டோரடோ மர்ம தீவை அடைந்த கப்பல்கள்

  • 13

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 20】

ஐரிஸ் கண்ணை திறந்து பார்த்த போது ஏதோ ஒரு தீவில் கரையொதுங்கி கிடந்தார்கள். பக்கத்திலேயே ஜிம்சனும் கிடந்தான். ஆனால் லில்லியும் யுவானும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. அதனால் பதட்டமடைந்த ஐரிஸ் அவசர அவசரமாக ஜிம்சனை எழுப்பி விஷயத்தை சொன்னாள். இருவரும் எழுந்து மற்ற இருவரையும் தேட ஆரம்பித்தனர். அவங்க இன்னும் ரொம்ப தூரத்தில் விழுந்து கிடந்தார்கள்.

“யுவான்! லில்லி!” என்று ஓடோடிப்போய் அவர்களையும் எழுப்பி நிறுத்தினால் எல்லோருடைய பார்வையும் அங்கு கடலில் நின்றுகொண்டிருந்த ஏகப்பட்ட கப்பல்கள் மீது சென்றது.

“ஒஹ் மை காட் இவ்வளவு கப்பல்களா?” என்று வாயை பிளந்தான் ஜிம்சன்.

“நாம இப்போ எங்க இருக்கோம். மே பி இது ஒரு ஹார்பரா இருக்குமோ” என்றாள் லில்லி.

அங்கு எண்ணற்ற கப்பல்கள் மட்டுமன்றி சில ஏரோப்பிளேன்களின் ஒரு பகுதியும் கடலுக்குள் தெரிந்தது. அப்போது தான் அதில் ஒரு கப்பலை யுவான் அடையாளம் கண்டு கொண்டான்.

“இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.” என்றான் ஆச்சர்யத்துடன்.

“என்னது என்ன சொல்ல வரீங்க?” என்றாள் ஐரிஸ்.

“அதோ இருக்குல்ல அந்த கப்பல். அது காணாம போய் நாலு வருஷம் ஆகுது. ஆனா இப்போ அது இங்க இருக்கு.” என்றான்.

“எப்படி சொல்லுறீங்க?”

“ஏன்னா அந்த கப்பல்ல தான் என்னோட தாத்தா பாரிஸுக்கு போனாரு.”

“அடி ஆத்தி” என்றான் ஜிம்.

“அப்போ அவர் உயிரோட இருப்பாரு என்கிறாயா?”

“தெரியல. அப்படி இருந்தா அவர் இந்த தீவுக்குள்ள தான் எங்கயாவது இருக்கணும்.” என்றான்.

“சரி நாம எப்படி இங்க இருந்து தப்பிக்கிறது?”

“அதுக்கும் இந்த தீவுதான் வழிகாட்டனும்.” என்றான்.

ஐரிசுக்கு அவள் உள்ளுணர்வு ஒன்றை சொல்லிக்கொண்டே இருந்தது. அவளுக்கு மிகவும் நெருக்கமான யாரோ இங்கதான் இருக்காங்க என்பதே அது. இவர்கள் நால்வரும் தீவுக்குள்ள அடியெடுத்து வைத்தார்கள். இதனை அங்கு நின்று கொண்டிருந்த டேஞ்சர் வூட் கப்பலில் இருந்து ஒரு உருவம் பார்த்து கொண்டே இருந்தது.

போகிறவழியெங்கும் அமானுஷங்கள் நிறைந்துள்ள பாழடைந்த இடத்தை போலவே இருந்தது. ஆனால் காடுகளை தாண்டி உயரமான மலைப்பகுதி தெரிந்தது. அங்கு புகை வருவது போலவும் இருந்தது.

“கண்டிப்பாக இங்க ஆளுங்க இருக்காங்க. ஒன்னு இந்த தீவு வாசிகளா இருக்கலாம். இல்லை என்னா இங்க மாட்டிகிட்ட வெளியே போக வழி தெரியாம மாட்டிகிட்டவங்களா இருக்கலாம்.” என்றான் யுவான்.

“அந்த பெண்ட்ரைவ் யார்கிட்ட இப்போ இருக்கு?” என்று ஐரிஸ் கேட்டாள்.

உடனே யுவான் அவன் சட்டையில் காற்றுப்புகா பையில் கட்டி முடிஞ்சி வைத்திருந்த பென்ட்ரைவை காட்டினான்.

“நாம செத்துட்டோம் என்னு அவங்க தப்பா நினைச்சிட்டு இருப்பாங்க. அதுவும் ஒருவகையில் நல்லது தான். இங்க இருந்து தப்பிச்சதும் முதல் வேலையாக எங்க டெபார்ட்மெண்டில் இதை கொடுத்து அவங்க அத்தனை பேரையும் கூண்டோடு அடைக்கணும்.” என்றான்.

“சரி சரி வாங்க இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்” என்று ஜிம் ஒரு வழிகாட்டி போல கம்பை குத்தி கொண்டே முன்னே நடந்தான். இப்போதும் கூட யாரோ இவர்களை பின்தொடர்வது போல இருக்கவே சட்டென்று ஐரிஸ் திரும்பி பார்த்தாள். அங்கு யாரும் இல்லை.

“ஸ்ட்ரேஞ்” என்று முணுமுணுத்து கொண்டே சென்றாள்.

நீங்க எல்லோரும் நினைக்கிறது சரிதான். இப்போ இவர்கள் இருக்குற இடம் தான் டோரடோ தீவு. இது எங்க இருக்குன்னு எல்லோரும் தேடிட்டு இருந்தாங்க. இது பெர்முடா முக்கோண வலயத்தில் மையத்தில் தான் இருக்கு. இந்த இடத்தை யாராலும் பார்க்க முடியாது. ஏன்னா இங்க முழுக்க முழுக்க பனி மூட்டமா இருக்கும் அதுவும் கடல் தோற்றத்தில்

சோ தூரத்தில் இருந்து பாக்குறவங்களுக்கோ மேலே இருந்து பாக்குறவங்களுக்கோ தீவு தெரியவே மாட்டாது. அதுக்கு பதிலா கடல் தான் தெரியும். இந்த இடத்தில் ஒரு மலை இருக்கு அது முழுக்க முழுக்க சல்பரால உருவானது. அதாவது பூமிலேயே மிகப்பெரிய காந்தம். அதோட ஈர்ப்பு சக்தி அந்த மண் பூரா பரவி இருக்கு. அதனால தான் கப்பல்களும் விமானங்களும் இங்க தன்னாலேயே இழுப்பட்டு வந்து இருக்கு.

காட்டுக்குள்ள போறவங்க என்ன ஆனார்கள்? ஐரிசோட அப்பா அம்மாக்கு என்னாச்சு. இந்த தீவொட ரகசியங்கள் என்னென்ன என்பதெல்லாம் அடுத்த எப்பிசோட்ல பாக்கலாம்.

தொடரும்.
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 20】 ஐரிஸ் கண்ணை திறந்து பார்த்த போது ஏதோ ஒரு தீவில் கரையொதுங்கி கிடந்தார்கள். பக்கத்திலேயே ஜிம்சனும் கிடந்தான். ஆனால் லில்லியும் யுவானும் எங்கு…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 20】 ஐரிஸ் கண்ணை திறந்து பார்த்த போது ஏதோ ஒரு தீவில் கரையொதுங்கி கிடந்தார்கள். பக்கத்திலேயே ஜிம்சனும் கிடந்தான். ஆனால் லில்லியும் யுவானும் எங்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *