காட்டுமிராண்டி கூட்டத்துக்குள்ள என்னோட அப்பா மாட்டிக்கிட்டார். ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க க்ரான்பா.

  • 9

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 23】

“உண்மையான தீவு வாசிகளை சந்தித்து அவங்க கிட்ட உதவி கேக்கலாமே. நீங்க தான் அவங்க வம்சமாச்சே. கண்டிப்பா அவங்க நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க என்று நினைக்கிறேன்.” என்றாள் ஐரிஸ்.

“ஐரிசோட இந்த யோசனையும் நல்லா தான் இருக்கு. ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு.” என்றார் தாத்தா.

“என்ன சொல்றீங்க க்ரான்பா?”

“தீவோட ஒரு கரையில் கெட்டவங்க இருக்காங்க. தீவோட நடுவில் கடற்கொள்ளையர்கள் இருக்காங்க. புதுசா கப்பல்ல வந்தவங்க பற்றி எதுவுமே தெரியாது. இப்படி இருக்கும் போது எப்படி நம்பி போறது?” என கேட்டார்.

“அந்த காட்டுமிராண்டி கூட்டத்துக்குள்ள என்னோட அப்பா மாட்டிக்கிட்டார். என்னால எதுவுமே பண்ண முடியாத நிலையில் இருக்கேன். ப்ளீஸ் எனக்கு உதவி பண்ணுங்க க்ரான்பா.” என ஐரிஸ் அழுவதை பார்த்து எல்லோருக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது.

“சரி சரி. நாம இப்பவே போகலாம். தேவையான எல்லாத்தையும் எடுத்துக்கொள்ளுங்க.” என்று அவளையும் தேற்றி பயணத்துக்கு தயாரானார்கள்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் எல்லோரும் புறப்பட தயார் நிலையில் இருக்க அப்போது காட்டிற்குள் இருந்து பெரிய சத்தம் ஒன்று கேட்டது.

“அது என்ன சத்தம்?”

“தீவு வாசிகள் கடல்தேவதையை வணங்கி கொண்டாடும் ஒரு பௌர்ணமி நாள் இருக்கு. அது இன்னும் மூணு நாளில் நடக்கப்போகுது. அதற்காக சில சடங்குகளை செய்வாங்க. அதோட சத்தம் தான் இது.” என்று விளக்கினார்.

அதன்பின்னர் எல்லோருமாக பயணிக்க ஆரம்பித்தனர். பல மறைவான இடங்களினூடாக க்ரான்பா அவர்களை அழைத்து சென்றார்.

“ஏன் தாத்தா. இதுக்கு முன்னாடியும் அந்த மலைக்கு நீங்க போய் இருக்கீங்களா?” என்று கேட்டான் ஜிம்.

“ஒருவாட்டி போனேன். அப்பறம் அங்க இருக்க போரடிச்சு இங்க வந்துட்டேன்.” என்றான்.

“நீங்க ஏன் வீட்டுக்கு வர முயற்சி பண்ணல. அட்லீஸ்ட் நீங்க உயிரோட இருக்கிறதை எங்களுக்கு தெரிவிச்சி இருக்கலாமே. அப்பா அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க.” என்றான் யுவான்.

“சொல்லலாமுன்னு நினைச்சேன் தான். ஆனா எப்படி கான்டெக்ட் பண்ணுறது. இங்க இருக்குற மேக்னட் பீல்ட் எந்த கம்மினிகேசன் வேவையும் ட்ரான்ஸ்மிட் பண்ணமாட்டேங்குது.”

“ஓஹ் அதுதான் விஷயமா?”

“நான் இங்கே வந்து சேரும் கப்பல்களில் இருந்து சிக்னல் அனுப்ப முயற்சி பண்ணேன். ஆனா அது எதுவுமே வேலை செய்யல்ல. அதுக்கப்பறம் தான் தப்பிக்கும் முயற்சியை விட்டுட்டு இங்கேயே இருக்க பழகிக்கிட்டேன்.” என்றார்.

“இல்ல க்ரான்பா. இங்கிருந்து தப்பிக்க நிச்சயமாக ஏதாவது வழி இருக்கும். தீவுவாசிகள் கிட்ட நாம அதை கேட்டு தெரிஞ்சிக்கலாம். முக்கியமான கடமை ஒன்னு இன்னும் பாக்கி இருக்கு.” என்று சட்டையில் முடிந்திருந்த பென்ட்ரைவை பார்த்தான்.

அதை புரிந்து கொண்டது போல ஐரிஸ் அவனிடம்,

“நம்மள கொல்ல முயற்சி செஞ்சத்துக்கும், அந்த உயிரினங்களுக்கு செஞ்ச அக்கிரமத்துக்கும் கண்டிப்பா சுபிரீயண்ட் மாட்டிக்குவான். டோன்ட் வொரி.” என்றாள்.

“தாத்தாவோட காட்டுக்குள்ள போறது ஏதோ அட்வெஞ்சர் படத்துல புதையலை தேடி போறது போல இருக்கு. ஜாலியா இருக்கு.” என்றான் ஜிம்.

“உஷ். எந்தநேரத்தில் என்னபேசணும் என்னு தெரியாதா உனக்கு. சும்மா வா எதுவும் பேசாம.”

“போ லில்லி. இப்பல்லாம் எப்போ பாரு என்னை திட்டிக்கிட்டே இருக்கே.”

“உன்னை திட்டாம வேற யாரை திட்டுவேண்டா?” என்று செல்லமாக அவனை பிடித்து இழுத்து கொண்டே வந்தாள். அதை பார்த்து மூவரும் சிரித்தனர்.

“பார்த்து பசங்களா இங்க இருக்குற விலங்குகளுக்கு ஒரு ஸ்பெஷல் பவர் இருக்கு. அதுங்க கிட்ட இருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க.”என்றார்.

“என்னது ஸ்பெஷல் பவரா? என்ன சொல்லுறீங்க”

“நிறம்மாறி தன்னோட அடையாளத்தை மறைக்கும் பச்சோந்தியை உங்களுக்கு தெரியும் தானே?” என்று கேட்டார் அவர்.

“பூ! போயும் போயும் ஒரு பச்சோந்திக்கா இவ்வளவு ரகளை. நாங்கல்லாம் சின்ன வயசிலேயே அதை பிடிச்சி அது வால்ல நூலை கட்டி விளையாடி இருக்கோம்.” என்று பெருமையாக பீத்தி கொண்டே எதுமேலயோ காலை வைத்தான் ஜிம் .

உடனே அங்கே தரைப்போலவே தோற்றத்தில் தூங்கி கொண்டிருந்த மலைப்பாம்பொன்று உஷ் என்று திரும்பி சீறியதும் ஜிம் அம்மாடி என்று கீழே விழுந்தான் .

“எவ்வளவு பெரிய பா பா பாம்பு…” என்றான்.

“எல்லாரும் பின்னாடி வாங்க. இந்த பாம்பு ரொம்பவும் வயசானது. அதனால சும்மாவெல்லாம் நம்மள தாக்காது.” என்றான் யுவான்.

ஒருகணம் என்ன இவன் இதெல்லாம் சொல்லுறான் என்று எல்லோரும் அவனை ஆச்சர்யத்துடன் பார்க்க.

“சும்மா சொல்லி பார்த்தேன். ஓடுங்க காய்ஸ்.” என்று கத்த எல்லோரும் தெறித்து ஓடினார்கள். அதுவும் விடாது துரத்தியது.

தொடரும்.
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 23】 “உண்மையான தீவு வாசிகளை சந்தித்து அவங்க கிட்ட உதவி கேக்கலாமே. நீங்க தான் அவங்க வம்சமாச்சே. கண்டிப்பா அவங்க நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 23】 “உண்மையான தீவு வாசிகளை சந்தித்து அவங்க கிட்ட உதவி கேக்கலாமே. நீங்க தான் அவங்க வம்சமாச்சே. கண்டிப்பா அவங்க நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *