இலக்குகளை திட்டமிட்டு கல்விப் பாதைகளை அமைப்போம்.

  • 279

வாய்ப்புக்கள் தேடி வந்து எமது கதவுகளை தட்டப் போவதில்லை. நாம் தான் நமக்கான பாதைகளை செதுக்க வேண்டும்

இப்பாரிலுள்ள அனைவரும் ஒரே மாதிரியானவர்களல்லர். அனைவரும் செய்ய வேண்டிய வேலையும் ஒரே மாதிரியானவைகளல்ல. நம் இலக்கு நோக்கியே நம் பயணம் தொடர வேண்டும். ஒருவர் இன்னொருவரிடமிருந்து இயல்பிலேயே வித்தியாசமானவர் என்பதை உணர வேண்டும். இதுவே நம் வழியில் நம்மை பயணிக்க வைக்கும்.

மகாத்மா காந்தி அஹிம்சை வழியில் தான் போராடினார். ஆனால் நெப்போலியன் வாள்முனையில் போராடி உலகை வென்றான். அவரவர் வழியில் முயற்சிக்கும் போதே சாதனைகளை சாத்தியப்படுத்தலாம்.

இளமைக் காலத்தில் பெரும்பாலான பகுதி கல்விலேயே கழிந்து விடுகின்றது. ஆறு வயதிலே எண்ணற்ற, இணையற்ற பல அற்புத கனவுகளுடன் பாலர் பள்ளியில் காலடி வைக்கும் எம் பெறுமதியான இளமைக் காலம் கல்விக் கடலிலே கரைந்து விடுகின்றது. இதன் விளைச்சலே எதிர் காலத்தில் சிறப்பாக வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒவ்வொரு மாணவரும் தமது இளமைக் காலத்தில் பெறுமதியான இலக்கை அமைத்து அதனை அடைந்து கொள்வதில் குறியாக இருப்பர். இலங்கை போன்ற நாடுகளில் இதற்கு சாதகமான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. கல்வித்திட்டங்களும் அதற்கேற்ற விதத்தில் காணப்படுகின்றன. மாணவர்கள் தம் வாழ்க்கையின் ஆரம்பப் படிக்கல்லான சாதாரணப் பரீட்சையை எதிர் கொள்வர்.

இலக்கை நோக்கிய அடுத்த கட்டமான உயர் தரத்தை தம் குறிக்கோளை அடைந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு துறையை தேர்ந்தெடுப்பர். பின்னர் உயர் கல்விக்காக வெவ்வேறு கல்வி நிறுவனங்களை தெரிவு செய்கின்றனர். அதாவது தாம் எந்த துறையில் சாதிக்க, தொழிற்துறையை தெரிவு செய்ய எண்ணுகிறோமோ அந்த துறைக்கேற்பவே உயர் கல்வி நிறுவனங்களையும் தெரிவு செய்ய வேண்டும். பட்டப்படிப்புக்களையும், நிறுவனங்களையும் காலத்தின் அடிப்படையில் தேர்வு செய்வதை விட தமது தொழிற்துறைக்கு முக்கியத்துவமளிப்பது புத்திசாலித்தனம் ஆகும்.

நடைமுறையில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றியவர்கள் தமது உயர்கல்வியை எங்கு தொடர்வது என்பது பொதுவாக எதிர் நோக்கும் ஒரு பிரச்சினையாகும். இச் சந்தர்ப்பத்தில் இலங்கையை பொறுத்தவரையில் அரசதுறையில் பல்கலைக்கழகம். கல்வியல் கல்லூரி (College), இலங்கை உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் (SLIATE) என்பன காணப்படுகின்றது. ஆனால் இவை அனைத்தும் வித்தியாசமான தொழில் துறைகளைக் கொண்ட உயர் கற்கை நிறுவனங்களாகும். கல்வியல் கல்லூரிகள்  ஆசிரிய தொழிலுக்கான பயிற்சியை வழங்குவதற்கு உள்ள நிலையில்; SLIATE பொறியியல், கணக்கியல், முகாமைத்துவம், சுற்றுலா முகாமைத்துவம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம், ஆங்கில ஆசிரியர் என்று 10 இற்கும் மேற்பட்ட தொழில்துறையை இலக்காகக் கொண்டு இயங்குகின்ற ஓர் உயர் கல்வி நிறுனமாகும்.

இதில் ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்திற்கான மாணவர்களை உள்ளீர்த்ததன் பின்னர் SLIATE இறுதியாக Collegeக்கான விண்ணப்பம் கோருகின்றனர். ஆனால் இவற்றில் விண்ணப்பிக்கும் பலர் தமக்கு எதிர்காலத்தில் College வாய்ப்பு கிடைக்காதுவிட்டால் என்றதோர் பாதுகாப்பு நோக்கத்திற்காகவே SLIATE இற்கு விண்ணப்பிக்கின்றனர். பின்னர் அவர்களுக்கு College கிடைத்தவுடன் SLIATE கற்கையை விட்டுவிட்டு Collegeகு சென்று விடுகின்றனர். ஆனால் தான் இன்னொரு வறிய மாணவனின் கற்றலுக்கான சந்தர்ப்பத்தை வீணாக்கியவர் என்பதை மறந்து விடுகின்றனர்.

இவ்வாறு எங்காவது எதாவது பட்டம் பெற்றால் சரி என்று இவற்றுக்கு விண்ணப்பிக்காமல் தனக்கு பொறுத்தமான தொழில் எது? அதற்கு எங்கு படித்தால் பொருத்தமானது என்பதை சிந்தித்து விண்ணப்பிக்கவும்.

உதாரணமாக தற்போது ஆசிரியத் தொழிலை இலக்காகக் கொண்ட ஒருவர் HND கற்கை நெறியைத் தெரிவு செய்வது பொருத்தமற்றது. அவ்வாறே சட்டத்துறையை தேர்ந்தெடுக்கும் ஒருவர் பல்கலைக்கழகம் அல்லது சட்டக் கல்லூரியைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

முகாமைத்துவதுறையை இலக்காகக் கொண்ட ஒருவர் கல்வியற் கல்லூரியைத் தெரிவு செய்வதில் பயனில்லை. ஆகவே இலக்கை நோக்கிய பயணம் அவரவர் பார்வைக்கேற்ப வித்தியாசப்படும். எனவே அவ்விழக்கிற்கு ஏற்பவே தமக்கான கல்விப்பாதையை அமைக்க வேண்டும்.

மேலும் தமது துறைக்கேற்ப உயர் கல்வி நிறுவனங்களை தெரிவு செய்த பின் இடைநடுவில் வேறொரு கல்வி நிறுவனத்தை நாடுதல், ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களில் கல்வியைத் தொடரல், பொருத்தமற்ற தெரிவு போன்றன இலக்கின்றிய பயணத்தின் வெளிப்பாடுகளாகவே அமையும். இதனால் இன்னொரு மாணவருக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்பு இழக்கப்படுகின்றது.

ஆகவே மாணவர்கள் அவ்வாறின்றி தமக்கு பொருத்தமான துறையை தெரிவு செய்ய வேண்டும். சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு முதலில் குறிக்கோளை வரையறுத்துக் கொள்ள வேண்டும். இது நீங்கள் விரும்புவதாக, உமக்கு ஈடுபாடுள்ளதாக இருக்க வேண்டும். உங்கள் குறிக்கோளை எவற்றினால் அடைய முடியும் என்ற தெளிவும், வழிமுறையும், அவற்றை அடைவதற்கான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் போதே வெற்றி இலக்கை அடைய முடியும்.

எனவே கடந்த வருடங்களில் உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர் கல்வி நிறுவனங்களில் தமது பட்டப்படிப்புக்களை தொடரவுள்ள மாணவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். சரியான நேரத்தில் பொருத்தமான முறைகளை கையாள்வதன் மூலமே எதிர்கால இலக்குகளுடனும், தொழிற்துறையுடனும் மிளிர முடியும்.

Asma Masahim
Panadura
SEUSL

வாய்ப்புக்கள் தேடி வந்து எமது கதவுகளை தட்டப் போவதில்லை. நாம் தான் நமக்கான பாதைகளை செதுக்க வேண்டும் இப்பாரிலுள்ள அனைவரும் ஒரே மாதிரியானவர்களல்லர். அனைவரும் செய்ய வேண்டிய வேலையும் ஒரே மாதிரியானவைகளல்ல. நம் இலக்கு…

வாய்ப்புக்கள் தேடி வந்து எமது கதவுகளை தட்டப் போவதில்லை. நாம் தான் நமக்கான பாதைகளை செதுக்க வேண்டும் இப்பாரிலுள்ள அனைவரும் ஒரே மாதிரியானவர்களல்லர். அனைவரும் செய்ய வேண்டிய வேலையும் ஒரே மாதிரியானவைகளல்ல. நம் இலக்கு…

20 thoughts on “இலக்குகளை திட்டமிட்டு கல்விப் பாதைகளை அமைப்போம்.

  1. Its like you read my mind! You seem to understand so much approximately this, like you wrote the guide in it or something. I think that you simply could do with some % to drive the message house a bit, however other than that, this is fantastic blog. An excellent read. I’ll definitely be back.

  2. magnificent publish, very informative. I’m wondering why the other experts of this sector do not understand this. You should continue your writing. I am sure, you have a huge readers’ base already!

  3. Have you ever considered about including a little bit more than just your articles? I mean, what you say is valuable and all. Nevertheless think about if you added some great photos or video clips to give your posts more, “pop”! Your content is excellent but with images and video clips, this site could certainly be one of the very best in its niche. Very good blog!

  4. Everything is very open with a precise description of the issues. It was truly informative. Your website is extremely helpful. Thanks for sharing!

  5. Hey! Quick question that’s entirely off topic. Do you know how to make your site mobile friendly? My web site looks weird when viewing from my iphone 4. I’m trying to find a theme or plugin that might be able to correct this problem. If you have any suggestions, please share. With thanks!

  6. Do you mind if I quote a couple of your posts as long as I provide credit and sources back to your weblog? My website is in the very same area of interest as yours and my visitors would genuinely benefit from a lot of the information you present here. Please let me know if this alright with you. Regards!

  7. I have fun with, cause I found exactly what I used to be looking for. You have ended my 4 day long hunt! God Bless you man. Have a nice day. Bye

  8. Не упускай возможность сорвать джекпот с игрой Лаки Джет на деньги – уже сегодня ты можешь стать победителем! Развлекайся и зарабатывай с Лаки Джет – игрой, которая сочетает в себе удовольствие и возможность заработка.

  9. Wow, marvelous blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is magnificent, let alone the content!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *