இதயம் தொட்டவன்

மனம் விரும்பிய ஒருவர்
காலம் முழுதும்
பக்கத்திலே இருக்க
எவ்வளவு கொடுத்து
வைத்திருக்க வேண்டும்!
அதற்கென்று எவ்வளவு
போராட வேண்டும்!
அனுபவமுள்ளோருக்கு
அது வாழ்க்கையின்
போராட்டக் களம்.

அப்படித்தான்! என்னவனும்
மனம் விரும்பி
கரம் பிடித்தவன் இன்றுடன்
ஆறு வருடங்கள் ஆயிற்று!

இதே போன்றதொரு
பெருநாள் மறு தினமொன்றில்
என் மனங் கொண்டான்.
அல்ஹம்துலில்லாஹ்!

இத்தனை வருடக் காதலில்
இத்துனூண்டு விடயத்துக்கெல்லாம்
ரோஷம் காட்டும் என்னை
அவனது ராணியாய்
கொண்டாடுவதற்கு
நான் கொடுத்து வைத்தவள் தான்!

அவனது பொறுமைக்கு
நான் பெருமைப்பட வேண்டும்.
எல்லா விதத்திலும்
அவன் என்னவன் என்பதற்கு
எல்லா நேரமும்
சுஜூது செய்ய வேண்டும் நான்.
எல்லாப் புகழும்
அல்லாஹ் அவனொருவனுக்கே!

இனியும்
இறுதி மூச்சு வரை
அவனுக்கினியவளாய் வாழ
பிரார்த்தனைகள் என்றும் நீளும்.
இன்ஷா அல்லாஹ்!

KiyasINHumadha

Leave a Reply