இது என்ன கருமம் பிடிச்ச சாப்பாடு

  • 19

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 21】

“இப்படியே நடந்துகிட்டு இருந்தா இதுக்கு ஒரு முடிவு இல்லியா?” என்று கேட்டான் ஜிம்.

“என்ன அவசரம் உனக்கு சாவுகிட்ட இருந்து தப்பித்து வந்திருக்கோம். அதை நினைத்து சந்தோசப்படுவியா. சும்மா பேசிக்கிட்டு” என்று கடு கடுத்தாள் லில்லி.

“ரொம்ப பசிக்குது பா… அதான்.”

“இங்க கண்டிப்பாக சாப்பிட ஏதாச்சும் கிடைக்கும். ஏன்னா உங்களுக்கு அந்த வாசனை வரலியா. யாரோ மீன் சுட்டுட்டு இருக்காங்க.”என்றான் யுவான்.

“அட ஆமா.” என்றனர் மூவரும். அப்போது மீண்டும் பற்றைக்குள் சலசலப்பு கேட்கவே இம்முறை ஐரிஸ் அது யாரென்று கண்டு விட்டாள்.

“அங்க யாரோ இருக்காங்க.” என்றதும் யுவான் உடனே போய் பற்றையையும் விலக்கி பார்க்க உள்ளே ஒரு குள்ள மனிதன் ஒளிந்து இருந்தான்.

“வெளியே வா. யார் நீ எதுக்காக எங்களை பின் தொடர்ந்து வர்ரே?” என்று கேட்டதும் அவன் ஒன்றும் பேசாது சற்று தயக்கத்துடன் பின் வாங்கினான்.

நல்ல வேளையாக அந்த ரிவாழ்வர் இன்னமும் யுவானிடமே இருந்தது. அதைக்காட்டி மிரட்ட அவர்கள் யாரும் எதிர்பார்க்காத போது இன்னும் சிலர் இவர்களை சூழ்ந்து கொண்டனர்.

“மாட்டினோம் போ!”

என்றான் ஜிம். அவர்கள் ஏதோ விஷ ஊசி இலைகளை வீச அவை உடலில் பட்டதும் நால்வரும் தொப்பென்று மயங்கி விழுந்தார்கள். மறுபடி கண்ணை விழித்து பார்த்த போது நால்வரும் ஒரு சிறை போன்ற அறையில் இருந்தனர்.

“ஷிட். எப்படி தூங்குரா பாரு.” என்று ஜிம் லில்லியை எழுப்பினான்.

“எங்க இருக்கோம் நாம இப்போ?” என்ற ஐரிஸை பேசாமல் இருக்குமாறு சைகை செய்தான் யுவான்.

அப்போ யாரோ வருவது போல சத்தம் கேட்டது. அவர்கள் கொஞ்சம் குள்ளமாக இருந்தார்கள். சாப்பாடு கொண்டு வந்திருந்தார்கள். அங்கு இவர்களை போல் ஏகப்பட்டவர்களை அடைத்து வைத்திருப்பார்கள் போல. எல்லோருடைய குரல்களும் கேட்டது.

“எங்களை விட்டுடுங்க விட்டுடுங்க”

அதிலே குறிப்பாக ஐரிசுக்கு மிகவும் நெருக்கமான குரலும் இருந்தது. ஒரு கணம் அம்மா அப்பாவை நினைத்து பார்த்தாலும் “சே சே. என்ன வேண்டாத எண்ணம்” என்று எண்ணி அதை விட்டுவிட்டாள்.

ஆனால் கொஞ்ச நேரத்தில் அவர்கள் எல்லோர் அறையிலும் சாப்பாடை போட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர்.

“இது என்ன கருமம் பிடிச்ச சாப்பாடு எனக்கு வேண்டாம்.” என்றாள் லில்லி.

“வேண்டாம்னா அப்படியே இரு. எப்படியும் பசிக்கொடுமையில் சாப்டதான் போறோம்” என்றான் ஜிம்.

“இது காட்டில் கிடைக்கிற ஒரு பழவகை. பாக்க தான் அருவருப்பாக இருக்கும். சாப்பிட்டு பாருங்க .அதோட அருமை புரியும்” என்றான் யுவான்.

“ஆமா இதெல்லாம் எப்படி உனக்கு தெரியும்?” என்று கேட்டாள் ஐரிஸ்.

“மூணு வருஷம் காட்டுக்குள்ள போலீஸ் ட்ரைனிங் எடுத்து இருக்கேன். அதோட என்னோட தாத்தா ஒரு சூலோஜிஸ்ட். சின்ன வயசில எனக்கு காட்டுக்குள் இருக்குற நிறைய விஷயம் பற்றி சொல்லி தந்து இருக்காரு.” என்றான்.

“அதெல்லாம் சரி இங்க இருந்து எப்படி நாம தப்பிக்கிறது. அது பற்றி உன்னோட போலீஸ் மூளையில் ஏதாவது தோணுதா?” என்று கேட்டான் ஜிம்.

“சேர்ந்து போராடுவோம்.” என்று சொல்லி கொண்டே ஓடிப்போய் அந்த கதவை இடித்தான்.

“ஓஹ் இது தான் உன்னோட பிளானா.” என்ற மூவரும் சேர்ந்தே ஓடிப்போய் அவனுக்கு உதவினர். “

சத்தம் கேட்டு அவர்கள் திரும்பி வருவதற்குள் கதவு உடைப்பட்டது. அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தார்கள். அவர்கள் தப்பிப்பதை பார்த்து ஏனையோரும் தங்களையும் காப்பாற்றுமாறு கத்தினார்கள்.

ஐரிஸ் ஒரு குரலால் ரொம்ப பாதிக்கப்பட்டாள். அது வேற யாரும் இல்லை அவளுடைய அப்பா நிக்கலஸ் தான். ஓடிக்கொண்டு இருந்தவள் சட்டென்று நின்றுவிட முன்னாடி ஓடியவர்கள் அவளை திரும்பி பார்த்தனர். தூரத்தில் அவர்களை அடைத்துவைத்தவர்கள் இவர்களை கண்டு துரத்த ஆரம்பித்தனர்.

“என்ன பண்ணுறே அவங்க நம்மள பார்த்துட்டாங்க வா.” என்று யுவான் அழைக்க அவளோ அருகில் இருந்த சிறைகம்பியை பிடித்தாள்.

“அப்பா!”

“ஐரிஸ் நீயா. நீ எப்படி இங்கே?” என்று நிக்கலஸ் கேட்டதும் யுவானும் அவளை அவசரப்படுத்தி கொண்டே இருந்தான்.

தூரத்தில் இருந்து துரத்தியவர்கள் அவளை நெருங்குவதை கண்ட யுவான் அப்பாவும் மகளும் என்னாச்சு என்று பேசுவதற்குள் ஓடிவந்து அவளை இழுத்து கொண்டே ஓடினான்.

“சீக்கிரம் சீக்கிரம்.” என்று சொல்லி கொண்டே நால்வரும் அங்கிருந்து தப்பித்து வெளியேறி விட்டனர்.

இப்போதான் ஒரு உண்மையே தெரிந்தது. இவர்கள் இருந்தது ஒரு பெரிய கப்பலில் என்று. எப்படியும் அவர்கள் வந்து இவர்களை பிடித்துவிடுவார்கள் என்று தோனியது யுவானுக்கு.

சற்று தயங்கிய ஐரிஸ்

“யோசிக்க வேணாம். குதிச்சிடுங்க.” என்றாள்.

எல்லோரும் தண்ணீரில் குதித்தே விட்டனர்.

நீங்க என்ன யோசிக்குறீங்கன்னு புரியுது. இங்க இருந்து தானே பயணத்தை ஆராம்பிச்சாங்க மறுபடியும் இதே இடத்துக்கு வந்து மாட்டிகிட்டாங்க. என்று தானே.

அதுதான் இல்ல இவங்க தீவோட கிழக்கு கரையில் இருக்குற கப்பல்ல தான் கடத்தி வைக்கப்பட்டாங்க. அதுவும் முழுசா ரெண்டு நாள். அந்த விஷ இலைகளோட மயக்கம் ரெண்டு நாளா அவங்கள தூங்க வெச்சி இருக்கு. இது தெரியாமலேயே இவங்க இன்னும் இருக்காங்க.

இங்க வாழுற காட்டுமிராண்டி கூட்டம் தான் இவங்கள கடத்தி அடைச்சு வெச்சிருக்காங்க. தீவொட மையப்பகுதியில் இன்னமும் கடற்கொள்ளையர்கள் இருக்காங்க. காணாம போன கப்பல்ல இருந்து தப்பித்து நிறைய பேர் தீவுக்குள்ள வந்து அதுல சிலர் இவங்க கிட்ட மாட்டிக்கிட்டாங்க. சோ அடுத்து வரப்போற பாகத்தில் மீதி கதையை பார்த்துடலாம்.

தொடரும்.
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 21】 “இப்படியே நடந்துகிட்டு இருந்தா இதுக்கு ஒரு முடிவு இல்லியா?” என்று கேட்டான் ஜிம். “என்ன அவசரம் உனக்கு சாவுகிட்ட இருந்து தப்பித்து வந்திருக்கோம்.…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 21】 “இப்படியே நடந்துகிட்டு இருந்தா இதுக்கு ஒரு முடிவு இல்லியா?” என்று கேட்டான் ஜிம். “என்ன அவசரம் உனக்கு சாவுகிட்ட இருந்து தப்பித்து வந்திருக்கோம்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *