ஷரீப்ப பத்தி எல்லாம் தெரிஞ்சி தான் நீங்க முடிச்சீங்களா?

  • 14

திருப்பு முனை
பாகம் 8

ஆம்! அவளது பெயர் ரோஸி என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. லீனா அவளது msg ஐ வாசித்தாள்.

“என்னடா நீ எனய மறந்துட்டியா. புதுசு வந்தா பழசுக்கு இப்ப மதிப்பு இல்ல போல.” இது ரோஸியின் message.

அதற்கு ஷரீப்.

“அப்படி எல்லாம் இல்ல மா. எப்படியும் நீங்க மட்டும் தான் ஏன்ட உலகம். நா ஒஙட மேல தான் உசுரயே வெச்சி இரிக்கேன். நா வாழ்ற வாழ்க்கயே ஒஙல்காக தான். நீங்க இல்லாத ஒரு வாழ்க்கயே எனக்கு வானா.” என்று அவன் reply பண்ணியிருந்தான்.

லீனாவுக்கு நறுக்கென்று இருந்தது. அவளுக்கு இவன் அனுப்பிய எல்லா குறுந்தகவல்களையும் மொத்தமாக வாசித்தாள். அழுதாள்.

அப்போது தான் அவளுக்கு ஷரீப் தன்னை நிராகரிப்பதன் அர்த்தம் தெளிவாக புரிந்தது. அவள் யார்? எங்கிருக்கிறாள்? என்ற தேடல் அவளுக்குள் ஒரு வேட்கையை தூண்டியது. ஷரீப் வரும் சத்தம் கேட்டு கண்களை துடைத்து கொண்டாள்.

“என்னா பேசி முடிஞ்சா?”

“ஓ. இப்ப தான் 4nஅ வெச்சேன்”

“சரி சரி 4nஅ தாங்க. நா கொஞ்சம் வெளிய பெய்ட்டு வாறேன்.”

“எங்க போறீங்க?”

“இது என்னா? புதுசா கேள்வி எல்லாம் கேக்குறீங்க?”

“இல்ல. இவ்வளவு நாளா கேக்கனும்டு நெனச்ச கேள்வி தான். கல்யாணம் முடிச்சதுல இருந்து பார்க்குறேன். வெளியே போறேன்டு சொல்லிட்டு daily போறீங்க. ஆனா நீங்க எங்க போறன்டு எனக்கு ஒரு வார்த்தை சரி சொல்லிட்டு போறல்லயே. யாரும் வந்து நீங்க எங்கன்டு கேட்டா நா முழிக்கிற. அதனால தான் கேக்குறேன்.”

“ஓ! medamகு எங்க போறன்டாலும் சொல்லிட்டு தான் போவேனும் போல.” அவன் கேள்வியில் கோபம் தெரிந்தது.

“அப்படி இல்ல. பொதுவா யாருன்டாலும் எங்க போறன்டாலும் பொண்டாட்டிக்கி சொல்லிட்டு தானே போவாங்க.”

“இங்க பாருங்க லீனா. அவங்க அப்படி இவங்க இப்படின்னு யாரயும் பார்த்து ஒஙட வாழ்க்கய நீங்க தீர்மானிக்க வர வானா. நா எப்படியோ அதுக்கு ஏத்த மாதிரி நீங்க இரிங்க. ஒஙட இஷ்டத்துக்கு ஆட நெனக்க வானா. நா சொல்ற மாதிரி மட்டும் நீங்க இருந்தா சரி.”

என்று கூறி விட்டு கதவை படாரென்று சாத்தி கொண்டு ஷரீப் வெளியேறினான்.லீனா கலங்கி நின்றாள்.

‘நா என்னா தப்பா கேட்டுடேன்டு இவர் இப்படி கொதிக்கிறாரு. ஏன் அல்லாஹ். கல்யாண வாழ்க்க என்றது jail வாழ்க்கயா? ஏன் எனக்கு மட்டும் அப்படி இரிக்கி. எனக்கு என்டு எந்த உரிமையும் இல்லயா.’

அவள் ஞாயம் கேட்டு கதறினாள். ஆனாலும் அங்கு அவளுக்கு ஆறுதல் சொல்ல எவரும் இல்லை. அவள் தனிமையை தவிர. பிறகு இரவுணவை தயாரித்து விட்டு இஷாவையும் தொழுது முடித்தாள்.

“யா அல்லாஹ்! இவர் இப்படி திடீர் திடீர்ன்னு எங்க தான் போறாரு. ஒரு வேல அந்த ரோஸிய பார்க்க தான் போறாரோ. உண்மயிலயே அவ யாரு. அவக்கு அப்படி ஒரு reply இவர் ஏன் அனுப்பனும். அந்தளவுக்கு உரிம  குடுக்குற அளவுக்கு இவர்க்கு என்னா இரிக்கி? எப்படி ரப்பே நா இதுவல கண்டு புடிக்க. எனக்கு ஒரு வழிய காட்டி தா ரஹ்மானே. எனக்கு பயமா இரிக்கி.”

என்று அவள் மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

***********************************

சில நாட்களின் பின். அவள் பிரார்த்தனைக்கு பலனாகவே இறைவன் அவளுக்கு சலீமா தாத்தாவின் வருகையை ஏற்படுத்தி கொடுத்திருந்தான். அவள் வேறு யாரும் இல்லை…லீனாவின் அயல் வீட்டு பெண் தான். ஷரீப் இல்லாத நேரத்தில் தான் சலீமா வருவாள். ஏனென்றால் பிறரை மதிக்காத  அகங்கார குணம் கொண்டவன் தான் ஷரீப் என்பதை அவள் ஏற்கனவே அறிந்திருந்தாள். அவள் வருகை லீனாவுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. ஆரம்பத்தில் யாரோ போல் தோன்றிய இவர்களது நட்பு காலப்போக்கில் ஒரு இரத்த பந்தம் போல உருமாறியது. இப்படி இருக்கும் போது தான்  ஒரு நாள் சலீமா.

“தங்கச்சி நா ஒன்டு கேட்டா தவறா நெனக்க மாட்டீங்களே.”

“ச்சீ. அப்படி ஒன்டும் நெனக்க மாட்டேன் தாத்தா. கேளுங்க என்னா விஷயம்.”

“அப்ப சரி தங்கச்சி. ஷரீப்ப பத்தி எல்லாம் தெரிஞ்சி தான் நீங்க முடிச்சீங்களா?”

எல்லாம் என்டா. எப்படி கேக்குறீங்க தாத்தா.”

“அவர்ட divorce அத பத்தி.”

ஓ! 1st முடிச்சி உட்ட கத  தெரியும் தாத்தா எனக்கு. ஏன் கேட்டீங்க?”

“அப்ப காரணம் எல்லாம் தெரியுமா ஒஙல்க்கு?”

“ஓ! தெரியும் தாத்தா.”

“எல்லாம் தெரிஞ்சுமா அவன முடிக்க விருப்பப்பட்டீங்க?”

நீங்க சொல்றது எனக்கு வெளங்கல்ல தாத்தா. அன்டக்கி வந்த ஒரு மாமியும் இந்த கேள்விய தான் கேட்டாங்க. அப்பறவ் ஒரு நாள் தோட்டம் துப்பறாக்க வந்த அண்ணாவும்  கேட்டாரு. மேல ஊட்டு தங்கச்சியும் கேட்டா. இதே கேள்விய தான். அப்ப அத நா பெருசா கணக்கெடுக்கல்ல.”

“சொல்லுங்க தாத்தா. இந்த கேள்விக்கி என்னா அர்த்தம்?” விடை தேடும் ஆவலில் லீனா கேட்டாள். இவ்வளவு காலமும் லீனா தேடிய கேள்விகளுக்கான பதில்கள்  அன்று சலீமாவின் மூலம் அவளுக்கு கிடைத்தது.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

திருப்பு முனை பாகம் 8 ஆம்! அவளது பெயர் ரோஸி என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. லீனா அவளது msg ஐ வாசித்தாள். “என்னடா நீ எனய மறந்துட்டியா. புதுசு வந்தா பழசுக்கு இப்ப மதிப்பு…

திருப்பு முனை பாகம் 8 ஆம்! அவளது பெயர் ரோஸி என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. லீனா அவளது msg ஐ வாசித்தாள். “என்னடா நீ எனய மறந்துட்டியா. புதுசு வந்தா பழசுக்கு இப்ப மதிப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *