வாழ்வில் வசந்தம் ஏற்படுத்தும் விதமாக புத்தாண்டை திட்டமிடுவோம்!

  • 83

இஸ்லாமிய புதுவருடத்தை கொண்டாடும் இச் சந்தர்பத்தில் உங்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நாம் கடந்து வந்த ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டு ஸ்த்திரமற்ற ஆட்சி நிலமை¸ இலங்கை உட்பட உலகத்தையே ஆட்டிப் படைத்த கொரோனா நோய்த் தொற்று பரவல்¸ காட்டுத் தீ¸ நிலநடுக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்களை தாண்டி இஸ்லாத்தின் புதுவருட முதல் மாதமான வசந்தமிகு முஹர்ரத்தை அடைந்துள்ளோம்.

குறிப்பாக இனமத வயது பேதமின்றி சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள்¸ இளைஞர்களின் தொழில் மற்றும் உயர் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு¸ சுற்றுலாத்துறை¸ விவசாயத்துறை¸ சர்வதேச வர்த்தகம்¸ சர்வதேச ரீதியில் நடைபெறவிருந்த பல விளையாட்டு நிகழ்ச்சிகள் பிற்போடப்பட்டு முழு நாடும் பொருளாதார¸ சமுக ரீதியில் வீழ்ச்சியை சந்தித்து மீண்டு வரும் நிலையில் புது வருடத்தை அடைந்துள்ளோம்.

முஹர்ரம் வசந்தம் என்பது போல் இலங்கையிலும் தற்போது வசந்தம் வீச ஆரம்பித்துள்ளது. அதன் அறிகுறிகளாக முஸ்லிம்கள் சர்வதேச ரீதியில் இஸ்லாமிய புது வருடத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இலங்கையில் 2/3 பெரும்பான்மை பலத்துடன் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் கன்னியமர்வு இடம்பெற்றது. மேலும் கடந்த 6 மாதங்களாக முன்பள்ளிப்பருவம் முதல் பல்கலைக்கழகம் வரை தடைப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மீள் ஆரம்பிக்கப்பட்ட வண்ணமுள்ளது. தடைபட்டிருந்த சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றை மீள் ஆரம்பிக்கும் விதமாக விமான நிலையங்களையும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது முஹர்ரம் வசந்தமான மாதம் என்பது போல் இலங்கையிலும் வசந்தம வீச ஆரம்பித்துள்ளது.

வணக்க வழிபாடுகளில் பொடுபோக்காகி உலக இன்பத்தில் மூழ்கிக் கொண்டிருப்போரே! நீங்களும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு உறுதி பூணுங்கள். குறிப்பாக கல்வி நடவடிக்கைகள் மீள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களும் இளைஞர் யுவதிகளும் தமது கல்வியை மீள ஆரம்பிப்பதில் பொடுபோக்குடன் உள்ளமை கவலையான விடயாகும். எனவே கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களே! இளைஞர் யுவதிகளே! உங்கள் பொடுபோக்கை விட்டுவிட்டு கற்றல் நடவடிக்கையில் மீளக் கவனம் செலுத்துவதாக உறுதி பூணுங்கள்.

இவ்வாறான புது வருடத்தில் நாமும் நம்மில் உள்ள வணக்கவழிபாடுகளில் பொடுபோக்கு¸  சோம்பல்¸ நேரத்தை வீணாக்குதல்¸ இறந்த காலம்¸ எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருத்தல் போன்ற தீய பழக்கங்களை தம்மிலிருந்து நீக்கி நமது இம்மை மறுமை நாளில் வசந்தத்தை ஏற்படுத்தும் விதமாக புத்தாண்டை திட்டமிடுவோம்.

அனைவருக்கும் இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Ibnuasad

இஸ்லாமிய புதுவருடத்தை கொண்டாடும் இச் சந்தர்பத்தில் உங்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். நாம் கடந்து வந்த ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டு ஸ்த்திரமற்ற ஆட்சி நிலமை¸ இலங்கை உட்பட உலகத்தையே…

இஸ்லாமிய புதுவருடத்தை கொண்டாடும் இச் சந்தர்பத்தில் உங்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். நாம் கடந்து வந்த ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டு ஸ்த்திரமற்ற ஆட்சி நிலமை¸ இலங்கை உட்பட உலகத்தையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *