பாரதியே உனக்கு ஒரு கவி

  • 12

என் விரல்களைக்கவி
எழுதத் தூண்டிய கவிப்பேரரசு
உனக்கு ஒரு கவிதை படைக்க நினைத்தேன்
உண்மையில் உனக்கு நிகர் நீ மட்டுமே.

தலைக்கு தலைப்பாகையும்
கண்ணில் கண்ணியமும்
வீச்சருவாள் மீசையும் வைத்திருந்து
கவிப்புயல் நீ அல்லவா.

சொல்லொணா துயரங்களில்
வாழ்ந்த பெண்களுக்கு
மடைமை கலைந்து வாழ
வலி படைத்த மகான் நீ.

உறக்கத்தின் பிடியில் உறங்கிக்கிடந்த
பாரதமாதாவை கவியாலே துயில் நீங்கி
சுதந்திரக் கொடியை பிடிக்க
வைத்த வீராதி வீரன் நீ.

எதுகை மோனை உன் விரலில்
காதல் உவமையும் உருவகமும்
உன்னோடு மோதல் என கொண்டு
நீ வரைந்த கவியாலே பலரின் மனதில்
பவ்வியமாய் வலம் வருபவன் நீ.

தமிழ் மாதாவின் கருவிலே உருப்பெற்று
தமிழகமெங்கும் பெருமை சேர்த்த
தளபதியே – விந்தைகள் பல
கவியிலே காட்டியவன் நீ.

உன் மீது நான் கொண்ட
உதிரா பிரியத்தினால்
உனக்காக நான் வடித்த
உள்ளம் உருகிய கவித்துளிகள் இவை.

வெள்ளைக் காகிதத்தை
என் பேனா முனையில் வென்றிட
கற்றுத்த உனக்கு
என் கவி வரி சமர்ப்பணம்

Saburas asanar
(SEUSL)®

என் விரல்களைக்கவி எழுதத் தூண்டிய கவிப்பேரரசு உனக்கு ஒரு கவிதை படைக்க நினைத்தேன் உண்மையில் உனக்கு நிகர் நீ மட்டுமே. தலைக்கு தலைப்பாகையும் கண்ணில் கண்ணியமும் வீச்சருவாள் மீசையும் வைத்திருந்து கவிப்புயல் நீ அல்லவா.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *