பக்ரீத் திருநாள்

  • 52

ஹஜ்ஜுப் பெருநாள் தியாக திருநாள்
மக்கா மண்ணில் தவாப் செய்ய
இஃராம் ஆடையோடு புறப்படும்
ஹாஜிகள் கூட்டம்

இப்ராஹீம் நபியின் உறவுகள் செய்த தியாகம்
இஸ்மாயில் நபி தியாகங்கள் பல செய்து
தியாகத்தில் வந்தது இந்த ஹஜ்ஜுப் பெருநாள்

பால் சுரக்கும் மார்புகளோடு பாலைவனத்தில்
இறைவனுக்காக தஞ்சம் புகுந்த பெண்மணி
மார்பகங்களில் பாலின்றி தன் குழந்தைக்குக்
பசியாற்ற தவிக்கும் வேளையில்
வறண்டு கிடந்த பாலைவனத்தில்
எடுத்த ஓட்டம் ஸபா மர்வா மலைகளுக்கு
அங்கும் இங்குமாய் தொங்கோட்டம் ஓடிய
அன்னையின் தியாகம் இன்று
உலக முஸ்லிம்களுக்கு வணக்கமாயிற்று

இன்று ஸம்ஸம் நீராய்
ஆயிரம் பேர் ஒன்று கூடி இறைத்தாலும்
ஒரு சொட்டு நீர் குறையாத நீர் ஊற்று
பாலைவனத்தில் அற்புதமாய்

ஹஜ் எனும் கடமையும் அரியதாய் நிறைவேற்று
அன்று பிறந்த பாலகனைப் நீயும் மாறு விடுவாய்

இஸ்லாம் போதிக்கும் கடமைகள்
இறுதி கடமையாய் இறைவன் கொடுத்த
பணமும் உடல் பலமும் உள்ளோருக்கு
ஹஜ் எனும் தியாகத்தின் சரித்திரம்
பார்த்திடும் கடமையாய்

மனிதர்களின் தியாகங்களை பார்த்து
வியந்து போகிறோம் மக்களுக்கு
ஹஜ் எனும் கடமை வந்த சரித்திரம் சொல்லுங்கள்
தியாகம் என்றால் என்னவென்று புரிந்திட

தன் தவமிருந்து பெற்ற குழந்தையை கூட
படைத்த வல்ல அல்லாஹ்வுக்காய்
யாகம் செய்யத் துணிந்த
சரித்திரம் சொல்லுங்காள்

தியாகத்தில் கிடைத்த திருநாளாம்
ஹஜ்ஜு பெருநாள்
ஈடேற்றமும் இன்பமும் பெற்று
இறைவனின் பொருட்டால் கொண்டாடுவோம்
இந்த திருநாளை

இனிய ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்கள்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

ஹஜ்ஜுப் பெருநாள் தியாக திருநாள் மக்கா மண்ணில் தவாப் செய்ய இஃராம் ஆடையோடு புறப்படும் ஹாஜிகள் கூட்டம் இப்ராஹீம் நபியின் உறவுகள் செய்த தியாகம் இஸ்மாயில் நபி தியாகங்கள் பல செய்து தியாகத்தில் வந்தது…

ஹஜ்ஜுப் பெருநாள் தியாக திருநாள் மக்கா மண்ணில் தவாப் செய்ய இஃராம் ஆடையோடு புறப்படும் ஹாஜிகள் கூட்டம் இப்ராஹீம் நபியின் உறவுகள் செய்த தியாகம் இஸ்மாயில் நபி தியாகங்கள் பல செய்து தியாகத்தில் வந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *