உம்மா யுனிவர்சிட்டிலதான் வேல

0 Comments

அவள் புன்னகை முகத்தழகி. குணத்துக்கேற்ற பெயர். நீங்களே பெயரை தீர்மானித்துவிட்டீர்களா? “தீனத்” தான் அவளது பெயர். கண்டவுடன் புன்னகைத்து ஸலாம் கூறி விடுவாள். பல்கலை தந்த உறவுகளில் அவளும் ஒருத்தி. அறைத்தோழியாய் அவளை அடையாவிட்டாலும் பல்கலைத்தோழியாய் கிட்டியது பாக்கியம் தான்.

Hostel வாழ்க்கை வாழ விரும்பியவளுக்கோ நடை தூரத்தில் இருக்கும் பல்கலை தான். ஒவ்வோரு நாளும் நடந்து வருவாள். கடற் காற்றை சுவாசித்தபடியே, ஏதேச்சையாக அன்று அவளுடன் நீண்ட நேரம் உரையாடினேன். இறுதியில் அவள் வீட்டுக்கு ஒரு நாள் வர வேண்டும் என்று பிடியாய் நின்றாள்.

Hostel சாப்பாட்டை சாப்பிட்டு அழுத்த நாவுக்கு இவளின் அழைப்போ இனிக்கத் தான் செய்தது. அன்று அறைத் தோழிகளுடன் ஆசையுடன் சென்றோம் அவள் இல்லம் நோக்கி, அவளின் வரவேற்போ பிரமாதமாய்த் தான் இருந்தது. தன் உறவுகளுக்கு பல்கலை தந்த நட்புக்களைக் காட்டி மகிழ்ந்தாள். ஆனாலும் அவள் காட்டிய உறவுகளுள் அவள் தாயைக் காணாதது உள்ளத்தைக் கணக்கத் தான் செய்தது.

“உம்மா எங்க”

என்டு கேட்ட போதே,

“யுனிவர்சிட்டி ல வேலை evening தான் வருவா”

என பதிலளித்தாள்‌‌.

இவள் யுனிவர்சிட்டி letcher ட மகளாகத் தான் இருக்க வேண்டும் என மனதால் நினைத்தேன். தாயை யுனிவர்சிட்டியில் சந்திக்கலாம் எனக் கூறி எம்மை வழியனுப்பி வைத்தாள். அவளின் தாயை சந்திக்க ஆவலாய் காத்திருந்தோம்.

பலநாள் காத்திருப்புக்குப் பின் அவள் தாயை கண்டேன் பல்கலையில், பல்கலைக்கழக வளாகத்தை தூய்மைப்படுத்தும் உன்னத பணியில் அவள் தாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். தந்தையை இழந்த தன் குழந்தைக்கு அன்புத் தாயாகவும் தந்தையாகவும் இருந்தார். தன் மகள் உயரத்தை அடைய உழைத்துக் கொண்டிருந்தாள். தன் பிள்ளையை குணத்திலும் அறிவிலும் மேம்பாடைய முயற்சிக்கும் ஒவ்வொரு தாயும் தியாகிதான்.

Farisa Asadh 

Leave a Reply

%d bloggers like this: