ஆளுமை அஷ்ரப்

பல்கலையில்
‘நானும் ஒருத்தராய்’
என விழித்தோன்றல்களில்
தோன்றிய அத்தனை கனவுகளும்
கச்சிதமாய் குடியேறி நனவானது
எத்தனையோ உள்ளங்களில்.

காரண கருத்தாவாம்
மர்ஹூம் அஷ்ரப்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
கம்பீரமாய் திகழ்கின்றது
உம் கனவுகளில் ஒன்றாய் நனவாகி

இருபது வருடம்
உம் மண்ணறை வாழ்வு
இன்றுடன்

நீர் மறைந்த தினத்திலேயே
பட்டதாரிகள் படைசூழ
இருக்கிறார்கள் இன்று

கோடிகோடி நன்மைகள்
வந்து சேரும் என்றும்தான்
உம் மண்ணறைக்கு

கல்விக்காய் நீர் செய்த
இம்மாபெரும் சிற்பம்
இப்பல்கலை
பிரார்த்தனைகள் என்றும்
உமக்கு இருக்கும்

N.SOHRA JABEEN
AKKARAIPATTU
SEUSL

Leave a Reply