அருள்களை விளங்குவோம் உணர்வுகளை மதிப்போம்

  • 29

நம் குழந்தை பற்றி குழந்தை இல்லாதவரிடம், நம் பெற்றோர் பற்றி அநாதைகளிடம், நம் ஆரோக்கியம் பற்றி நோயாளியிடம், செல்வம் பற்றி ஏழையிடம், பலம் பற்றி பலவீனமானவரிடம், தொழில் பற்றி தொழிலற்றவரிடம், நம் ஆடம்பர வாகனங்கள் பற்றி துவிச்சக்கர வண்டியே இல்லாதவரிடம் பேசுவதைத் தவிர்போம்.

இவையும், நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் அல்லாஹ்வினது அருள்கள். மிகப்பெறுமதியானவை. அவன் நாடியோருக்கு அவற்றை வழங்குகின்றான். நாடியோருக்கு வழங்காதிருக்கின்றான். அவற்றில் நமக்கு எந்தப் பெருமையும் இல்லை. அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் வகையில் அவைகளைப் பற்றிப் பேசுவது விரும்பத்தக்கது. பெருமைக்காகப் பேசுவது தடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உள்ளத்தையும் எண்ணத்தையும் அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே.

என்றாலும் அந்த அருள்கள் பற்றி அவற்றை இழந்தவர்கள் முன் பேசுவது விரும்பத்தகாத செயலாகும். அவர்களின் உள்ளங்களையும் உணர்வுகளையும் அது காயப்படுத்தக் கூடும். பிறருக்கு நோவினை செய்யும் மற்றும் அவர்களின் உள்ளங்களை காயப்படுத்தும் விடயங்களை இஸ்லாம் தடைசெய்துள்ளதால் அவர்களின் முன்னிலையில் அது பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது. அவர்கள் அருள்களை இழந்தவர்களே தவிர உணர்வுகளை இழக்கவில்லை.

அது அவர்கள் விதி என்று ஒற்றை வார்த்தையில் கூறி நாம் செய்வதை நியாயப்படுத்தக் கூடாது. எந்த இறைவன் அருள்களைத் தருகின்றானோ அதே இறைவன்தான் அருள்களைத் தராமலும் இருக்கின்றான் அல்லது வழங்கியதை எடுக்கின்றான் என்பதை ஆழமாக நம்புவோம். விளங்கி செயற்படுவோம்.

பேஸ் புக் என்பது பொதுத்தளம். அதில் பல்வேறு சோதனைகளுக்குள் சிக்குண்டோரும் உள்ளனர், பல அருள்களை இழந்தோரும் உள்ளனர். எனவே நமது பதிவுகள் மிகக் கவனமாக அமைய வேண்டும். எம் சொல், செயல் மூலம் ஒருவர் பாதிக்கப்படுவதும் கவலைக்குரிய விடயமாகும். நாம் பிறருக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமே தவிர ஆராத காயத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற விடயத்தில் மிகக் கவனமாக இருப்போம்.

நம் சந்தோஷங்களில் மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை, பிறரை காயப்படுத்துபவை போன்றன இருக்கலாம். ஏன் நாம் பகிரும் சந்தோஷம் இன்னொரு வகையில் சிலரின் உள்ளங்களில் பொறாமையைக் கூட தூண்டிவிடலாம். பொறாமை ஆபத்தானது போல் அதைத் தூண்டிவிடுவதும் ஆபத்தானதே. அது நமக்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம். அதனால்தான் யூஸுப் நபியின் அருமையான கனவை சகோதரர்களுக்குக் கூட கூறவேண்டாமென அவர்களின் தந்தை அறிவுரை வழங்கினார்கள் என்பதைப் பாடமாகக் கொள்வோம்.

நம் சந்தோஷங்கள் அனைத்தும் நலவுகளல்ல. அல்லாஹ் அனைவருக்கும் அருளையும் கருணையையும் வழங்குவானாக.

பாஹிர் சுபைர்

நம் குழந்தை பற்றி குழந்தை இல்லாதவரிடம், நம் பெற்றோர் பற்றி அநாதைகளிடம், நம் ஆரோக்கியம் பற்றி நோயாளியிடம், செல்வம் பற்றி ஏழையிடம், பலம் பற்றி பலவீனமானவரிடம், தொழில் பற்றி தொழிலற்றவரிடம், நம் ஆடம்பர வாகனங்கள்…

நம் குழந்தை பற்றி குழந்தை இல்லாதவரிடம், நம் பெற்றோர் பற்றி அநாதைகளிடம், நம் ஆரோக்கியம் பற்றி நோயாளியிடம், செல்வம் பற்றி ஏழையிடம், பலம் பற்றி பலவீனமானவரிடம், தொழில் பற்றி தொழிலற்றவரிடம், நம் ஆடம்பர வாகனங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *