சர்வதேச எழுத்தறிவு தினம்

  • 240

‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற வாக்கானது எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. எழுத்தறிவென்பது ‘எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட கருத்துக்களை இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல் ஆகியவற்றின் தொகுப்பு’ என UNESCO வரைவிலக்கணப்படுத்துகிறது.

ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும், கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ் அடிப்படையில் ‘Covid 19 நெருக்கடியிலும் அதற்கு அப்பாலும் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடு’ என்பதே இவ்வருடத்திற்கான (2020) தொனிப் பொருளாகும்.

இன்று எழுத்தறிவானது வளர்ச்சி கண்டுள்ள போதிலும் சமூகத்தில் எழுத்தறிவின்மையையும் அவதானிக்க முடிகின்றது. உலகில் எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக பல மில்லியன் கணக்கானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலமை சிறுவயது முதலே கல்வியறிவை வழங்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

“உலகில் 90 மில்லியன் குழந்தைகளுக்கு எந்தவிதமான ஆரம்பக் கல்வியும் வழங்கப்படுவதில்லை. 200 மில்லியனுக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் இரண்டாம் நிலைக் கல்வியைக் கூட பெற முடியாத நிலை உள்ளது. எழுத்தறிவின்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது” என ஐ.நா. அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆகவே இந் நிலமையை தீர்ப்பதன் மூலம் எழுத்தறிவு வீதத்தை உயர் மட்டத்தில் நிலைத்திருக்கச் செய்ய முடியும்.

தொழிநுட்பங்கள் உன்னத வளர்ச்சி கண்டுள்ள இன்றைய நவீன உலகில் வாசிப்புப் பழக்கம் அருகி வருகின்றது. தொழிநுட்பங்களின் செல்வாக்கு மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை குறைத்து விட்டது எனலாம். வாசிப்பானது தேடலை அதிகரிக்கும். தேடல் புத்தாக்க சிந்தனையை உருவாக்கும். விளக்கங்களை ஏற்படுத்தும். இறுதியில் எழுத்தறிவு ஆற்றல் உன்னதமடையும். ஆகவே இதனால் பல தீர்க்கப்படாத கல்விப் பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதை இவ் வருட தொனிப்பொருள் உணர்த்தி நிற்கின்றது.

இலங்கையில் எழுத்தறிவு வீதம் 92% ஆகக் காணப்படுகின்றது. இலங்கையில் கல்வி மட்டத்தோடு ஆற்றலும், பயிற்சியும் கொண்ட பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் உயர் மட்டக் கல்வி பேணப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றமை இலங்கையில் வாசிப்புப் பழக்கத்தையும், எழுத்தறிவினையும் அதிகரிக்கும் மைல்கல் என்றே கூறலாம்.

UNESCO அமைப்பானது 2020-2025 வரையான காலப்பகுதியை இலக்காகக் கொண்டு எழுத்தறிவில்

  1. தேசிய கல்வியறிவு உத்திகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கல்
  2. பின்தங்கிய குழுக்கள் மற்றும் பெண்களின் கற்றல் தேவைகளை நிவர்த்தி செய்தல்
  3. கற்றலை அணுகுவதற்கு இலத்திரனியல் தொழினுட்பங்களை மேம்படுத்தல்
  4. முன்னேற்றத்திற்காக கண்காணித்தல் மற்றும் கல்வியறிவு திறன்களை மதிப்பீடு செய்தல்

ஆகிய 4 வகையான மூலோபாயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் தொழினுட்பம் முன்னேறியுள்ள இந் நவீன சமுதாயத்தில் மாணவர்கள் மத்தியில் எழுத்தறிவு பற்றி விழிப்புணர்வூட்டுவது கற்ற சமுதாயத்தின் கட்டாயக் கடமை என்றால் அது மிகையாகாது.

ASMA MASAHIM
PANADURA
SEUSL

‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற வாக்கானது எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. எழுத்தறிவென்பது ‘எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட கருத்துக்களை இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல் ஆகியவற்றின் தொகுப்பு’ என UNESCO வரைவிலக்கணப்படுத்துகிறது.…

‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற வாக்கானது எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. எழுத்தறிவென்பது ‘எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட கருத்துக்களை இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல் ஆகியவற்றின் தொகுப்பு’ என UNESCO வரைவிலக்கணப்படுத்துகிறது.…

14 thoughts on “சர்வதேச எழுத்தறிவு தினம்

  1. Appreciating the dedication you put into your site and in depth information you provide. It’s great to come across a blog every once in a while that isn’t the same out of date rehashed material. Fantastic read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.

  2. I got this website from my pal who informed me regarding this website and now this time I am visiting this site and reading very informative posts here.

  3. I do consider all the concepts you have presented on your post. They are very convincing and will definitely work. Still, the posts are too brief for beginners. May just you please prolong them a bit from next time? Thank you for the post.

  4. Наслаждайся невероятными моментами и выигрышами в игре Лаки Джет на официальном сайте 1win. Играй в Lucky Jet на деньги и забудь о скуке – непредсказуемые полеты и крупные выигрыши ждут тебя!

  5. Howdy are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and create my own. Do you need any coding knowledge to make your own blog? Any help would be greatly appreciated!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *