மோமிக் சுறாவை விடுதலை செய்ய முடியுமா?

  • 12

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 13】

“என்ன சொல்லுறே. என் கிட்ட கூட பொய் சொல்லுறே. அது எப்படி உனக்கு தெரியாம இருக்கும்?” என்று நிக்கலஸ் கேட்டான்.

“ஐயோ! நான் ஒன்னும் பொய் சொல்லலீங்க. உண்மையிலேயே டோரடோ தீவு எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது.” என்று வருத்தப்பட்டாள்.

“அட இதை நான் எதிர்பாக்கல்ல. நீ உண்மையை சொல்லிட்டா பிரச்சினை எல்லாம் தீர்ந்தது என்று நினைச்சேன். இப்போ அவன் நம்மள மட்டும் இல்ல நம்ம பெண்ணையும்.”என்று பயத்தில் பேச அவர் வாயில் கைவைத்து “ஊஹூம்.” என்று தலையை ஆட்டிவிட்டு.

“நமக்கு என்ன ஆனாலும் பரவால்லீங்க. அவளுக்கு ஒன்னும் ஆக கூடாது. அதனால நான் ஒரு காரியம் பண்ண போறேன்.”

“என்ன நீ என்ன பண்ண போறெ?” என்று கேள்விக்குறியோடு நின்றான் நிக்கலஸ்.

***************

ராத்திரி எல்லாம் ஒரே யோசனை. நடப்பது எல்லாம் கனவு போல் இருந்தது.

“கொஞ்ச நாளாவே இவ இப்படி தான் நம்ம கிட்ட கூட சரியா பேசுறதில்லை.என்னாச்சு மேடம் உங்களுக்கு.” என்று கேட்டான் ஜிம்சன்.

“நேத்து ராத்திரி எங்க போய்ட்டே. திடீரென எழும்பி பார்த்த போது உன்னை காணும். பாத்ரூம் போய் இருப்பேன்னு நினைச்சி விட்டுட்டேன்.” என்றாள் லில்லி.

யுவான் சொன்ன விடயங்களை இவர்களிடம் சொல்வதா வேண்டாமா என்ற யோசனை அவளுக்கு.

“என்ன யோசிக்குறே!”

“அது ஒண்ணும் இல்லை. அம்மா அப்பாவை நினைத்து தான்.” என்றவளுக்கு உண்மையிலேயே அவர்களின் எண்ணம் வந்துவிட்டது.

“அவங்க தான் பெர்முடாவில் இருக்காங்களே. நீ இங்கே வந்து இன்னமும் அவர்களை சந்திக்க போகவே இல்லியே” என்று கேட்டான்.

“ஆமா அது உண்மைதான். இந்த வருஷம் முடிவில் என்னோட இந்த எஸ்க்பீரியன்ஸ் வெச்சிக்கிட்டு ஊருக்கு போகணும் என்னு இருந்தேன்.” என்று யோசனையோடு இழுத்தாள்.

“ஏதோ சந்தேகத்தோட சொல்லுறே அதுதானே உண்மை.” என்றான் ஜிம்சன்.

இப்போது கூட இங்கே நடக்கிற விடயங்களை சொல்லிவிடலாம் என்றெண்ணி சொல்ல வாயெடுத்த போது மேல் தளத்தில் ஏதோ சண்டை போல் சத்தம் கேட்டது.

மூவரும் அங்கே அண்ணாந்து பார்த்தார்கள். நடுவிலே உள்ள கேன்டீன் ஆட்களும் எட்டி எட்டி அங்கு என்ன நடக்கின்றது என பார்த்தனர். இந்த ஆராய்ச்சி நிலையத்தின் சுபிரீயண்ட் கிட்ட ஒருவன் மன்னிப்பு கேட்பது போல இருந்தது. இங்கு வேலைக்கு வந்த முதல் நாள் பார்த்த முகம். அப்புறம் அவர்களை சந்திப்பதே இல்லை. ஐரிஸுக்கு யுவான் சொன்னவை நியாபகத்திற்கு வந்தது.

“இவன் ஒரு இரக்கமில்லாத சுயநலவாதி. தன்னோட லாபத்துக்காக உயிர்களை வெச்சி விளையாடுறவன்.” என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

சுற்றி நின்ற ஏனைய விஞ்ஞானிகள் சேர்ந்து அந்த மன்னிப்பு கேட்கும் நபரை சத்தமாக திட்டுவது போல் தெரிந்தது.

“அங்க அப்படி என்ன தான் நடக்குது?” என லில்லி கேட்டாள்.

“புரியல்லியே. நாம உண்டு நம்ம வேலை உண்டு என்று இருப்போம்.” என்றான் ஜிம்சன். அந்த கூட்டத்தில் ஒருத்தனாக யுவான் நின்று கொண்டிருந்தான்.

அன்று மாலை வரை எவ்வித இடையூறுகளும் இன்றி நகர்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு ஐரிஸ் யுவானுக்காக காத்திருந்தாள். யுவான் கேன்டீனுக்குள் நுழைந்தான். யார்க்கண்ணிலும் படாமல் கேன்டீன் தொழிலாளி போடும் ஆடை ஒன்றை அணிந்து கொண்டு கீழ்தளத்திற்கு வந்தான்.

ஐரிஸ் கடலை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். திடீரென அவளை பின்னாடி நின்று அழைத்தான் யுவான். பயத்துடன் திரும்பி பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தாள்.

“வாட் இது நீங்க தானா? என்ன வேஷம் இதெல்லாம்?” என்று கேட்டாள்.

“இங்க இருக்குறவங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சி யாரோ ஒருவன் பார்க்குறான்னு நான் உன்னை” என்று தயங்கியவன். அதை வேறு யாரோன்னு நினைச்சி இன்னிக்கி பார்தேல்ல. ஒருவனை வேலையை விட்டே நிறுத்த பார்த்தாங்க. அவன் சுபிரீயண்ட் காலில் விழுந்து அது அவனில்லை. என்னு சொல்லிட்டான்.”

“ஐயையோ அப்பறம். என்னாச்சு.”

“அதை விடு. முக்கியமான விஷயம் என்னவென்றால். இன்னிக்கி ஒரு டெஸ்ட் நடக்க போகிறது. மோமிக் என்கிற கடல் சுறாவை கொன்னு அதோட ஈரலில் இருக்கும் திரவத்தை பிரிக்க போறாங்க. இப்போதைக்கு என்னால அதை விடுவிக்க முடியாது. நீதான் எனக்கு உதவி பண்ணனும்.” என்று கேட்க ஒன்றும் புரியாமல் விழித்தாள் ஐரிஸ்.

தொடரும்.
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 13】 “என்ன சொல்லுறே. என் கிட்ட கூட பொய் சொல்லுறே. அது எப்படி உனக்கு தெரியாம இருக்கும்?” என்று நிக்கலஸ் கேட்டான். “ஐயோ! நான்…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 13】 “என்ன சொல்லுறே. என் கிட்ட கூட பொய் சொல்லுறே. அது எப்படி உனக்கு தெரியாம இருக்கும்?” என்று நிக்கலஸ் கேட்டான். “ஐயோ! நான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *