வல்லவன் அல்லாஹ்வோடு தனியாக கொஞ்ச நேரம்

  • 15

அகிலத்தின் அதிபதியான எல்லோருக்கும் பொதுவான இறைவனோடு கொஞ்ச நேரம் தனியாக இருப்பதற்கு முன்பதிவுகள் தேவையில்லை. நீ விரும்பும் எந்த நேரத்திலும் தனியாக சந்தித்து உறவாடலாம். இறைவா நீ எவ்வளவு கண்ணியமானவன்!

நீ இறைவனோடு நீண்ட நேரம் எடுத்ததற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அவன் உன்னை நேசிக்கிறான். உன் உறவாடலை விரும்புகிறான். இறைவா நீ எவ்வளவு பெரிய கருணையுள்ளவன்.

நீ அவனோடு தனிமையில் உறவாடும் போது ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் கேட்பது இறைவனுக்கு தொந்தரவு என்று எண்ணாதே. அவன் தொல்லை கொடுத்து கெஞ்சி கெஞ்சி கேட்பதையே விரும்புகிறான். இறைவா நீ எவ்வளவு மகத்தானவன்.

நீ அவனோடு தனியாக இருந்து உன் தேவைகளை பெற்றுக் கொள்ள எடுப்பான மொழிநடை தேவையில்லை. நியாயத்தை பேசும் ஆதாரங்கள் அவசியம் இல்லை. ஏனெனில் நீ உன் கோரிக்கைய சொல்ல முன்பே அவன் உன் தேவையை அறிந்தவன். இறைவா நீ எவ்வளவு நெருக்கமானவன்.

நீ இறைவனோடு தனிமையில் உரையாடும் போது உனது குரல் தழுதழுத்தால், வார்த்தைகள் தடுமாறினால், கண்கள் கலங்கினால் நீ ஒரு போதும் சங்கடப்படத் தேவையில்லை. இறைவனிடத்தில் பலவீனம் என்பது வலிமையும் பெருமையுமாகும். இறைவா நீ எவ்வளவு மென்மையானவன்.

படைத்தவனோடு நீ தனியாக உறவாடும் போது உன் தவறுகளை ஒப்புக்கொள்ள முடியும். குற்றங்களை ஒப்புக் கொண்டதால் வரும் பின்விளைவுகளை எண்ணி அஞ்சத் தேவையில்லை. காரணம் நீ செய்த தவறுகளை ஏற்றுக் கொள்வது இறைவனுக்கு மிகவும் பிடிக்கும். அதைத்தான் அவன் விரும்புகிறான். இறைவா நீ எவ்வளவு கம்பீரமானவன்.

நீ கொஞ்ச நேரம் தனியாக இறைவனோடு உரையாடி, உன் தேவைகளை அவன் முன்னிலையில் வைத்து விட்டு பிரிந்து சென்று விடுவாய். படைத்தவன் கருணையுள்ளவன். அவன் உனக்கு தற்போதைற்கு எது பொருத்தமானது, எதிர்காலத்தில் எது பொருத்தமாக அமையும் என்பதை திட்டமிட்டு ஏற்பாடு செய்கிறான். அது உனக்குத் தெரியாது.

இறைவனோடு தனிமையில் இருப்பவர்களுக்கு சுபசோபனம் உண்டாகட்டும்.

படைத்த ரப்பே ரஹ்மானே என்று அழைப்பவன் தோல்வி காண்பதில்லை. ஒன்றோ அழைப்புக்கு பதில் கிடைக்கும். அல்லது உன் துயர் துடைக்கப்படும். அ‌ல்லது உன் பதிவேட்டில் நன்மை எழுதப்படும்.

முஹம்மத் பகீஹுத்தீன்

அகிலத்தின் அதிபதியான எல்லோருக்கும் பொதுவான இறைவனோடு கொஞ்ச நேரம் தனியாக இருப்பதற்கு முன்பதிவுகள் தேவையில்லை. நீ விரும்பும் எந்த நேரத்திலும் தனியாக சந்தித்து உறவாடலாம். இறைவா நீ எவ்வளவு கண்ணியமானவன்! நீ இறைவனோடு நீண்ட…

அகிலத்தின் அதிபதியான எல்லோருக்கும் பொதுவான இறைவனோடு கொஞ்ச நேரம் தனியாக இருப்பதற்கு முன்பதிவுகள் தேவையில்லை. நீ விரும்பும் எந்த நேரத்திலும் தனியாக சந்தித்து உறவாடலாம். இறைவா நீ எவ்வளவு கண்ணியமானவன்! நீ இறைவனோடு நீண்ட…

One thought on “வல்லவன் அல்லாஹ்வோடு தனியாக கொஞ்ச நேரம்

  1. I am really impressed together with your writing abilities as well as with the layout for your blog. Is this a paid topic or did you customize it your self? Either way stay up the excellent quality writing, it is uncommon to peer a nice weblog like this one today..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *