அவள்களுக்குள்  அவள் ஒருவிதம்

  • 9

அவள் அப்படித்தான் இல்லை
அவள் அப்படி இல்லை
அவள் அவள்களுக்குள் ஒரு விதம்
அவள் எப்படி என்று அறிவது எப்படி.

குறும்புகளும் அவளிடம் தஞ்சம்
கோர கோபங்களும் அவளிடம் தஞ்சம்
இரத்தத்தை பாலாக்கும்
பாசமும் அவளிடம் தஞ்சம்
துரோகியை மன்னிக்கும்
தயாளக் குணமும் அவளிடம் தஞ்சம்

எதிரியை அழிக்கும் வீரமும்
அவளிடம் தஞ்சம்
ஆணினம் தாங்கா பிரசவ வலி
அவளிடம் தஞ்சம்

கேட்க விரும்பா கேள்விகளும்
சொல்லத் தயங்கும் பதில்களும்
அவளிடம் தஞ்சம்
வார்த்தைகளில் அன்பை
மெல்லினமாய் ஒலிக்கும்
ஆணினம் கணவனாய் அவளிடம் தஞ்சம்

பக்குவமாய் பெற்று எடுக்கும்
பிள்ளைகளும் அவளிடம் தஞ்சம்
தள்ளாடும் வயததில்
தன்னைப் பெற்றெடுத்த
பெற்றோரும் அவளிடம் தஞ்சம்

மனமொன்று அவளிடம் கல்லாகிவிட்டதுவோ
மீண்டும் நீ நிலைகொள்ள நினைக்கையில்
உன் எதிர்பார்ப்போ அவளிடம்
அடைக்கலம் பெற முடியா தஞ்சம்

நிந்தவூர் றிசாமா
SEUSL

அவள் அப்படித்தான் இல்லை அவள் அப்படி இல்லை அவள் அவள்களுக்குள் ஒரு விதம் அவள் எப்படி என்று அறிவது எப்படி. குறும்புகளும் அவளிடம் தஞ்சம் கோர கோபங்களும் அவளிடம் தஞ்சம் இரத்தத்தை பாலாக்கும் பாசமும்…

அவள் அப்படித்தான் இல்லை அவள் அப்படி இல்லை அவள் அவள்களுக்குள் ஒரு விதம் அவள் எப்படி என்று அறிவது எப்படி. குறும்புகளும் அவளிடம் தஞ்சம் கோர கோபங்களும் அவளிடம் தஞ்சம் இரத்தத்தை பாலாக்கும் பாசமும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *