டோரடோவின் அழகி

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirat】
【பாகம் 24】

“இது நம்மள கொல்லாம விடாது போல இருக்கே! ஐயோ நான் என்ன பண்ணுவேன். என்னோட அம்மா அப்பாக்கு நான் தான் ஒரே பிள்ளை.” என்று அந்த களேபரத்தில் கூட காமெடியாக கத்திக்கொண்டே ஓடினான் ஜிம்.

“தாத்தாவால வேகமா ஓட முடியாது. நான் அந்த ஸ்னேக்கை டைவேர்ட் பண்ணுறேன். நீ ஜாக்கிரதையா இரு” என்ற யுவான் தாத்தாவை துரத்திய பாம்புக்கு கல்லால் எறிந்து அதனை இவன் பக்கம் திருப்பினான்.

மறுபடி அந்த பாம்பு இவனை துரத்த லில்லியும் ஐரிசும் விசுக்கென்று ஒரு மரத்தில் ஏறிக்கொண்டனர். ஜிம் அந்த மரத்தடிக்கு வந்து தன்னையும் தூக்கி இளுக்குமாறு கேட்டுக்கொண்டான்.

அவனை மேலே தூக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. தாத்தாவின் தோற்பையில் இருந்து இரண்டு பூமாரங்களை எடுத்து யுவானுக்கு வீசினார். அவற்றை சரியாக கேட்ச் பிடித்த யுவான் பாம்பை அதனை கொண்டு தாக்கினான். பாம்புக்கு நல்ல அடி அது கோபத்தில் கொஞ்சம் வேகத்தை அதிகரித்தாலும் அந்த அடி தாங்காது புதரூடாக தப்பித்து விட்டது ஒருவழியாக எல்லோரும் ஒன்று சேர்ந்தனர்.

“பரவாயில்லை பாம்பே நம்ம கிட்ட இருந்து தப்பிச்சி போகிடுச்சு.” என்றான் ஜிம்.

“அந்த பாம்பு மட்டும் இல்லை. இங்க மனிசனை தவிர எல்லா உயிரினங்களும் நிறம் மாறக்கூடியன. அதுங்க நம்ம கண்ணுக்கே தெரியாம நம்மள அட்டாக் பண்ணக்கூடியதுங்க. சோ ரொம்பவும் கெயார்புல்லா இருக்கணும்.” என்றார் தாத்தா.

“ஆமா யுவான் வெச்சிருக்கிறது பூமராங் தானே?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் ஐரிஸ்.

“ஆமா. இந்த இடத்தில் காந்தப்புலம் ரொம்பவே அதிகமா இருக்கிறதால. உலோக ஆயுதங்களை நம்மலாள பயன் படுத்த முடியாது. ஒரு சில இடங்கள் காந்தப்புலம் குறைவா இருக்கும். அங்கவெச்சி தான் நாம ஆயுதங்களை தயாரிக்க முடியும்.” என்றார்.

“எல்லாமே சரி தாத்தா. நமக்கு கண்டிப்பாக ஆயுதங்கள் வேணும். ஏன்னா எங்களால் பூமராங் எல்லாம் யூஸ் பண்ண முடியாது. கூரான ஆயுதங்களை செய்யணும்.” என்றாள். ஐரிஸ்.

“இன்னும் மூணு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு காந்தப்புலம் இல்லாத இடம் இருக்கு. அங்க ஒரு உலோக பட்டறையும் இருக்கு. அங்க போனா கண்டிப்பா நமக்கு ஆயுதங்கள் கிடைக்கும்.” என்றார்.

எல்லோரும் அவர் சொன்னதற்கு இணங்க நடக்க ஆரம்பித்தனர். காட்டின் இன்னொரு பக்கம் கேப்டன் குக் மற்றும் அவனோடு ஒருசில சிப்பாய்கள் கூடவே மாரியாவும் அந்த மலையை நோக்கி தான் பயணித்து கொண்டிருந்தனர்.

“நாம இந்த பெயர் தெரியாத தீவில் மாட்டிகிட்டதால உன்னை சும்மா விட்டுடுவேன் என்று மட்டும் நினைக்காதே! தீவொட நடுப்பகுதியில் மக்கள் இருப்பதாக ஒருத்தன் சொல்லியிருக்கான். அவங்கமூலமா இங்க இருந்து தப்பிக்கலாம்” என்றான்.

இந்த தீவில் வந்து மாட்டிக்கொண்ட இவர்களை அந்த காட்டுமிராண்டிகள் சுற்றிவளைத்ததும் கேப்டன் குக் ஒரு திட்டம் போட்டான். கப்பலில் இருந்த ஏனையோருடன் நிக்கலசையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு இவனும் மாரியா மற்றும் சிலருடன் தப்பித்தார்கள். அவர்களுள் ஒருவனை பிடித்து விசாரித்ததில் காட்டுக்கு நடுவில் ஊர்வாசிகள் இருப்பதையும் தீவை விட்டு வெளியே போக அவர்களால் மட்டுமே உதவ முடியும் என்றும் அறிந்து கொண்டான். ஆனால் அவர்கள் தேடிவந்த டோரடோ தீவு இதுதான் என்று மாரியாவுக்கும் தெரியாது கேப்டன் குக்கிற்கும் தெரியாது. மாரியா தனது கணவனையும் மகளையும் நினைத்து அழுதுகொண்டே வந்தாள். மறுபுறம் நம்மவர்கள் ஓரிடத்தில் இளைப்பாறி பழ வர்க்கங்களை உண்டனர்.

“ஆமா உலோக பட்டறை பற்றி சொன்னீங்கல்லே. அதை யாரு செய்றாங்க? யாருக்கு ஆயுதம் செய்றாங்க” என்று கேட்டாள் ஐரிஸ்.

“அவளும் ஒரு தீவு வாசிதான்”

“என்னது அவளா? அப்போ அது ஒரு பொண்ணா? அழகா இருப்பாளா?” என்று ஜிம் கேட்க லில்லி முறைத்தாள்.

“அழகா இருப்பாளாவா? இந்த தீவிலேயே அவதான் பேரழகி. பாக்கத்தானே போறீங்க என்னோட செல்லத்தை.” என்றார் தாத்தா அசடு வழிய.

“தாத்தா இது உங்களுக்கே ஓவரா தெரியல.” என்று யுவான் கேக்க. அவரும் சிரித்தார்.

“ஓகே நாம போகலாம் என்னு நினைக்கேன்.” என்றாள் ஐரிஸ்.

“கண்டிப்பா” என்று எல்லோரும் எழுந்து டோரடோவின் அழகியை காணும் பயணத்தை ஆரம்பித்தனர்.

கொல்லன் பட்டறை. ஒரு பெண் முகமூடி அணிந்து கொண்டு உலோகங்களை உருக்கி வேலை செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு கூடமாட வேலை செய்ய ஒரு பையன் இருந்தான்.

“மேனி, டேய் மேனி எங்க போய் தொலைஞ்சே. சீக்கிரம் வந்து எனக்கு உதவி பண்ணு.” என்று அழைத்தாள்.

அந்த பையனும் எதையோ துணி மூட்டையில் சுமந்து வந்தான். பார்க்கவே முகமெல்லாம் கரியோடு அழுக்காக தோற்றமளித்தான்.

“நான் உங்களுக்காக என்ன கொண்டுவந்திருக்கேன் என்னு பாருங்க.” என்று அந்த கட்டை அவிழ்த்து காட்டினான். அவளும் ஆர்வத்தோடு வந்து பார்த்தாள். அது ஒரு உலோகம் அதன் பெயர் சாமுரியம்.

“இதை எங்க எடுத்தே? நான் தேடிட்டு இருந்த உலோகம் இதுதான்.” என்றாள்.

“இது எதற்காக பயன்படும் அக்கா!”

“அக்கா என்னு என்னை கூப்பிடாதே என்று எத்தனை வாட்டி சொல்லுறது. ஒழுங்கா என்னோட பேரை சொல்லி கூப்பிடு” என்று அவன் மண்டையில் குத்தினாள்.

“சாரி! சார்லட் இப்போ சொல்லுரியா இது எதுக்குன்னு”

“டேய். இந்த தீவு முழுக்க முழுக்க காந்த சக்தியால் நிரம்பி இருக்கு. இங்க இருக்குறவங்களுக்கு ஆயுதம் வேணும். ஆனா நாம தயாரிக்கிற ஆயுதம் ரொம்பவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் அதேவேளை காந்தத்தால ஈர்க்கப்படாம இருக்கணும். அதுக்கு தான் சாமுரியம் போன்ற உலோகங்கள் வேணும்.” என்றாள்.

“இப்போ புரிஞ்சிது சார்லட்”

“நாம அப்போ வேலையை ஆரம்பிக்கலாமா. இன்னும் மூணு நாளில் அவங்களுக்கு ஆயுதங்களை கொடுக்க வேண்டும். வா”என்றாள். இருவரும் மறுபடியும் வேலையை ஆரம்பித்தனர்.

தொடரும்.
A.L.F. Sanfara

Leave a Reply