அவள் சளைத்தவள் அல்ல.
- by admin
- 10
வாழ்க்கை என்ற மேடையில்
காலடி எடுத்து வைக்க முன்னரும்
படித்து கொண்டிருந்தாள்.
வாழ்க்கை என்ற மேடையில்
காலடி எடுத்து வைக்கும் போதும்
படித்து கொண்டிருந்தாள்.
வாழ்க்கை என்ற மேடையை
விட்டிறங்கியும்
படித்து கொண்டிருந்தாள்.
கடந்த காலத்தில் அவள்
பட்ட காயங்களுக்கு
எதிர்காலத்தால்மருந்திட
படித்து கொண்டிருந்தாள்.
அவள் சுமந்த பழிச்
சொற்களை உடைத்தெறிய
படித்து கொண்டிருந்தாள்.
தரைமட்ட மாக்கப்பட்ட
அவளது இலக்குகளை
மீண்டும் கட்டி எழுப்ப
படித்து கொண்டிருந்தாள்.
தவறு செய்யாமல்
தண்டனை அனுபவித்த
கணங்களை சிறைப்படுத்த
படித்து கொண்டிருந்தாள்.
வினை விதைத்தவனை
பழி தீர்த்து தாகம் தீர
படித்து கொண்டிருந்தாள்.
இன்று அவளுக்கான
அடையாளத்தை
அவளே அடைந்து விட்டாள்.
வாழ்க்கையே அவளை வைத்து
விளையாடி நான்கு சுவற்றுக்குள்
முடங்கச் செய்த போதும்
அவள் தோற்றுப் போகவில்லை.
தடைகளை உடைத்தெறிந்து
எழுந்து நின்றாள்.
யாரும் எதிர்பாராத விதத்தில்
அவள் சாதித்து விட்டாள்.
அவள் எதற்கும் சளைத்தவள் அல்ல.
எதையும் சாதிக்க பிறந்தவள்.
Noor Shahidha.
SEUSL.
Badulla
வாழ்க்கை என்ற மேடையில் காலடி எடுத்து வைக்க முன்னரும் படித்து கொண்டிருந்தாள். வாழ்க்கை என்ற மேடையில் காலடி எடுத்து வைக்கும் போதும் படித்து கொண்டிருந்தாள். வாழ்க்கை என்ற மேடையை விட்டிறங்கியும் படித்து கொண்டிருந்தாள். கடந்த…