இன்றும் நாளையும்

இன்று என்பது இன்னும்
சிலமணி நேரங்களில் முடிந்திடும்.
நாளை என்பது தான்
இனி தொடர்கதையாக தொடர்ந்திடும்.

இன்றைய வானிலை
நாளை இருக்குமா என்று
யாருக்கும் தெரியாது.

ஆனால் நாளைய
கால மாற்றம் தான்
உங்கள் எதிர்காலத்தை
தீர்மானிக்கப் போகிறது.

மூன்று புள்ளடி தான்
சில வேளை
கல்லடியாகவும் மாறும்.

ஒரு வாக்கு தான்
உங்கள் வாழ்க்கை
கோலத்தையே மாற்றப் போகிறது.

உங்களுக்கான தலைவர் யார்
என்பதை சிந்தித்து
வாக்களியுங்கள்
வாக்கழித்து கைசேதப்படாமல்

Noor Shahidha.
SEUSL.
Badulla.

Leave a Reply