தன்நலம் கருதி உயிர்க் காப்போம்

அவசர உலகில் அனைத்திற்கும் தீர்வு காண்பதும் வழக்கமாக இருந்த போதும் பிரச்சினைகளை தவிர்த்து வெற்றிக் காண்பதும் அல்லது குறித்த விடயமே உலகை அச்சுறுத்துவதுமே உலக நியதி. அவ்வகையாக அச்சுறுத்தலான விடங்களில் ஒன்றே தற்கொலை.

தற்கொலை எனப்படுவது ஒரு மனிதன் தனிப்பட்ட அல்லது பொது நோக்கத்தை கருத்திற் கொண்டு தானகவோ, பிறரால் தூண்டப்பட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ளல். தன் விருப்பப்படி உயிரை மாய்த்துக் கொள்ளுதலே ஆகும்.

தற்கொலையை குறைக்கும் நடவடிக்கையில் உலக சுகாதார அமைப்பு செப்டம்பர் 10 உலக தற்கொலை தினத்தை அனுஷ்டித்து வருகின்றது. ஒவ்வொரு 40 விநாடிகளிலும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

மானிட வாழ்வென்றால் மகிழ்ச்சி மட்டும் தான் என்றால் இவ்ஞாலம் சிறந்திருக்காது என்னவோ! மகிழ்ச்சி துக்கம் இரண்டரக்கலந்தது தான் நம் வாழ்க்கை!மானிடன் கஷ்டத்தில் பக்குவப்படுகின்றான். கஷ்டத்தை முகாமைத்துவம் செய்தவன் நிச்சயம் இழப்பிலும் பெரிய வெற்றியை ஈட்டுவான். ஆனால் அந்நிலை மறந்து துயர் பட்டு மனவலிமையை இழப்பது சிந்தனையில் வாழ்க்கையின் வெற்றிட உணர்ச்சி தற்கொலை எண்ணத்தை உண்டு பண்ணி நம் வாழ்கையை சீர் குலைக்கும்.

எனவே நம்முள் மனவலிமை கொண்டு வாழத் துவங்குவோம். நம்மை நாமே கொலை செய்ய ஆற்றல் உண்டெனில் கோழையாக ஏன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் வேண்டும்? வாழ்கையை வெல்வோம்!

கருவறையில் இடம் பிடித்த எமக்கு இவ்வுலகு கண்ட எமக்கு ஏன் இயலாது! நாம் ஒவ்வொருவரும் சாதிக்கப்பிறந்தவர்கள். உணர்வுகளை சிந்தினையில் உட்படுத்தாமல் நம்மால் இயலும் என்ற சிந்தனையில் தோல்வியில் பக்குவப்பட்டு வெற்றிக்கு வழியை தேடுவது நம் வாழ்க்கை
பயணத்தை சிறப்பிக்கும் என்பதை ஓர் நிமிடம் சிந்திப்போம். நம் வாழ்க்கை அர்த்தமில்லை என உயிரை துச்சமாக நினைக்க பல்வேறு காரணிகள் காரணமாகின்றன. அவை பொருளாதார சிக்கல் காதல் தோல்வி பரீட்சை தோல்வி நாட்பட்ட நோய்கள் உறவுகளின் இழப்பு என பல்வகைப்படுத்தலாம்.

பல கோடீ மானிடர் மன இயல்பும் மன வலிமையும் வித்தியாசப்பட்டு ஒரு சிலருக்கு தற்கொலைதான் இனி முடிவு என சிந்தனையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அவற்றில் உள்ள சிக்கல்களை தாங்க இயலாத மனநிலமையே இதற்கு காரணம். பிரச்சினையின் போது தீர்வை சிந்திப்பதே புத்திசாலித்தனம் என்பதை மறந்து விடாமல் இருப்போம்.

வாழ்க்கை பயணத்தில் தோல்வி கண்டு சாதித்தவர்களை சிந்தித்துப் பாருங்கள்! தற்கொலை எண்ணங்களே தவிர்த்துக் கொள்ள நமக்குள் எழும் உணர்ச்சிகளில் ஏற்படும் துக்க உணர்வை களைத்து எரிவோம். எம்மால் முடியும் எனும் மனோபாவத்தை கற்றுக் கொள்வோம். அசாதாரண நிலைகளை நெருங்கிய நமக்கு ஆதாரவான நண்பர்கள் உறவினர்களிடம் பகிர்வதும் நம்மை சீர் படுத்தும்.

நம் உயிர் நம்மிலும் நம்மை தங்கி இருக்கும் நமக்கென வாழ்கின்ற உயிர்களுக்கு முக்கியம் என்பதை மனதினில் நிறுத்திக் கொள்வோம். நமக்குள் நல் எண்ணம் கொண்டு வளமான வாழ்க்கைக்கு தயாராகுவோம். தற்கொலை எண்ணம் தொடர்ந்தால் உளவளத்துனணயை நாடி நம்மை தளராமால் வாழ்க்கையை வாழத் துவங்குவோம். ஒவ்வொரு உயிரும் பெறுமதியானது. வாழ்வது ஒருமுறை. வாழ்த்தட்டும் தலைமுறை.

AFRA MINSAR

Leave a Reply