எப்படியும் எல்லாம் ஒனக்கு தானே?

யார் நீ
காட்சி :- 07
களம் :- ரஞ்சித்தின் ஆபீஸ்
கதாபாத்திரங்கள் :- ரஞ்சித், தேவா, ரோஷன், சிவராம் (உயர் பொலிஸ் அதிகாரி), பத்மினி (லாயர்), ரமனி, தேவராமன், கௌஷல்யா, சுந்தரம், சாவித்திரி என அனைவரும்.)

கிட்டத்தட்ட இரண்டறை வருடங்களாக உலகை ஏமாற்றி வந்த ரஞ்சித்திற்கு இன்று தனக்கு ஏமாற்றம் வர இருக்கிறதே என்று நினைக்க நேரம் இல்லாமல் போனது. காரணம் நான் நினைத்த காரியம் இன்று திட்டமிட்ட படி நடக்க இருக்கிறது, தான் இன்றுடன் செல்வந்தனாக மாறிவிடுவேன் என்ற மமதை அவனது சிந்தனையை மாற்றி விட்டது.

நினைத்து பார்க்க முடியாத ஆனந்தத்தில் வந்த ரஞ்சித் தலைகால் புரியாத வண்ணம் தனிமையில் பணக்கார வேஷம் போட்டு நடந்து கொண்டு ஆபீஸில் தனது அறையை வந்தடைந்தான்.

ரஞ்சித்:- டேய் சுந்தரம் இங்க வா! நான் வந்துட்டன்னு தெரிதில்ல! யேன்டா இன்னும் டேபல்கு காபி வரல்ல?

சுந்தரம் :- ஐய்யா! என்ன மன்னிச்சிடுங்க இந்தாங்க ஐய்யா காபி வேற என்னங்க பண்ணட்டும்?

ரஞ்சித்:- டேய் கிழவா நா நெனைச்சா ஒன்ன! எனக்கு இப்ப இருக்குற பவருக்கு என்ன வேனும்னாலும் பண்ணலாம்! போ போய்டு ரோஷன் சார கூட்டிட்டு வா!

சுந்தரம் :- சரிங்க ஐய்யா! ‘இந்த கருமம் புடிச்சவன ஒன்னுமே பண்ண மாட்டாயா கடவுளே? ரோஷன் சார் என்ன எல்லாம் சொன்னாரு!’

(என்று தனிமையில் தனக்குள்ளே பேசிக்கொண்ட வாரே ரஞ்சித்தின் அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார் சுந்தரம்.)

ரோஷன் :- என்ன சுந்தரம் யே இப்படி மொகம் எல்லாம் வாடி போய் இருக்கு?

சுந்தரம் :- அது ஒன்னுமில்லை சார். எப்பவும் போல தான் சார்! ஒங்கள ஒடனடியா ரஞ்சித் சார் அவரோட ரூம்கு வர சொன்னாரு!

ரோஷன் :- அடடா வர சொல்லிட்டானா? சரி சுந்தரம் நா போறேன். என்ட் இன்னிக்கு ஒரு நல்ல காரியம் நடக்க இருக்கு அதுக்கு இனிப்பு எதாச்சும் ரெடி பண்ணுங்க போங்க!

சுந்தரம் :- அட சும்மா போங்க சார். ஏதாச்சும் சொல்லிகினு!

ரோஷன் :- அட நம்ப மாட்டேங்குறானே! நண்பா ஹாய் டா! உள்ள வரலாமா ரஞ்சித் சார்?

ரஞ்சித்:- டேய் வாடா! என்னடா சார் எல்லாம். நான் எப்பவும் ஒன்னோட நண்பன் தான்டா! மச்சா பத்திரம் எடுத்து வந்தியா? எங்க கொடு பாக்கலாம்?

ரோஷன் :- இந்தா நண்பா எடுத்துக்க! ஒன்னோட ஆயிருக்கும் நீ காணாத செல்வங்கள்!

ரஞ்சித்:- நான் பணக்காரன் ஆயிட்டேன்! சொத்தெல்லாம் எனக்கு கெடச்சிருச்சி. மச்சா என்னால இதுக்கு மேல முடியல டா! எல்லாம் இப்பயே செஞ்சிடலாம்! அழச்சிடு மச்சா!

ரோஷன் :- கூல் மச்சா கூல். எப்படியும் எல்லாம் ஒனக்கு தானே? கொஞ்சம் பொறுமையா இரு டா! பணக்கார கூத்து வேற அவங்க இப்போ வந்துகிட்டு தான் இருக்காங்க ஒன்னோட ரூம்கு தா வர சொல்லிருக்கே!

ரஞ்சித்:- இன்னிக்கே ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிறுவோம் டா! லாயர் கூட்டி வந்தியாடா நண்பா?

ரோஷன் :- லாயர் பத்மினி என்ட் அவவோட பிஏ ரெண்டு பேரும் வந்திருக்காங்க. இன்னிக்கே மேடர முடிச்சிடலாம் ப்ராப்ளம் இல்லடா!

ரஞ்சித் :- ஒகே மச்சா இன்னிக்கே இப்பமே பண்ணிடலாம்! சீக்கிரமா பணக்காரனாயிடனும் மச்சா!

ரோஷன் :- மச்சா பணக்காரனோ, தெருக்கோடியோ? பொறுமயா தான் டா ஆகிக்கனும்!

பத்மினி :- எக்ஸ்க்யூஸ்மி நாங்க உள்ள வரலாமா?

ரோஷன் :- ஆமா கண்டிப்பா. வாங்க மெடம் உள்ள வாங்க. எங்க ஒங்களோட பிஏ?

பத்மினி :- இதோ இருக்காறே சிவராம் வாங்க உள்ள. வேலய கட்சிதமா பாக்கணும்ல.

ரஞ்சித்:- வாங்க மெடம். சுந்தரம் போய் ரெண்டு டீ கொண்டு வா!

பத்மினி :- எங்களுக்கு இப்ப அதுக்கெல்லாம் டைம் கெடயாது! வேலய ஆரம்பிக்கலாமா? சம்மந்தப்பட்ட ஆட்கள அழைச்சிட்டு வாங்க. குறிப்பாக தேவா என்கிறவர் வரனும் ஒகே! ரமனி இருக்காங்களா? அவங்க ரெண்டு பேரும் தா முக்கியமா வரனும்.

ரஞ்சித்:- சுந்தரம் போய் எல்லாரயும் அழச்சிட்டு வா போ!

சுந்தரம் :- சரிங்க ஐய்யா. இதோ அழச்சிட்டு வாரேன்.

பத்மினி :- தேவாவோட முழு சொத்துக்களுடைய ஒரிஜினல் என்ட் காபி எனக்கு கொடுங்க! இந்த விஷயத்துல சம்மந்தப்பட்ட எல்லாரோடயும் பிசி & பேன்க் பெலன்ஸ், பாஸ்ட்போட் எல்லாம் சிவராம் கிட்ட கொடுங்க!

ரஞ்சித்:- நண்பா கொடுக்கட்டுமா? இந்தாங்க மெடம் இதுல நீங்க கேட்ட எல்லாமே இருக்கு!

பத்மினி :- ஆஆஆ இவங்க தானா ஒங்களோட இந்த மேடர் ல பங்கு போட்டுக்குறது? இல்ல இன்னும் ஆட்கள் இருக்காங்களா?

ரஞ்சித் :- ஆமா மெடம் இவங்க தான். இங்க இருக்குற இத்துனை பேரும் தான் இதுல உடன்பட்டிருக்கோம்!

பத்மினி :- என்ன ரஞ்சித் சொத்து பூராகவும் தேவா, ரமனி பேர்ல எழுதியிருக்கே? தேவா பல கோடி சொத்துக்கள வச்சு இருக்காறே? அவர் எங்க அவர் கூட பேசனும்.

ரஞ்சித்:- இதோ இருக்காறே பேசலாம் மெடம். அண்ணா பேசுங்க.

பத்மினி :- மிஸ்டர் தேவா நீங்க ஒங்க சம்மதத்தோடயா சொத்து பூராக ரஞ்சித் பெயர்ல எழுத போறிங்க?

தேவா:- எறந்து போன ஒருத்தன் எப்படி மெடம் சொத்த எழுதி கொடுக்க முடியும்? இத்தன வருஷமா எங்க இருந்தீங்க?

பத்மினி :- ஆஆஆஆ என்ன ரஞ்சித் தேவா இப்படி சொல்றாரே தேவா செத்துட்டாரா? இவரு யாரு தேவாவோட காபியா?

ரஞ்சித்:- தேவா என்ன டா சொல்லுற? வாய மூடு. மெடம் அண்ணனுக்கு இப்ப இதெல்லாம் பாத்துக்க முடியாது! யாரு அவர் கூட பேசினாலும் இப்படி தான் சொல்றாரு. ஒரு விபத்துல தல பலமா அடி பட்டதனால மெமரிலாஸ் ஆயிருச்சு. அதனால தா எனக்கு எடுத்து கவனுச்சுக்கலாம்னு.

பத்மினி :- ஆக ஒரு புத்தி சுயாதீனமற்றவர வச்சு சொத்து எழுத போறிங்க? அதுக்கு சட்டத்துல எடம் கெடயாதே ரஞ்சித்! உண்மயாகவே எக்ஸிடன்ட் ஆச்சா இல்லன்னா?

ரஞ்சித்:- உண்ம தான் மெடம். இப்ப தா இவரு வெளியுலகுக்கே வந்திருக்கார்!

பத்மினி :- ஆஹாஹா மிஸ்டர் தேவா இது நெஜமாவே நடந்ததா?

தேவா:- (கண்ணீர் வடித்தான் எதுவும் பேசவில்லை)

பத்மினி :- ரஞ்சித் எக்ஸிடன்ட் எதுவும் ஆகல்ல சொல்றேன் கேளுங்க. ஒங்க அண்ணன் தேவா 2018. 05.03 இரவு பத்து மணியளவில இருந்து இன்னக்கி 2020. 08.03 ஆம் திகதி காலை பத்து மணி வரை எங்க போயிருந்தாரு? திகதி சரியா இருக்கா தேவா? கிட்டத்தட்ட இரண்டறை வருடஷங்களுக்கு முன்னாடி மர்மமான ஒரு நபர் அப்டி இல்லன்னா உயிரோடு இல்லாத ஒரு நபர் இப்ப வந்திருக்காருனா அதுக்கு என்ன அர்த்தம்? இத நாம எப்படி புரிஞ்சிக்குறது? நீங்க இந்த ஒலகத்துல தானே இருந்திங்க?

ரஞ்சித்:- அது வந்து அண்ணன யாரோ கடத்தி இருந்தாங்க! நா காப்பாத்திட்டன். இல்ல அவர்கு விபத்து. நா என்ன சொல்றது?

பத்மினி :- ஆ…. ஆரம்பத்துல விபத்து. இப்ப கடத்தலா? சரி தேவா கெடச்சுதுமே காவல் துறைக்கு சொல்லிருக்கலாமே? அப்ப இவரு இருந்த இடம் தெரிஞ்சிருக்கு?

ரஞ்சித்:- இங்க பாருங்க ஒங்கள நா எந்த வேலைக்கு அழச்சனோ அத மட்டும் பாருங்க! அது இல்லாம.

பத்மினி :- டைம் வேஸ்ட் பண்ணாதிங்க உண்மைகள சொல்லுங்க சார் நீங்க வாங்க.

ரோஷன் :- மிஸ்டர் ரஞ்சித் ஒங்க அண்ணன அவருடைய சொத்துக்கள அடயனும்ன நெனச்சி கடத்தி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலா மறச்சி வச்சிருக்க! அவரோட பல கோடி பணங்களை வீணான விடயங்களுக்கு செலவு பண்ணிருக்க! இந்த விடயங்களுக்காக ஒன்ன நா கைது பண்ணுறே!

சிவராம் (உ.பொ.அ) :- அது மட்டுமா ரோஷன்?

ரோஷன் :- இன்னும் இருக்கு சார். 2018.05.03 இரவு பத்து மணிக்கு டைம் எக்ஸட்டா சொல்ல முடியாது. தேவா என்பவர் காணாம போயிருக்காரு என்னு கேஸ் வந்தப்போ என்ன இந்த கேஸ் சம்மந்தமாக விசாரிக்க சொன்னிங்க. இது சம்மந்தமாக விசாரனை நடத்தும் போது தான் என்னோட நண்பன் ரஞ்சித் என்ன சந்திக்கும் படி அழச்சாறு!

சிவராம்:- அதுக்கு அப்புறம்.

ரோஷன் :- இந்த கேஸ் சம்மந்தமான எந்த க்ளுவுமே கெடக்காம இருந்த எனக்கு ரஞ்சித்தி மீட் பண்ணுணப்போ ஒட்டுமொத்த எவிடன்ஸும் எனக்கு கெடச்சது! பட் தேவா, ரமனி இவங்க யாரும் கெடக்க இல்ல. இத நா ஒங்க கிட்ட சொன்னப்போ இன்னும் நெருக்கமா பழக சொன்னிங்க! அதுகு பிறகு ரஞ்சித் கூட இன்னும் நெருக்கமா பழகி தேவா இருக்கிற எடத்த தெரிஞ்சிகிட்டேன். தேவா கூட பேசினேன். அவர் சொன்ன படியும், நீங்க சொன்ன படியும்.

சிவராம் :- சொல்லுங்க ரோஷன்.

ரோஷன் :- நீங்க ரெண்டு பேரும் சொன்ன படியே கிட்டத்தட்ட தேவா காணாம போயி ஒன்றறை வருஷத்துக்கு அப்பறமாக ரமனிய பாக்க நா போனேன். பட் ரமனி மூலமா எந்த ஹெல்பும் எனக்கு கெடக்கல! அதுகு அப்பறமா தான் தேவா எழுதின டயரிய ரமனியோட அம்மா கௌஷல்யா எனக்கு கொடுத்தாங்க. அத வெச்சுத்தா சொத்துக்களுடைய பத்திரம் இன்னும் தேவா சார் வச்சிருந்த கோடிக்கணக்கான நகைகள் எல்லாம் எடுத்து ஒங்க கைல ஒப்படச்சேன்!

சிவராம்:- மேல. இந்த விஷயத்துல ரஞ்சித் மட்டும் தனியா இயங்குனாரா? இல்லன்னா?

பத்மினி :- இல்ல சார். ரஞ்சித், தேவராமன் டாக்டர், ரமனியோட அம்மா கௌஷல்யா இவங்க மூனு பேரும் தா இத பண்ணிருக்காங்க. இதுல ரஞ்சித் மெயின் கெரெக்டர் சார்! இவங்க மூனு பேரும் தேவாவோட நெருங்கிய நண்பர்கள் அவரோட கூடவே இருந்து கிட்டு சொத்துக்கள பிடுங்கி அனுபவிக்கலாம்னு திட்டம் போட்டிருக்காங்க! இதனால தேவா சார ரஞ்சித் கடத்தி இருக்காறு மத்த ரெண்டு பேரும் ஒடந்தயா இருந்து இருக்காங்க! இது ரோஷன் சார் சுந்தரம், சாவித்திரி மூலமாக தெரிஞ்சி கிட்டது!

ரோஷன் :- சார் சொத்து பூராகவும் தேவா, ரமனு பேர்ல எழுதியிருக்கு!

ரஞ்சித்:- போதும் நிறுத்துங்க இவங்க சொல்றது எல்லாம் பொய்! நா முன்னாடி சொன்னது தா நிஜம்!

ரோஷன் :- பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். ரஞ்சித் ஒங்க கிட்ட ப்ரூப் பண்ண எவிடன்ஸ் இருக்கா?

ரஞ்சித்:- டேய் துரோகி நண்பா நண்பானு சொல்லி இப்படி பண்ணிட்டியேடா? ஒன்ன.

ரோஷன் :- நான் துரோகி இல்ல ஒரு பொண்ணோட கண்ணீர காப்பாத்திட்டேன்.

பத்மினி :- சார் எதுக்காக இன்னும் வெய்ட் பண்ணனும் இவனையும், இந்த கழுதைகளையும் இப்பவே கைது பண்ணுங்க!

சிவராம்:- ரஞ்சித், தேவராமன், கௌஷல்யா ஒங்க மூனு பேரையும் ஒரு நபர கடத்தி சித்திரவதை பண்ணியதற்கும், அவருடைய சொத்துக்களை பலவந்தமாக பெற்று கொள்ள முயன்றமைக்கும் கைது பண்ணுறோம்!

ரஞ்சித்:- டேய் ஒன்ன சும்மா விட மாட்டேன் டா! என்ன இப்படி ஜெயில் மண்ண மிதிக்கிற படி பண்ணிட்டியே?

தேவராமன் :- இப்ப சரி ஒன்னோட இந்த வாய கொஞ்சம் மூடுறியா? அடடா இந்த பூனையும் பால் குடிக்குமா? போலிஸ் காரன் புத்திய காட்டிடான்!

கௌஷல்யா :- தேவா என்ன மன்னிச்சிருங்க. அம்மா ரமனி.

தேவா :- சட்டமும், இறைவனும் மன்னிக்கட்டும். நா அப்புறம் யோசிக்கிறன்.

பத்மினி :- இந்தாங்க தேவா இப்ப நீங்க வெளியுலகுதுல நிம்மதியாக வாழ முடியும்! ஒங்களோட கேஸ திரும்ப ஆராய்ச்சி பண்ணி நீங்க இருக்கீங்கண்ணு வெளிப்படுத்திட்டம்.

தேவா :- ரோஷன் நீங்க என் ரமனி கிட்ட என்ன சேத்துடிங்க எப்படி நன்றி சொல்லுறது?

ரோஷன் :- நன்றி எனக்கு வேண்டாம். ஒங்க வைப்கும், கடவுளுக்கும் சொல்லுங்க.. நா என் கடமய தான் செஞ்சேன்.

சிவராம்:- எப்பொழுதுமே களவு செய்யும் போது காவல் காரன பக்கத்துல வச்சுக்க கூடாது! குறிப்பா போலிஸ புரிஞ்சுதா? ரோஷன் ஒங்களுக்கு வழங்கப்பட்ட கேஸ சிறப்பா முடிச்சிடிங்க. ஷ்டேஷன்ல மீட் பண்ணுங்க.

பத்மினி :- ஹம் ஹம். நடயகட்டுங்கடா!

ரோஷன் :- மிஸிஸ் தேவா அதாவது ரமனி இப்ப புரிஞ்சுதா நான் யாருன்னு?

ரமனி: – ஒங்கள எப்படி சொல்றது? என்னோட தெய்வம்னு தான் சொல்லனும்!

ரோஷன் :- ஒங்க கேள்வி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. யார் நீ? நா ஒரு CID போலிஸ் ஆபிஸர். கிட்ட இருக்கிற வங்க யாரயும் நம்பாதிங்க. ஒகே. குட் பாய்.

தேவா :- ரொம்ப நன்றி ரோஷன் இது என் வாழ்க்கைல மறக்க முடியாத அனுபவம்!

தேவா:- நித்தியா எப்பவுமே வாழும் போது அடுத்தவரோட எந்த பொருளுக்கும் ஆச வைக்க கூடாது. அது தன்னையும் அழிச்சி, மத்தவங்களையும் அழிச்சிடும். வா நாம நம்ம வீட்டுக்கு போகலாம்.

சுபம்

போதும் என்ற எண்ணம் இல்லாமல் போனால் தான் ரஞ்சித்தின் கதி இப்படியாக ஆனது. தனக்கென்று விதித்ததிற்கு அமைய வாழப் பழக வேண்டும். அடுத்தவன் வயிற்றில் அடித்து பறித்து விட முனைந்தால் ரஞ்சித் ஆனால் இறைவனோ இவனது சூழ்ச்சியை முறியடித்து விட்டான். தேவா எப்பொழுதும் நியாயமாக உழைப்பவன், பேராசை அற்றவன் அதனால் தான் அவனுடையது அவனிடமே சென்றது. இந்த ரஞ்சித்தைப் போல பலர் ரஞ்சித் எனும் பெயர் ஏற்காது இந்த உலகத்தை ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர். இவர்களைப் போன்ற ஓநாய்களிடமிருந்து மனிதர்கள் ஜாக்கிரதை.

நியாயமாக சம்பாதிப்பது தான் உடம்பில் ஒட்டும்

முற்றும்

இத்தனை நாட்களாக ரசித்து வாசித்து வந்த வாசகர்களுக்கு நன்றிகள் கோடி! விமர்சனங்களை முன்வைக்கலாம்.

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies
South Eastern University of Sri Lanka

Leave a Reply