பெண் பற்றிய இஸ்லாமிய சிந்தனை

  • 8

இன்று உலகில் பாராட்டப்படும் விடயங்களை விட விமர்சிக்கப்படும் விடயங்களும், குறை கூறப்படக்கூடிய விடயங்களும் அதிமாகமாகவே காணப்படுகிறது.

அந்த அடிப்படையில் இஸ்லாம் தான் அதிகமான மக்களால் மிகவும் கொச்சமாக விமர்சிக்கப்படக்கூடிய விடயமாக காணப்படுகிறது. ஆனால் மதத்தையும் தாண்டி பெண்களை மிகவும் தவறான முறையில் விமர்சிப்பதை எம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

எல்லா மத்திலும் பெண்ணை விமர்சிக்கும் ஒரு கூட்டம் காணப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் மாற்று மதத்தவர்கள் அதிலும் இஸ்லாத்தை மையப்படுத்துகிறார்கள். அதாவது இஸ்லாத்தில் ஒரு பெண்ணின் வெளித்தோற்றம் தொடக்கம் முதல் உள்நோக்கம் வரையிலான அனைத்து விடயங்களிலும் வழிகாட்டுதல்கள் காணப்பட்டாலும் அவர்கள் தொடர்பிலான விமர்சனங்கள் முன் வைக்கிறார்கள்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு எதிராக மிகப்பெரிய அடக்கு முறையை கையாளுவதாக குற்றம் சுமத்துகிறார்கள். அதாவது, இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்தை ஏற்பதில்லை. அன்றாட வாழ்கைப்பாடுகளில் முழுமையாக, சுதந்திரமாக ஈடுபட இயலாத அளவுக்கு முஸ்லிம் பெண் மீது கட்டுப்பாடுகளும் முட்டுக்கட்டைகளும் திணிக்கிறது. அவள் முடக்கப்படுகிறாள்; விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறாள்; எந்நேரமும் ஆண்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப் படுகின்றாள் என்றெல்லாம் தவறான கருத்துக்கள் அவர்களால் மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது.

ஆனால், ஆண் – பெண் சமத்துவத்திற்கு முதன்முதலாகக் குரல் கொடுத்தது இஸ்லாம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. ஆணும் பெண்ணும் சமம்; இருபாலரும் சமமான தகுதி கொண்டவர்களே; வாழ்வில் வெற்றி – தோல்விக்கான அடிப்படைகளும் இருபாலரும் சமமான தகுதி கொண்டவர்களே; வாழ்வில் வெற்றி – தோல்விக்கான அடிப்படைகளும் இருபாலருக்கும் பொதுவானவையே என்றுதான் இஸ்லாம் கூறுகின்றது. ஆனால் அவர்களால் ‘ஒரே களத்தில் செயலாற்றுவதற்கு இரு பாலருக்கும் சுதந்திரம் தரப்பட்ட வேண்டும். அத்தகைய சுதந்திரம் இல்லாமல் ஆண் – பெண் சமத்துவத்தை நிறுவ முடியாது’ என இன்றைய காலத்தில் உரத்து முழங்கப்படுகின்ற வாதம் தவறானது என இஸ்லாம் கூறுவதனால் புறந்தள்ளுகின்றது.

கி.பி 6 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு உலகில் பெண்கள் அடக்கப்படும் ஒரு அவல நிலை மாற்றம் பெற்றது. அதாவது அதற்கு முற்பட்ட காலப் பகுதியில் பெண்கள் வெருமனே ஒரு அழகுப் பொருளாக அல்லது ஆணிணுடைய இச்சையை தீர்க்கக் கூடிய ஒரு ஜடமாகவே பார்க்கப்பட்டாள். ஒரு சில இராஜ வம்சத்துப் பெண்களைத் தவிர ஏனைய பெண்கள் அடிமைகளாகவும், வேலைக்காரிகளாவுமே காணப்பட்டனர்.

இப்படியாப்பட்ட ஒரு கால கட்டத்தில் தான் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அல் குர்ஆன் எனும் இறை வேதத்தை மக்கள் மத்தியில் கூறினார்கள். அவ்வேதத்தில் ஆண் – பெண் இரு பாலாரும் சமமே என்றும் இருபாலாரும் இனைந்தால் தான் ஒரு ஒழுக்கதான சமுதாயத்தை உருவாக்கலாம் என காணப்படும் தத்துவத்தை அல்லாஹ் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் மக்கள் மத்தியில் உணர்த்தினான்.

இஸ்லாத்திற்கு முந்தையக் காலத்தில் பெண் அன்றாடம் அக்கிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டாள். தாழ்ந்தவள் என்றும் மோசமானவள் என்றும் ஒதுக்கி வைக்கப்பட்டாள். பெண்கள் பிறந்தாள் கல்லிப் பால் ஊற்றி கொலை செய்யப்படக் கூடிய நிலையில் காணப்பட்டாள். சந்தைகளில் காய்கறிகள் விற்கப்படுவது போன்று கூவி கூவி விற்கப்பட்டாள். எப்போதும் யாராவதின் தயவிலும், ஆதரவிலும் காணப்பட்டாள். இவ்வாறு பெண் என்றாலே ஒரு விடை அல்லாத கேள்விக் குறியாக காணப்பட்டாள்.

இது மாதிரியான அடக்குமுறை சூழலில் இஸ்லாத்தின் வருகையின் பின்னால் அந்நிலை எல்லாமே மாறியது. பெண் பற்றிய சிந்தனை மாறின. பார்வைகள் மாறின. நடத்தை, ஒழுக்கம் ஆகிய அனைத்திலும் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. இஸ்லாத்தினால் புத்தெழுச்சி பெற்ற மனிதன் புதிய கோணத்தில் சிந்திக்கத் தொடங்கினான்.

மனித வாழ்வு புதிய திசையில் நடக்கத் தொடங்கியது. இந்த இனிய மாற்றங்களின் ஒளிமயமான பகுதி பெண்ணைப் பற்றிய பார்வையையும், சிந்தனையையும், அணுகுமுறையையும் அடியோடு மாற்றிவிட்டது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவுகளுக்குப் புதிய அடித்தளங்கள் கிடைத்தன. இவ்வாறு இஸ்லாத்தில் தான் பெண்களுக்கான நியாயங்களும் அவர்கள் இவ்வுலகில் எப்படியாப்பட்ட ஒரு பங்கினை வகிக்கிறார்கள் என்று உலகம் அறிந்து கொண்டது.

முதல் மனிதனும் நபியுமான ஆதம் (அலை) தொடக்கம் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை உலகிற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் பெண்களின் சிறப்பை எடுத்துக் கூறினார்களே தவிர எவரும் அவர்கள் மதிப்பற்றவர்கள் எனக் கூறவில்லை.

இறுதி வேதமாகிய அல் குர்ஆனில் ஒரு அத்தியாயத்தையே இறைவன் பெண்கள் தொடர்பாக அருளியுள்ளான். ‘சூரா அந்நிஸா’ எனும் சூரா நான்காவதாக அல் குர்ஆனிலே காணப்படுகிறது. அதன் முதல் வசனமே ஆண் – பெண் சமத்துவம் தொடர்பாகத் தான் விளக்கப்படுத்துகிறது.

‘மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவற்லிந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர். இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உலிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான்.’ (4:1)

இந்த வசனம் தொடக்கம் இறுதி வரை பெண்களைப் பற்றி குறிப்பிடுகிறான். இவ்வாறு அல்லாஹ்வால் இறக்கி அருளப்பட்ட அல்குர்ஆனிலும் நபிகளாரால் கூறப்பட்ட ஹதீஸிலும் பெண்களுக்கு சிறப்புகளும் முன்னுரிமைகளுமே காணப்பட்டன. மாறாக எவ்வித தீங்க விளைவிக்கும் விடயங்கள் இடம்பெறவில்லை.

அந்த வகையில் பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடைத்தது. சமூகத்தில் அங்கீகாரம் கிடைத்தது. ஆண்களுக்கு நிகராக மரியாதை கிடைத்தது. குடும்பத்தின் முக்கிய அங்கத்துவம் கிடைத்தது . என பெண்ணின் சிறப்பைப் பற்றி நல் பல கருத்துக்களையும் , சிந்தனைகளையும் அடிக்கிக் கொண்டே போகலாம்.

எனவே பெண்ணைப் பற்றிய சிந்தனைகளை அகற்றி மதிக்கும் ஒரு பக்குவத்தை எமக்குள் வளர்த்துக் கொள்வோம்.

Mufthy
SEUSL 

இன்று உலகில் பாராட்டப்படும் விடயங்களை விட விமர்சிக்கப்படும் விடயங்களும், குறை கூறப்படக்கூடிய விடயங்களும் அதிமாகமாகவே காணப்படுகிறது. அந்த அடிப்படையில் இஸ்லாம் தான் அதிகமான மக்களால் மிகவும் கொச்சமாக விமர்சிக்கப்படக்கூடிய விடயமாக காணப்படுகிறது. ஆனால் மதத்தையும்…

இன்று உலகில் பாராட்டப்படும் விடயங்களை விட விமர்சிக்கப்படும் விடயங்களும், குறை கூறப்படக்கூடிய விடயங்களும் அதிமாகமாகவே காணப்படுகிறது. அந்த அடிப்படையில் இஸ்லாம் தான் அதிகமான மக்களால் மிகவும் கொச்சமாக விமர்சிக்கப்படக்கூடிய விடயமாக காணப்படுகிறது. ஆனால் மதத்தையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *