சும்மா லூசு மாதிரி உளராதே

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 19】

அத்திலாந்திக் கடலை கிழித்து கொண்டு பயணமான டேஞ்சர் வூட் கப்பல் மாரியா நிக்கலஸ், கேப்டன் குக் மற்றும் அவனது ஆட்களுடன் நொடிப்பொழுதில் காணாமல் போனது.

மறுபுறம் யுவான் எஞ்சினை வேகமாக இயக்கி வருகிறான். இருந்தும் அந்த ஆராய்ச்சி கூட கப்பல் அவர்களை விடுவதாக இல்லை.

“சார் அவங்க நம்ம பிளான் எல்லாத்தையும் பிளாஷ்ல போட்டு எடுத்துட்டு போறாங்க. கவர்மென்டுக்கு தெரியாம நாம பண்ணுற இந்த ஆராய்ச்சி பத்தி வெளியாளுங்க தெரிஞ்சிக்கிட்டா பெரிய பிரோப்ளேம் ஆகிடும்.” என்றான் ஒருவன்.

“அவங்க நமக்கெதிரா பெரிய தப்பு பண்ணிட்டாங்க. நம்ம ரகசியத்தை தெரிஞ்சிகிட்டது மட்டுமில்லாம ஆராய்ச்சிக்கு வெச்சிருந்த அரிய மீன்களை விடுவிச்சிட்டாங்க. இதுக்கு அவங்கள நான் சும்மா விடமாட்டேன். அவங்க கரையை அடைவதற்கிடையில் அவங்கள கண்டுபிடிச்சி கொன்னுடனும்.” என்றான்.

அதே நேரத்தில் தப்பித்து சென்று கொண்டிருந்த யுவான் மற்றும் படகில் இருந்த மற்றவர்கள் மூவரும் தொடர்ந்து மாறி மாறி நீரை இறைத்து கொண்டிருந்தனர்.

“இப்படியே பண்ணிட்டு இருந்தா சீக்கிரம் நாம களைப்பாயிடுவோம். கரையை அடையும் போது நம்ம கருவாடு தான் மிஞ்சும்.” என்றான் ஜிம்சன்.

“சும்மா லூசு மாதிரி உளராதே.” என திட்டினாள் லில்லி.

“இல்ல லில்லி அவன் சொல்றது சரிதான். ஒன்னு நாம ஏதாவது ஒரு கரையை கண்டுபிடிச்சி கப்பலை சரிபண்ணியாகனும். இல்லேன்னா கடல்லியே சாகனும்.” என்றான் யுவான்.

“நோ” என்ற ஐரிஸ் மீண்டும் பேசினாள்.

“இங்க யாரும் சாகப்போறதில்லை. ஓடிட்டு இருக்குற என்ஜின் போர்டை சரிபண்ணக்கூடிய அளவுக்கு எங்களுக்கு திறமை இருக்கு. நாங்க படிச்சதெல்லாம் இப்படி தண்ணியிலேயே வீணா போறதுக்கா?” என கேட்டாள்.

அதற்கு லில்லி “அர்ரா சக்க. அப்படி போடு ஐரிஸ் நாங்க ரெடி.” என்றதும் யுவான் தைரியத்தோடு சிரித்தான்.

என்ஜின் போர்டில் உள்புறமாக உள்ள பக்கத்தில் கிடைத்த பொருட்களையும் அவர்களின் ஆயுதங்களையும் பயன்படுத்தி மூவரும் கப்பலை திருத்தம் செய்ய ஆரம்பித்தனர். இந்த இடத்தில் ஐரிஸ் பேசிய தன்னம்பிக்கையான வார்த்தைகள் யுவானுக்கு மிகவும் பிடித்து போயின.

சுபிரியண்ட் வந்து கொண்டிருந்த போர்க்கப்பலின் ஒலி மட்டும் இடையறாது கேட்டுக்கொண்டே இருந்தது.

“அவங்க நம்மை நெருங்கிட்டாங்க என்னு நினைக்குறேன்.” என்றாள் லில்லி.

“ஆமா அபாய எச்சரிக்கை ரொம்ப பக்கத்தில் கேக்குது. ஐரிஸ் வேலை முடிஞ்சிடுச்சி போல.”

“ஆமா இனி எந்த பிரச்சினையும் இல்லை.” என்றாள் ஐரிஸ்.

“சரி நீயும் நானும் ஒரே நாடுதான். ஆனா உங்க ஊர் எது?” என்று கேட்டான் யுவான்.

“அது வந்து” என்று ஏதோ சொல்ல வரும் போது திடீரென அலைகள் வேகமாக ஆட ஆரம்பித்தன.

“ஷிட அதோ அவங்க கப்பல் வந்துடுச்சு.” என்று ஜிம்சன் காட்ட ஆராய்ச்சி கூட கப்பல் வேகமாக வந்து விட்டது. அது இவர்களை கண்டு தாக்க ஆரம்பித்தது.

“மறுபடியுமா?” என்று கத்தினாள் லில்லி.

யுவான் எஞ்சினை வேகமாக ஓட்டினான். அவர்களும் விடுவதாக இல்லை. பீரங்கி வேட்டுக்களை இறக்கி கொண்டே இருந்தனர். அந்த களேபரத்தில் கடலும் கோர தாண்டவம் ஆடியது. அதனால் இவர்களுக்கு சரியாக போர்டை இயக்க முடியவில்லை. அடுத்த குண்டில் போர்டுக்கு மிக அருகில் வெடி ஏற்பட போர்டும் உள்ளே இருந்தவர்களும் அப்படியே நீரில் மூழ்கிப்போனார்கள்.

தாங்கள் நினைத்த காரியம் இனிதே நடைபெற்றத்தை எண்ணி மகிழ்ச்சியுடன் சுபிரீயண்டும் அவனது ஆட்களும் கொண்டாட ஆரம்பித்தனர். நமது குழு பயணித்த இடம் வெறுமையாக இருந்தது.

தொடரும்.
A.L.F. Sanfara

Leave a Reply