உங்க எல்லோரையும் இந்த டோரடோ தீவுக்கு வரவேற்கிறேன்

  • 10

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 22】

மறுபடியும் தண்ணீரில் இருந்து தரைக்கு வந்தபோது எல்லோரும் கவனமாக இருந்தனர். ஓரிடத்தில் பதுங்கி கொண்டனர்.

“ஒன்னும் புரியல்ல. என்னோட அப்பாவை என்னோட அப்பாவை அங்கு நான் பார்த்தேன்.” என்றாள் ஐரிஸ்.

“என்ன நடக்குது இங்கே. உன்னோட அப்பாவா? அவர் எப்படி இங்கே வந்து மாட்டிக்கிட்டு இருக்கார்?” என்று யுவான் கேட்டான்.

“ஒருவேளை அவங்க ட்ராவல் பண்ணின ஏதாவது ஷிப் இங்க வந்து மாட்டியிருக்கணும். அப்படின்னா ஒன்னு மட்டும் உண்மை. அப்பா இங்க இருக்காருன்னா என்னோட அம்மாவும் கண்டிப்பாக இங்கேதான் எங்காவது இருக்கணும்.” என்றாள்.

“அதெப்படி அவ்வளவு கன்போர்மா சொல்லுறே?” என்று லில்லி கேட்டாள்.

“அவங்க எங்க போனாலும் சேர்ந்தே தான் புறப்படுவாங்க. அந்த கெஸ் ல தான் அவரை அங்க இருந்து காப்பாற்றியே ஆகணும்.” என்றாள்.

“அவங்கள எதிர்க்குறதுக்கு நமக்கு ஆயுதங்கள் தேவை. அவங்க பாக்குறதுக்கு மனிதர்கள் போல இருக்குற காட்டுமிராண்டிக்கூட்டம்.” என்றான் ஜிம்.

“ஜிம் சொல்றது கரெக்ட் தான். வெறுங்கையால் அவர்களை சமாளிக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.” என்றான் யுவான்.

“இந்நேரம் அவங்க நம்மளை தேடிட்டு இருப்பாங்க. மனுஷ வேட்டைக்கு தயாராக இருக்கும் அவங்க காட்டுக்குள் அலையும் நம்மளை கண்டிப்பா கொன்னுடுவாங்க” என்றாள் லில்லி.

“கரெக்ட்டா சொன்னீங்க”

என்று பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்க பயந்து போய் திரும்பி பார்த்தால் அங்கு ஒரு கிழவன் நின்று கொண்டிருந்தான்.

“க்ரான்பா. நீங்களா?” என்ற யுவான் பாய்ந்து அவரை கட்டிப்பிடிக்க சிரியாய் சிரித்தார் அவர்.

“உங்க எல்லோரையும் இந்த டோரடோ தீவுக்கு வரவேற்கிறேன்.” என்றார்.

அடுத்த கட்டமாக எல்லோரும் சூடாக எதையோ பருகிக்கொண்டே க்ரான்பாவின் விமான வீட்டில் இருந்தனர். காட்டில் ஒரு விமானம் விழுந்து கிடக்கு. அதுக்கு உள்ள யாருமே இல்லை. அதுக்குள்ள தன்னோட வீட்டை அமைத்து கொண்டு சந்தோசமா வாழ்த்துக்கு இருக்கார் நம்ம க்ரான்பா.

தங்களுக்கு நடந்த விடயங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்னர் யுவான் அவரிடம்

“சோ. எப்படி இதெல்லாம் நடந்தது க்ரான்பா?” என்று ஆவலாய் கேட்டான்.

“நாங்க பாரிஸுக்கு புறப்பட்ட ஷிப் போறவழியிலேயே எஞ்சின் ஜாம் ஆகி நடுக்கடலில் நின்னுடுச்சி. அப்பறம் ஒரு குழு வந்து அதை சரி பண்ணும் முயற்சியில் இருந்தாங்க. கொஞ்சமாக பயணம் செய்யக்கூடிய அளவில் இருந்தது. பக்கத்தில எங்காவது கரையோரத்தில் கப்பலை நிறுத்தினால் தான் சரி பண்ண முடியும் என்னு சொல்லிட்டாங்க. சோ இருந்த எனெர்ஜியில் ரேடார்ல தெரிஞ்ச ஒரு தீவை நோக்கி மெல்ல நகர்த்தினாங்க. திடீரென ஏதோ ஒரு இழுவை எங்க எல்லோரையும் ஈர்க்க ஆரம்பிச்சது. அப்பறம் பார்த்தா இந்த தீவுல இருந்தோம். என்னாச்சு ஏதாச்சு என்னு பார்ப்பதற்குள். ஷிப் ல இருந்த பாதிபேரை காட்டுவாசிங்க வந்து பிடிச்சிட்டு போய்ட்டாங்க. நிறைய பேர் காட்டுக்குள்ள ஓடிட்டாங்க. நான் இங்கே வந்து செட்டில் ஆகிட்டேன்.” என்றார்.

“இங்க அவங்க வரமாட்டாங்களா?” என்று லில்லி வினவ,

“ரெண்டு மூனு தடவை வந்தாங்க. நான் அவங்களை விரட்டி விட்டேன் என்று சிம்பிளாக சொல்லிக்கொண்டே சிரித்தார்.

“அவங்க நிறைய பேர் இருக்கிறாங்களே!” என்றாள் ஐரிஸ்.

“இருந்தா என்ன என்கிட்ட இது இருக்கே!” என்று பெரிய பெரிய துப்பாக்கிகளை காட்டினார்.

“ஓஹ். வாவ். இதெல்லாம் எங்க இருந்து எடுத்தீங்க?” என்றதும்

“இங்க வந்து சேரும் போர்க்கப்பல்களில் இருந்து தான்” என்றார்.

இப்போ கூட ரெண்டு நாளைக்கு முதல் ஒரு போர்க்கப்பல் வந்தது. அந்த கப்பலில் இருந்தவர்களையும் இந்த காட்டுவாசிங்க பிடிக்க முயற்சி பண்ணாங்க. நிறையபேரை பிடிச்சிட்டாங்க. ஆனா இன்னும் பலர் அவங்க கொண்டுவந்த ஆயுத்தங்களை பயன்படுத்தி காட்டுக்குள்ள தப்பிச்சி போய்ட்டாங்க.” என்றார்.

“அப்போ இங்க நிறைய பேர் மாட்டிக்கிட்டாங்க என்னு சொல்லுங்க.”

“என்னோட அப்பா அங்க இருக்காரு. அவரை எப்படியாவது நாம் காப்பாத்தி ஆகணும்.” என்றாள் ஐரிஸ்.

“கண்டிப்பா” என்றார் தாத்தா.

எல்லோரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து கொண்டிருக்கும் போது திடீரென லில்லிக்கி ஒரு சந்தேகம்,

“ஏன் தாத்தா நீங்க எங்களை பார்த்ததும் இந்த தீவு பெயர் ஏதோ சொன்னீங்களே?” என்றாள்.

“டோரடோ தீவு. இப்போ நான் உங்க எல்லோருக்கும் ஒரு மிகப்பெரிய உண்மையை சொல்லப்போறேன். இது எங்க முன்னோர்கள் காலங்காலமா வாழும் தீவு. கடற்கொள்ளையர்களோட சாம்ராஜ்யம்.” என்றார்.

என்னதான் ஐரிஸ் கடற்கொள்ளையர் வம்சம் என்றாலும் அவளுக்கு அவளது பூர்வீகம் பற்றியோ டோரடோ தீவு பற்றியோ தெரியாது. ஐரீஸுக்கு தெரிந்தது எல்லாம் அவளது தாத்தா ஒரு ஊர்த்தலைவர். அதோட அவ அம்மா அப்பா அவ்வளவு தான். மாரியா சந்தேகப்பட்டபடி அவளோட அப்பா எந்த ரகசியத்தையும் பேத்திகிட்ட கூட சொல்லவே இல்லை.

“என்னது கடற்கொள்ளையர்களா? அப்போ நம்மள தாக்கியது அவங்க தானா?” என்று ஜிம் கேட்டான்.

“கிடையாது. இப்போ நம்மளை தாக்கியது நமக்கு பலவருசங்களுக்கு முன்னாடி இங்க வந்து மாட்டிக்கிட்ட நம்மள மாதிரி மனிசங்க தான். தப்பிக்க வழியும் இல்லாம இங்கேயே வாழ பழகிக்கிட்டாங்க. சாப்பாட்டுக்காக மனிசங்களையே கொன்னு சாப்பிட முடிவெடுத்தார்கள். அதோட விளைவு தான் இதெல்லாம்..”

“ஓஹ். அப்போ உண்மையான தீவு வாசிகள் எங்க இருக்காங்க?”

என்று யுவானும் கேட்க தாத்தா அந்த உயர்ந்த மலையை நோக்கி கையை நீட்டினார். எல்லோரும் அந்த திசையில் பார்வையை செலுத்தினார்கள்.

யுவானோட தாத்தாக்கு டோரடோ பத்தி நிறையவே தெரிஞ்சி இருக்கு. வாங்க அடுத்த அடுத்த எபிசோட்ல நாமளும் தெரிஞ்சிக்கலாம்.

தொடரும்.
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 22】 மறுபடியும் தண்ணீரில் இருந்து தரைக்கு வந்தபோது எல்லோரும் கவனமாக இருந்தனர். ஓரிடத்தில் பதுங்கி கொண்டனர். “ஒன்னும் புரியல்ல. என்னோட அப்பாவை என்னோட அப்பாவை…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 22】 மறுபடியும் தண்ணீரில் இருந்து தரைக்கு வந்தபோது எல்லோரும் கவனமாக இருந்தனர். ஓரிடத்தில் பதுங்கி கொண்டனர். “ஒன்னும் புரியல்ல. என்னோட அப்பாவை என்னோட அப்பாவை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *