என்னுலக சாதனை நீ

  • 9

விழிநீர் வருகையில் விரல்கள் நனையுதே
துணையாய் அங்கு தூக்கம் கலையுதே
காரணம் காட்டிச் சென்றவளே
ஓர் காவியம் ஏட்டில் தந்தவளே

சோகங்கள் எனக்குள் ராகங்கள் இசைக்குது
மேகங்கள் எனக்கும் தாகங்கள் காட்டிச் சிரிக்குது

என் விம்பங்களில் விழிநீர் விழுந்திடக் கண்டேன்
என் உயிர்நாடித் துடிப்பில்
அந்தக் கண்ணாடியும் உடைந்திடக் கண்டேன்
வேதனைகள் தந்த சாதனைகள்
இவையென்றே எனக்குள் பல
போதனைகளையும் ஏற்றுக் கொண்டேன்

வேண்டாம் என்றே என்னை மறுக்கிறாய்
வேண்டும் என்றே என்னை வெறுக்கிறாய்
வேதனை தந்த நீயோ
எனக்குச் சோதனை என்பேன்
உன்னை அடைவதே
என்னுலக சாதனை என்பேன் !

ஐ.எம்.அஸ்கி
கவியிதழ் காதலன்
அட்டாளைச்சேனை-08

விழிநீர் வருகையில் விரல்கள் நனையுதே துணையாய் அங்கு தூக்கம் கலையுதே காரணம் காட்டிச் சென்றவளே ஓர் காவியம் ஏட்டில் தந்தவளே சோகங்கள் எனக்குள் ராகங்கள் இசைக்குது மேகங்கள் எனக்கும் தாகங்கள் காட்டிச் சிரிக்குது என்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *