் நினைத்தவை – யாவும்
நிழலாய் மாறுவதைக் கண்டு
நிலை குலைந்து போயினும் – தன்
நிலமை உணர்ந்து நடப்பவள் – இவள்

பாசக் கயிறுகள் – எல்லாம்
பட்டென்று அறுந்த போதிலும் – எவர்க்கும்
பாரமாய் இருக்காமல் – தன்
பாதை அதனை
பத்திரமாய் கடந்து செல்பவள் – இவள்

அன்புக்காய் ஏங்கையிலே
அடைக்கலம் கொடுக்க மறுத்தவர் – முன்
தன் மெல்லிய சிரிப்பால்
விடை கொடுத்தவள் – இவள்

விதியின் விளையாட்டு – இவளுக்கு
விட்டெறிந்தவை எல்லாம் – போதும்
விழித்தெழுவாள் – இவள் என்றும்
‘நிஜத்தின் நிழலாய்’

சதீகா சம்சுதீன்
தொழிநுட்ப பீடம்
கொழும்பு பல்கலைக்கழகம்

கனவுகள் பல – சுமந்து கண்மூடா இரவுகள் பல – கடந்து ஆசைகள் பல – துறந்து அகிலமதில் வலம் வருபவள் – இவள் வீதியிலிறங்கி நடக்கையிலே – இவளை வீரியமாய் பார்த்தவர் –…

கனவுகள் பல – சுமந்து கண்மூடா இரவுகள் பல – கடந்து ஆசைகள் பல – துறந்து அகிலமதில் வலம் வருபவள் – இவள் வீதியிலிறங்கி நடக்கையிலே – இவளை வீரியமாய் பார்த்தவர் –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *