அநீதமிழைப்பதைப் பயந்து கொள்வோம்.

  • 5

கடந்த சில நாட்களாக சூடு பிடித்திருந்த அரசியல் சரவெடி சற்றே ஓய்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமைதியான தேர்தல், ஜனநாயக முறையில் நடந்து முடிந்திருப்பதாக பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தமது முயற்சிகளுக்கான அறுவடையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். 9 வது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கின்ற இவ்வேளை வெற்றியாளர் யாராக இருக்கும் என்ற ஒரு வகையான திடுக்கம் அனைவர் உள்ளங்களையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 196 பேரைத் தெரிவு செய்யும் ஓட்டப் பந்தயத்தில் ஆயிரக் கணக்கானோர் போட்டியிட்டு ஒரு சிலருக்கே வெற்று வாய்ப்பு உள்ளது. ஜனநாயகத் தேர்தல் பண்பின் பாதக விளைவாக இது கருதப் படுகின்ற போதும் தவிர்க்க முடியாத ஒரு நிலையாக இதுவே காணப்படுகின்றது. வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட அடுத்த நொடி குறித்த பிரதேசங்கள் கொண்டாடுவதும், அடுத்தவர்கள் திண்டாடுவதும் காலம் காலமாக நடந்து வரும் ஓர் அம்சமாகும்.

வெற்றி பெறுபவர்கள் அடுத்தவர்களை எள்ளி நகையாடுவதும், நையப்புடைப்பதும், மானபங்கப் படுத்துவதும் எனத் தொடரும் இக்கலாச்சாரச் சீர்கேடு கடந்த காலங்களில் உயிர்ப் பலி வரை சென்றிருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதிலும், முஸ்லிம் சமூகம் இவ்வாறான அநியாயங்களை அரங்கேற்றுவது மிகப் பெரும் அநீதமாகும்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரைக்கும் வெற்றியும், தோல்வியும் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருகின்றது என ஆழமாக நம்ப வேண்டியவன். அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எந்த முயற்சிகளும் வெற்றியளிக்காது என்ற ஈமானிய நம்பிக்கையில் வாழும் ஒரு முஸ்லிமால் வெற்றியின் போது எல்லை மீறி நடந்து கொள்ள முடியாது.

அதேநேரம், வெற்றிக் கொண்டாட்டங்கள் அடுத்த முஸ்லிமின் உயிர், மானம், மரியாதை, உடமைகள் இவற்றுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலாக அமைந்து விடவும் கூடாது. இவைகள் எல்லாம் அல்லாஹ்வின் பார்வையில் மிகப் பெரும் பாவங்களாகும்.

அநீதமிழைத்தல் அல்லது அநியாயம் செய்தல் என்ற அம்சம் இவ்வுலகில் மட்டுமன்றி மறுமையிலும் ஒரு மனிதனை அதள பாதாளத்தில் தள்ளுகின்ற ஓர் அம்சமாகும்.

“அநியாயம் இழைப்தைப் பயந்து கொள்ளுங்கள். அநியாயம் மறுமையின் இருளாகும்” (முஸ்லிம்: 2578)

எனும் செய்தி மறுமையின் இருளாக அநியாயம் மாறும் என்பதைக் காட்டுகின்றது.

அது மட்டுமன்றி பிறருக்கு செய்யப்படும் அநியாயத்தை அவர்கள் மன்னிக்கின்ற வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதும், அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை அல்லாஹ்விடத்தில் திரையின்றி ஒப்புக் கொள்ளப்படும் என்பதும் இஸ்லாம் சொல்கின்ற அசைக்க முடியாத உண்மையாகும்.

இவை மட்டுமன்றி, அநியாயமாக அடுத்தவனைப் பயமுறுத்துவதைக் கூட இஸ்லாம் தடை செய்திருக்கின்றது. அடுத்தவனின் மானம், உயிர், உடைமை அனைத்துமே இன்னொரு முஸ்லிமுக்கு ஹராம் எனும் கொள்கைப் பிரகடனத்தை எனது இறுதி ஹஜ்ஜின் அரபாப் பேருரையில் பெருமானார் (ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள்.

வெற்றியின் போது ஒரு முஸ்லிம் எப்படி பொறுமையோடும், பெருமையற்றும் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபியவர்களின் மக்கா வெற்றி அழகிய முன்னுதாரணமாகும். எதையும் செய்ய முடியுமாக இருந்த போதும் எதையும் செய்யாமல் மன்னித்து மீண்டும் வாய்ப்பளித்த உன்னத பண்புதான் எம் உயிரிலும் மேலான வழிகாட்டியின் முன்மாதிரியாகும்.

எனவே, யார் வெற்றிபெற்றாலும் அதனை மிக அமைதியாக ஏற்றுக் கொள்கின்ற அதேநேரம் வெற்றியின் மமதையில் எல்லாவற்றையும் மறந்து செயற்படக் கூடாது.

அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதிக்கின்ற வெற்றிகளால் எதையும் சாதித்து விட முடியாது. அடுத்தவர்களின் சாபம் கிடைக்கின்ற வெற்றியால் அமைதியை ஏற்படுத்த முடியாது.

அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைகளை நீதியாளனுக்கெல்லாம் நீதியாளனான அல்லாஹ் ஒரு போதும் மறுக்க மாட்டான். அதன் விளைவு அவ்வுலகிலேயே ஏதோ ஒரு வடிவில் எம்மில் அல்லது எம் மனைவி பிள்ளைகளில் பிரதிபலிக்கும் என்பதை உணர்ந்து வெற்றியை அமைதியாக அனுஷ்டிக்க எல்லோரும் முன்வரவேண்டும்.

AG. சாதிக்கீன் (பலாஹீ)
மதீனாப் பல்கலைகழக
முதுமாணி மாணவன்.

கடந்த சில நாட்களாக சூடு பிடித்திருந்த அரசியல் சரவெடி சற்றே ஓய்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமைதியான தேர்தல், ஜனநாயக முறையில் நடந்து முடிந்திருப்பதாக பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தமது…

கடந்த சில நாட்களாக சூடு பிடித்திருந்த அரசியல் சரவெடி சற்றே ஓய்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமைதியான தேர்தல், ஜனநாயக முறையில் நடந்து முடிந்திருப்பதாக பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தமது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *