இது ஊர்க்கு மட்டும் தெரிஞ்ச கத இல்ல. FACEBOOK லயே வந்த கத

  • 11

திருப்பு முனை
பாகம் 9

“சும்மா யோசீங்க தங்கச்சி ஷரீப்ட உம்மா வாப்பா ஒஙட wedding கு வந்தாங்களா?”

“இல்லயே!”

“அவங்க ஏன் இவனோட கோவம் என்டு ஒஙல்க்கு தெரியுமா?”

“நானும் அத தான் தாத்தா யோசிக்கிறேன். ஆனா ஏன் பேசுறல்லன்டு எனக்கு தெரியா.”

“எல்லாத்துக்கும் காரணம் இரிக்கி தங்கச்சி.” என்ன என்பது போல் சலீமாவை பார்த்தாள் லீனா.

“நீங்களே சொல்லுங்க தங்கச்சி. எந்த மாமி ஊட்ல சரி மகன எதிர்த்து மருமகள்ட வாழ்க்ககாக வாதாடின மாமா மாமி இரிக்கிறாங்களா?”

“ஆனா ஷரீப்ட உம்மா வாப்பா அப்படி தான் இருந்தாங்க. ஷரீப்மொத பெண்டாட்டிட வாழ்க்கய நாசமாக்கினதால அவங்க யாரும் இவனோட பேசுறல்ல தெரிமா தங்கச்சி.”

“உண்மயாவா தாத்தா. எனக்கு நம்பவே ஏலா. இவர்ட divorce கு உண்மயிலயே என்ன காரணம் தாத்தா?”

“இவன் முடிச்சா பொண்டாட்டிக்கி ஒழுங்கா இரிந்திருக்கனுமே. இவன் முடிக்க முன்னுக்கு இருந்து ஒருத்தியோட தொங்கிட்டு இருந்தான். அதும் அவள் ஒரு புள்ளகுட்டிகாரி. முடிச்சி குடுத்தா சரி அவள மறந்துட்டு கட்டினவளோட நல்லா இருப்பானுன்டு பாத்து தான் இவன மொத முடிச்சே குடுத்தாங்க.”

“ம்ஹூம். இவன் எங்க திருந்தினான். முடிச்சும் அதே கூத்து தான். அவவும் எவ்வளவு நாளக்கி தான் பொறுக்க. சொல்லி சொல்லி பாத்தா இவன் கேக்குற மாதிரி இல்ல. அதனால தான் அவ இப்படி ஒரு வாழ்க்கயே வானான்டுட்டு பெய்த்தா. அவவும் ஒஙல மாதிரி தான் தங்கச்சி நல்ல குட்டி ஒன்டு அதும் சின்ன வயசு.”

“அந்த புள்ளகுட்டிகாரிட பேர் என்னா?”

“அவட உண்மயான பேர் தெரியா. ஆனா ரோஸின்டு தான் அவள கூப்புடுற.”

“ரோஸி.”

லீனா அந்த பெயரை ஒரு முறை உச்சரித்து விட்டு ஓர் குறுஞ்சிரிப்புடன் சலீமாவை பார்த்தாள்.

“எனக்கு அவள தெரியும் தாத்தா.”

“தெரியுமா? எப்படி!” லீனா அன்று நடந்தவற்றை சொன்னாள்..

“ஏன் அவள்கு மாப்புள இல்லயா?”

“ஏன் இல்லாம இரிக்கி. அது ஒரு சொத்தி ஒன்டு பொண்டாட்டிய அடக்கி வெக்க தெரியாதது.”

“ச்சீ” என்றிருந்தது லீனாவுக்கு.

“அப்படி என்டா நா சந்தேகப்பட்டது சரி தான் தாத்தா. இவர் வெளிய போறன்டுட்டு அவள பார்க்க தான் போறாரு Sometimes அங்கயே தின்டுட்டும் வாற போல அதனால தான் இங்கட சாப்பாடு எரங்குதில்ல. சரி தாத்தா இந்த கத இங்க ஊர்ல எல்லாருக்கும் தெரியுமா?”

“ஓ. தெரியுமே.”

“அதுக்கோ தெரியா இவர் யாரோடயும் எனக்கு தனிய பேச உடுறதும் இல்ல. எங்கயும் கூட்டி போறதும் இல்ல.”

“அதுக்கே தான் தங்கச்சி. இது ஊர்க்கு மட்டும் தெரிஞ்ச கத இல்ல. FACEBOOK லயே வந்த கத.”

“ஆ அதெப்படி தாத்தா.”

லீனா ஆச்சரியமாக கேட்டாள்.

“பொம்புள புள்ளட வாழ்க்கய நாசமாக்கினா. குடும்பத்து ஆள்கள் சும்மா உடுவாங்களா. அதான் FBலயே போட்டாங்க. இவன்ட லெச்சனத்த. அதுமட்டுமில்ல ஊர் பள்ளிக்கும் அவங்க letter குடுத்து இவன வோர்ன் பண்ண சொல்லி.”

லீனாவுக்கு ஷரீப்பை நினைத்து கோபம் வந்தது.

“ஆனா நல்லா plan பண்ணி தான் தங்கச்சி ஒஙல முடிச்சி குடுத்து இரிக்கிறாங்க. படிச்ச புள்ள தானே நீங்க கொஞ்சம் சரி யோசிச்சி பாக்குறல்லயா.”

“நா இவ்வளவு தூரம் யோசிக்கல்ல தாத்தா. ஒன்டும் தேடி பாக்கவும் இல்ல தெரிஞ்சவங்க தானே என்டு. இவர் ஒரு அப்பாவி என்டு தான் நா நெனச்சேன். ஆனா இவ்வளவு cheap ஆ நெனக்கல்ல தாத்தா.”

“கண்ணால பாக்குறது எல்லாம் உண்மயாவிடாது தங்கச்சி எதயும் தேடி பார்த்தா தான் உண்ம வெளங்கும்.”

“நீங்க சொல்றது உண்ம தான் தாத்தா. நானும் விளாட்டுதனமாவே இருந்துட்டேன்.”

“ஆனா இன்னும் ஒஙல்க்கு ஒன்டும் கெட்டு போவல்ல தங்கச்சி. ஒஙட ஊட்டுல பேசி இதுக்கு ஒரு முடிவு எடுங்க.”

“ஆனாலும் தாத்தா இத பத்தி ஊட்ல பேச ஏலா. இவரும் கிட்ட தான் இரிப்பாரு call பேசகொல.”

“ஒங்களுக்கு என்டு 4nஒன்டு தரல்லயா. பாப்பம் ஏன்ட சின்ன 4nஒன்டு இரிக்கி அத தாரேன். பேசிட்டு தாங்க.”

“சரி தாத்தா உண்மயிலயே இது எனக்கு பெரிய ஒதவி ஒன்டு”

“இல்ல தங்கச்சி நீங்களும் ஏன்ட தங்கச்சி மாதிரி. ஒஙட நல்லதுக்கு தான் சொல்றேன். ஏலும்டா ஒஙட ஊருக்கே இவன கூட்டி பெய்த்து அங்கயே இரிங்க.” என்று கூறி விட்டு சலீமா சென்று விட்டாள்.

முதல் முறையாக லீனாவுக்கு ஷரீப்பின் மீது வெறுப்பும் குரோதமும் குடி கொண்டது. ஆனாலும் அவள் எதையும் வெளிக்காட்டவில்லை.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

திருப்பு முனை பாகம் 9 “சும்மா யோசீங்க தங்கச்சி ஷரீப்ட உம்மா வாப்பா ஒஙட wedding கு வந்தாங்களா?” “இல்லயே!” “அவங்க ஏன் இவனோட கோவம் என்டு ஒஙல்க்கு தெரியுமா?” “நானும் அத தான்…

திருப்பு முனை பாகம் 9 “சும்மா யோசீங்க தங்கச்சி ஷரீப்ட உம்மா வாப்பா ஒஙட wedding கு வந்தாங்களா?” “இல்லயே!” “அவங்க ஏன் இவனோட கோவம் என்டு ஒஙல்க்கு தெரியுமா?” “நானும் அத தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *