காலம் எனும் நதியினிலே

  • 7

காலம் எனும் நதியினிலே
காதல் படகிலேற்றி
கனவுகளை ஓடவிட்டேன்
கரைசேர இயலவில்லை
கண்ணீரில் மூழ்கிவிட்டேன்

கண்ணன் காலடித் தவமிருக்கும்
கோகுலத்தின் ராதை நான்
கூடிக்களிக்க காத்திருந்தும்
கோபாலன் போன திக்கறியேன்

பொருட்தேடி வாறேன் கண்ணே
பொறுத்திருப்பாய் என்றாயே
பார்த்த விழி பூத்திருக்கு
பத்திரமாய் வந்து மாலையிடு

காதல்பயிர் வளர்த்தவனே
கண்ணீரில் நீ வளர்த்தச்செடி
ஆலகால விஷமாகி
ஆயுளையும் அழித்திடுமோ

ஊண் எனக்குப் பிடிக்கவில்லை
ஊர்வாய்க்கு உலை மூடியில்லை
உள்ளம் கிழிக்கும் பேச்சதனால்
உறக்கம் என்னை தழுவவில்லை

காலம் எனும் நதியினிலே
கரை சேர்வோம் கைக்கோர்த்து
திரைகடலோடிய திரவியங்கள்
தீர்த்திடுமோ மனத்துயரை
திலகமதை நீ தொட்டுவைத்தால்
தித்திக்கும் வாழ்நாட்கள்

நஷீரா ஹஸன்
கேகாலை.

காலம் எனும் நதியினிலே காதல் படகிலேற்றி கனவுகளை ஓடவிட்டேன் கரைசேர இயலவில்லை கண்ணீரில் மூழ்கிவிட்டேன் கண்ணன் காலடித் தவமிருக்கும் கோகுலத்தின் ராதை நான் கூடிக்களிக்க காத்திருந்தும் கோபாலன் போன திக்கறியேன் பொருட்தேடி வாறேன் கண்ணே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *