இன்றைய பெஷன்

இரவெல்லாம் விழித்திருந்து
எவனோ ஒருவருடன்
காதலென்ற பெயரில்
கைத்தொலைபேசியில்
கண்டதையெல்லாம் கதைப்பதே
இன்றைய பெஷன்

காலங்கள் கடக்கிறது
நாகரீகம் வளர்கிறது
காதலென்ற நாசத்தைத் தேடி
இளசுகள்நாம் விரைகின்றோம்

இருபது வருடமாய் கட்டிக்காத்த கற்பை
இரண்டுமாத பழக்கத்தில்
இலகுவாக இழக்கின்றோம்
இதுதான் இன்றைய பெஷன்

சாத்தானின் சதியினால்
இளமனசு துடிதுடிக்க
எவனையோ கண்டதும்
ஹோர்மோன்கள் கொதிகொதிக்க
காதலென்ற தீயினிலே
குளிர்காய ஆசைப்பட்டு
நரகத்துத் தீயினை
மனம்மறந்து போகின்றோம்

விழிகளிலே கவர்ச்சி
விதவிதமான செல்ஃபி
எவனோ ஒருவனுக்கு
உடம்பெல்லாம் காட்சி
வீட்டாருக்கு தெரியாமல்
விடியவிடிய பேச்சு
இதுதான் இன்றைய பெஷன்

நமதிந்த இழிச்செயல்
யாருக்கும் தெரியாமலிருக்கலாம்
படைத்த இறைவனுக்கு தெரியுமே!
திசைமாறிய எமது
திருட்டுத்தனமான செயல்கள்
சிறிதும் சிந்தாமல்
இறைவனின் கணக்கிலிருக்கும்

இன்றைய பெஷனிது
காதலென்ற பெயர்சூடி
வாலிபத்தை வலைவீசி
நமைசிக்கவைக்கும் பெஷனிது
சீரழிந்த பெஷனிது

மார்க்கம் மறந்து
ஒழுக்கம் இழந்து
பெற்றோரின் நம்பிக்கையை
குழிதோன்றிப் புதைத்து
ஹராத்தை நோக்கி
நமை நகர்த்துகின்ற
பெஷனிது

காதலென்ற பெயர் கொண்ட
இன்றைய பெஷனிது

RUSTHA SALAM
South Eastern university of Sri Lanka

Leave a Reply