மறக்க முடியாத பெருநாள்

இவ்வருட ஹஜ் பெருநாள் தந்த வாய்ப்பு
வாழ்வில் மறக்க முடியாத பரிசு
முதன் முதலாக வானொலியில்
என் கவி ஒன்று
என் சொந்த குரலிலே ஒலித்தது

அதைக் கேட்ட நொடி
உள்ளம் ஆனந்த தாண்டவம்
ஆடியதை யார் அறிவது?

அப்போது என் நினைவில்
வந்து போனது தோழியின் வார்த்தை
அன்று சொன்னாள் அவள்.

அடுத்த பெருநாளில் இறைவன்
உனக்கான சந்தோசத்தை
இரட்டிப்பாக்கி தருவான் என்று.

பிராத்தனையின் பலனை
இன்று கண்டு கொண்டேன்
அல்ஹம்துலில்லாஹ்.

நிச்சயமாக இருளுக்கு பின்னர்
ஒளிமயமான விடியல் இருக்கிறது

Noor Shahidha.
SEUSL.
Badulla.

Leave a Reply