உனக்குரிய நாள்

  • 45

“மனிதா ! நீ காலையில் எழுந்து விட்டதுடன் உன் வாழ்க்கை ஆரம்பித்து விட்டது. நீ வாழ்வதற்கு இன்று போதும், நேற்று சென்றுவிட்டது நாளை இன்னும் வரவில்லை. இதுதான் உனக்குரிய நாள் இது போதும் ஒரு நாள்தான் எனவே உனது வாழ்க்கையை இன்றைய நாளில் அமைத்துக்கொள்.

‘தினமும் காலையில் எழும்பி ஏன்? எதுக்கு என்ற ஒரு அடைவு, இலட்சியம் இல்லாமல் பிறந்தோம், வாழ்கிறோம் ஒரு நாள் மரணிப்போம் என்ற ஒரு குறுகிய சிந்தனையுடனே பலர் வாழ்வை கழிக்கின்றனர் அதனை உடைத்தெரிவோம்.

‘நீ இன்று பிறந்து இன்று இருப்பவனை போன்றவன் எனவே நேற்றைய கவலையில், துக்கத்தில், தோல்வியில், சிந்தனையில் உனது வாழ்க்கையை கேள்விக்குரியாக்கிவிடாதே. ‘நாளையை எதிர்பார்த்து அந்தப் பயத்தில் ,கவலையில் உனது வாழ்க்கை வெறும் அர்த்தமற்றதாக இருப்பதற்கு காரணமாகி விடாதே.

“இன்றைக்கு மட்டும் முழு கவனத்தையும் செலுத்து உனது திறமை ,முயற்சி, உழைப்பு ஆகிய அனைத்தையும் இன்றைக்கு மட்டும் பயன்படுத்து இன்றைய நாளை உன் இரு உலக வாழ்க்கைக்கும் பங்கிடு, மறுமைக்காக இவ்வுலக வாழ்க்கையில் நன்மையை பயிரிடு, நல்லறங்கள் செய், நீ செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேள்.

“உலகத்தில் உனக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளவனாக, சாதனை செய்யாமல் மறுமை பயணத்திற்குத் தயாராகி விடாதே. அவ்வாறு செல்வாயாகின் உன்னைப்போல் நஷ்டவாளி வேறு யாருமில்லை.

‘இன்றைய நாளில் மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும், அமைதியுடனும், நிம்மதியுடனும் வாழு. உனக்கு கிடைத்த அருள்களில் திருப்திக்கொள். உன் குடும்பம் மனைவி, கணவன் குழந்தை, வேலை, வீடு, பதவி ஆகிய அனைத்திலும் மனத்திருப்தியுடன் செயல்படு. இல்லாவிடின் நிம்மதியை இழந்து விடுவாய்.

“நீ உறுதியான கூர்மையான சிந்தனையுடன் போராடினால் நான் இன்றைக்கு மட்டுமே வாழ்வேன் எனும் முடிவுக்கு உனது மனதை உன்னால் பணிய வைத்து விட முடியும்.

“அப்போது இன்றைய நாளில் ஒவ்வொரு வினாடியிலும் உன் இருப்பை உன்னால் கட்டமைத்துக் கொள்ள முடியும்.  உனது திறமைகளை வளர்க்கும், உனது செயல்பாடுகள் இறைவன் பக்கம் செல்லும், மனிதர்களுக்காக உழைப்பாய் எனவே எல்லா வேலையும் இன்றைக்காக என்று அமைத்தல் இன்றைக்கு மட்டும் நான் வாழப்போகிறேன் என்ற சிந்தனையை மனதில் ஆழப்பதித்தல்.

நாளைய நாள் கண்ணுக்குத் தெரியாத கற்பனைகளுடன் வாழாதே. நாளையைப் பற்றி கவலைப்படாதே எதிர்க்காலத்தைப் பற்றி சிந்திக்காதே வந்திருக்கும் சோதனைகள் எண்ணி மனம் புழுங்காதே.

“எனவே உனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை நாளையே நாள் எனக்கு இல்லை.. இன்று ஒரு நாள் தான் என் வாழ்க்கை என்று உணர்ந்து உன்னை படைத்தவனுடன் அதிகமான தொடர்பை ஏற்படுத்தி உனக்கும் சமூகத்திற்கும் பயனுள்ள ஒரு மனிதனாக இந்த ஒரு நாளை பயன்படுத்திவிட்டுச்செல்.

நீ உயர் இடத்தை பெறுவாய். உன்னை படைத்தவனுடன் அதிக தொடர்பு வைப்பது, உலக இச்சையின் பின்னால் செல்லாமல் விலகி இருப்பது மற்றவர்களின் பார்வையில் இழிவாகவும், நகைச்சுவையாகவும், கேவலமாகவும் தோன்றலாம் ஆனால் எதிலும் சலைக்காமல் உன் பயணத்தில் நீ பயணித்துக்கொண்டே இரு.

இன்றையே நாள் தான் உனக்குரியது என்பதை மறந்து விடாதே. புது விடியலாய் உதித்திருக்கும் முஹர்ரம் எனும் புதுவருடத்தில் புது மனிதனாக வாழ்வோம்.

இன்ஷா அல்லாஹ்

Faslan Hashim 
Licenciate in Islamic studies & Arabic language ®
South Eastern University of Sri Lanka
BA ®️

“மனிதா ! நீ காலையில் எழுந்து விட்டதுடன் உன் வாழ்க்கை ஆரம்பித்து விட்டது. நீ வாழ்வதற்கு இன்று போதும், நேற்று சென்றுவிட்டது நாளை இன்னும் வரவில்லை. இதுதான் உனக்குரிய நாள் இது போதும் ஒரு…

“மனிதா ! நீ காலையில் எழுந்து விட்டதுடன் உன் வாழ்க்கை ஆரம்பித்து விட்டது. நீ வாழ்வதற்கு இன்று போதும், நேற்று சென்றுவிட்டது நாளை இன்னும் வரவில்லை. இதுதான் உனக்குரிய நாள் இது போதும் ஒரு…

9 thoughts on “உனக்குரிய நாள்

  1. Hi there, I discovered your site by the use of Google while looking for a comparable matter, your site got here up, it seems good. I’ve bookmarked it in my google bookmarks.

  2. Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it. Look advanced to far added agreeable from you! However, how can we communicate?

  3. I?¦m not sure where you are getting your info, however good topic. I needs to spend some time studying much more or figuring out more. Thanks for wonderful information I was searching for this information for my mission.

  4. It?¦s really a cool and useful piece of information. I?¦m satisfied that you simply shared this helpful information with us. Please keep us up to date like this. Thank you for sharing.

  5. Thanks for the auspicious writeup. It in fact was once a leisure account it. Glance complicated to more brought agreeable from you! However, how could we keep in touch?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *