தாய் அன்பு

  • 13

தனிமையின் இனிமை
நிம்மதியின் அருமை
உன் இருளறை
கருவறையில் தான்.

முட்டித் தள்ளிய முனங்களிலும்
எட்டி உதைத்த பொழுதுகளிலும்
வலி தாங்கி சுமை பொருத்த
ஈடற்ற உறவு தாயே நீயே!

இருவிழி சிறு உரு கொண்டு
உன் கைகளில் நான் தவழ்கையில்
கயல் விழி மடலோரம் கொண்டு
ஊமை மொழி பேசிய
பேரன்பி நீ அல்லவா!

இளமையது என் சேட்டைகளில்
இஷ்டமாய் சேய் நான் களித்திட
உரிமையாய் நீ வந்து
கஷ்டம் காட்டாமல் கை கோர்த்து
அரவணைத்து, அள்ளித்தழுவி
முத்தமிட்ட அழியாப் பொழுதுகள்.
அன்னை உந்தன் பாசம் பேச
நேசம் கொண்ட சேய்கள்
எம்மில் வார்தைகள் இல்லை

என்றும் அழியா உறவுகளின்
சங்கமம் நீயே!
என்றும் பிரியாநீரோடையே
எமது தாய் அன்பு!

Saburas Asanar
Anurathapura

தனிமையின் இனிமை நிம்மதியின் அருமை உன் இருளறை கருவறையில் தான். முட்டித் தள்ளிய முனங்களிலும் எட்டி உதைத்த பொழுதுகளிலும் வலி தாங்கி சுமை பொருத்த ஈடற்ற உறவு தாயே நீயே! இருவிழி சிறு உரு…

தனிமையின் இனிமை நிம்மதியின் அருமை உன் இருளறை கருவறையில் தான். முட்டித் தள்ளிய முனங்களிலும் எட்டி உதைத்த பொழுதுகளிலும் வலி தாங்கி சுமை பொருத்த ஈடற்ற உறவு தாயே நீயே! இருவிழி சிறு உரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *