ஆலிம் என்ற பதத்திற்கு அர்த்தம் அறிஞன் என்பதே

  • 72

ஆலிம் என்ற பதத்திற்கு அர்த்தம் அறிஞன் என்பதே. அதனை மெளலவி என்று மட்டும் அர்த்தம் கொண்டதன் பின்னணி எமது கலாச்சாரமே அன்றி அரபு மொழியோ அல்ல ஷரீஆ ரீதியான ஆதாரமோ அல்ல.

ஷரீஆ, அரசியல், புவியியல், இலக்கியம், பொருளியல், விஞ்ஞானம் என்று எந்த துறையிலும் ஆழ்ந்து கற்றாலும் ஒருவர் ஆலிம் தான். அவர்கள் உலமாக்கள் தாம். தான் கற்ற அறிவினை எந்தளவுக்கு இதய சுத்தியுடன் இந்த மார்க்கத்தின் எழுச்சிக்கு ஒருவர் அர்ப்பணம் செய்கிறாரோ அந்தளவுக்கு அவர் மேன்மைக்குரிய ஆலிமாக கருதப்படுவார்.

மருத்துவரோ, அரசியல் சிந்தனையாளரோ, ஆய்வுக் கூடத்தின் ஆய்வாளரோ எவராக இருப்பினும் அவர் நபிமார்களின் வாரிசுகளே. ஏனெனில் நபிமார்கள் தூய்மையானவர்கள். தூய்மையான, நல்லறிவு படைத்தவர்களைத் தவிர வேறெவரும் நபிமார்களுக்கு வாரிசுகளாக முடியாது.

ஷெய்க் முஹ‌ம்ம‌த் அல் கஸ்ஸாலி, யூசுப் அல் கர்ளாவி, முதவல்லி அஷ் – ஷஃராவி, தாஹிர் இப்னு ஆஷுர், அஹ்மத் ரய்ஸுனி போன்ற ஷரீஆ துறை வல்லுநர்கள் கூட ஆலிம் என்ற பதத்திற்கு இப்படியான விரிந்த அர்த்தங்களை தான் கொடுத்துள்ளனர். பொது அறிவுத் துறையினரின் மனங் குளிரச் செய்யும் இத்தகைய விளக்கத்தை சிரேஷ்டமான மஷாயிஹ்மார்களே கொடுத்திருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல, காரணம் ஆலிம் என்ற பதத்திற்கு மெளலவிகள் என்ற குறுகிய விளக்கத்தை கொடுப்பவர்கள் இந்த மார்க்கத்தின் உள்ளார்ந்த இயல்பை புரிந்து கொண்டவர்கள் அல்ல.

ஸெய்யித் குத்ப், அலி இஸ்ஸத் பெகொவிச், இஸ்மாயில் ராஜி அல் – ஃபாரூக்கி, அப்துல் ஹமீத் அபூசுலைமான் போன்றவர்கள் பாரம்பரிய உலமா புலமைத்துவ வட்டாரங்களை சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால் இவர்கள் எவ்வளவு மகோன்னதமான சாதனையாளர்கள்? எனது கருத்தில் இலங்கையில் உள்ள பெரும்பாலான மெளலவிகள் உலமாக்கள் என்ற கட்டமைப்புக்குள் வரும் தகுதி படைத்தவர்கள் அல்ல. இவர்களை நபிமார்களின் வாரிசுகள் என்று கூறி நபிமார்களை அவமதிக்க வேண்டாம். அல்லாஹ் எம்மை நன்மைகளின் பால் இணைத்து வைக்கட்டும்.

லஃபிஸ் ஷஹீத்

ஆலிம் என்ற பதத்திற்கு அர்த்தம் அறிஞன் என்பதே. அதனை மெளலவி என்று மட்டும் அர்த்தம் கொண்டதன் பின்னணி எமது கலாச்சாரமே அன்றி அரபு மொழியோ அல்ல ஷரீஆ ரீதியான ஆதாரமோ அல்ல. ஷரீஆ, அரசியல்,…

ஆலிம் என்ற பதத்திற்கு அர்த்தம் அறிஞன் என்பதே. அதனை மெளலவி என்று மட்டும் அர்த்தம் கொண்டதன் பின்னணி எமது கலாச்சாரமே அன்றி அரபு மொழியோ அல்ல ஷரீஆ ரீதியான ஆதாரமோ அல்ல. ஷரீஆ, அரசியல்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *