செம்மைத் திருநாள்

தியாகத்தின் தாற்பரியம்
தியாகத் திருநாள்
உணர்த்திற்று

கலீலுல்லாஹ்
நபி இப்றாஹிம்
தியாகச் செம்மல்
நபி இஸ்மாயீல்
ஈன்ற அன்னை ஹாஜர் அலைஹிமுஸ்ஸலாம்
நினைவூட்டப்படும் நாளல்லவா

இறையோன் இறையில்லம்
பைத்துல்லாஹ்வும்
சாதிபேதம் ஏதுமின்றி
சகோதரராய் கூடுமிடம்
அறபா மைதானமும்
நினைவூட்டப்படும் நாளல்லவா

ஒரே குரலில்
ஒன்றாக ஒலிக்கும்
தல்பியா முழங்கும்
பொன்னான நாளல்லவா

பெருநாள் உதித்ததுவே
கால்நடையும் கண்முன்னால்
நிழலாடுதே

அந்நாள்
தியாகத் திருநாள்
இந்நாள்
ஹஜ்ஜுப் பெருநாள்..

ஈத் முபாறக்!

ASMA MASAHIM
PANADURA
SEUSL

Leave a Reply