இயற்கை

கண் கவரும் காலையிலே
கதிரோனின் கதிரொளியால்
கண் அயர்ந்த கமலமலர்
காத்திருந்து கண் விழிக்கும்

வெண்பனி போல் நீர் சுரங்கள்
அருவியிலே வழிந்தோட
மீனினத்தின் குதூகலமோ
மின்சாரம் போல் இருக்கும்

புற்பூண்டின் அரும்புகளில்
பனித்துளிகள் பதுங்கிடவே
பகலோனின் பார்வையினால்
பயந்து நீராய் உருகிவிடும்

இதழோடு இதழ் பதித்து
இதமான பூக்களெல்லாம்
மௌன ராகம் பாடும் வேளை
தேனீகளின் ரீங்காரம்
இசையாக மாறிவிடும்

மலை முகட்டின் சாரலிலே
வெண்பனிகள் பதிந்திடவே
வெண் மேகம் நடுநடுங்கி
நீராக வழிந்துவிடும்

௧டலலையின் சீற்றத்தில்
வெண்நுரைகள் கரையொதுங்க
கடலலையின் கவலையெல்லாம்
கறியுப்பாய் கசிந்துவிடும்

இயற்கை எனும் தாய் மடியில்
இகம் முழுதும் உறங்கிடவே
இனிமையாக முழுமதியும்
தன் சுடரை பரப்பிடுமே

இயற்கை எனும் அழகொளியில்
இம்சிக்கும் துஷ்டமெல்லாம்
இறைவனது ஆசியினால்
இயல்பாக மறைந்திடுமே

Shima Harees
Puthalam

Leave a Reply