போதையால் மாறிய‌ பாதை (தொடர் 1)

  • 11

பெனால்டி பொக்ஸ் (Penalty Box) இற்கு சற்று வெளியே ஃப்ரீ கிக் (Free Kick). கோல்கீப்பராக சினாஸ். என் நண்பன்!

எனக்குத் தெரிந்த சிறந்த கோல்கீப்பர்களில் அவனும் ஒருவன். அவனைத் தாண்டி கோல் அடிப்பது சற்றுக் கடினம். இடது, வலது, மேலே, கீழே என எந்தப் பக்கமாக அடித்தாலும் பாய்ந்து பாய்ந்து பந்தைப் பிடிக்கும் லாவகம் உடையவன்.

“ஒலிவர் கான்” என்று அவனை அழைப்பதில் இருந்து அவனது திறமையைப் புரிந்து கொள்ளுங்கள்.

சினாஸ் மூன்று பேரை கோல் போஸ்ட் (Goal Post) இற்கு முன்னே வோல் (Wall) ஆக வைத்தான். இவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியிலும் அவனுக்கு சற்றுத் தடுமாற்றம். டென்ஷன் (Tension).

ஏனெனில், ஃப்ரீ கிக் அடிக்கப் போவது நான்! எமதணியின் ஃபோர்வர்ட் ப்ளேயர். (Forward Player) எனக்கும் அவனுக்கும் இடையே எப்போதும் ஓர் ஆரோக்கியமான போட்டியொன்று இருக்கும். உதைப்பந்தாட்டப் பயிற்சிகளின் போது கீரியும் பாம்பும் போல ஒரு கலவரமே நடக்கும். ஆனால் அடிவாங்குவது என்னவோ உதைப்பந்து தான்.

நாமிருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடுவதைப் பாரக்கவென்றே ஒருசில ரசிகர்கள் உண்டு. அன்றும் அவர்கள் கோல் போஸ்ட்டுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தனர்.

“அமான்! அமான்! அடி மச்சான் நெருப்பு கோல் ஒண்டு கோர்னரால இறங்கோணும்.”

எனது பெயரைக் கூறிக் கத்த ஆரம்பித்து விட்டனர். ரெஃப்ரீ விசில் அடிக்கத் தயார் ஆகி விட்டார்.

நான் இடது கால் வீரன். கோல் போஸ்ட்டின் இடது மேல் மூலையை எனது கண்கள் ஸ்கேன் செய்ய ஆரம்பித்தன. அதேநொடியில் எனது மூளை கம்பியூட்டர் போல எனக்கே தெரியாத பல கணக்குகளைப் போட்டு கால்களுக்கு சிக்னல் வழங்கிக் கொண்டிருந்தது. எனது ஃபேவரைட் ஷொட்டை அடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.

பெட்டாஹ் (Pettah) சந்திகளைப் போல இருந்த மைதானத்தில் மயான அமைதி. சினாஸுக்கும் தெரியும் நான் எங்கே அடிக்கப் போகிறேன் என்று. அதற்கமையவே அவன் தடுப்புச்சுவர் அமைத்திருந்தான்.

ரெஃப்ரீயின் விசில் அமைதியான நதியைக் கிழித்தோடும் படகைப் போல் காதைக் கிழிக்க, நான் பந்தை உதைக்க ஐந்து அடிகள் மெதுவாக ஓட, சினாஸ் இடது பக்கமாக நகர்வதை என்னால் உணர முடிந்தது.

“நீ எந்தப் பக்கம் வந்தால் என்ன, என்றுமே பிசகாத, யாருமே இதுவரையில் பிடிக்காத எனது ஃபேவரைட் ஷொட்டை நான் அடிக்கத்தான் போகிறேன், முடிந்தால் பிடி.” என்று மனதில் கூறிக்கொண்டே பந்திற்கு வலிக்காமல் புல்லட் வேக அடியொன்றை அடித்தேன்.

பந்து மேலே எகிறி கோல் போஸ்ட்டுக்கு சற்று வெளியே செல்வது போலச் சென்று இடது பக்க மேல் மூலையினூடு “டக்” என்று உள் நுழைந்தது.

நான் அடித்த அடிக்கு பனானா கிக் (Banana Kick) என்று சொல்வார்கள். மைதானமே ஒருகணம் ஆடிப் போய்விட்டது. சினாஸின் முகத்தில் ஒரு சிரிப்பு. அவன் ரசித்துக்கொண்டு இருந்தான். எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட ஆரம்பித்து விட்டனர்.
இந்தப் பாராட்டெல்லாம் எனக்குப் பழகிப்போன ஒன்று தான்.

சினாஸ் இதுவரையில் எனது ஃபேவரைட் ஷொட்டைத் தடுத்ததில்லை. ஏன், எனக்குத் தெரிந்து யாருமே தடுத்ததில்லை.

இதற்காக நான் எடுத்த பயிற்சிகள் சொல்லில் அடங்காதவை. எத்தனை தோல்விகள். எத்தனை வலிகள். பலமுறைகள் ஷொட் அடிக்கும் போது, பந்து வெளியே சென்று விடும். அல்லது பார் (Bar) இல் பட்டுவிடும். கடின பயிற்சியின் பின்னரே 90% ஆன ஷொட்கள் கோலாக மாறின.

எனக்கென்றே ஊரில் பல ரசிகர்கள் இருந்தனர். நான் விளையாடுவதைப் பாரக்கவென்றே ஒரு கூட்டம் கூடும். அத்துடன் எமது பாடசாலை உதைபந்தாட்ட அணியின் முக்கிய வீரன் நான். அப்போது நான் பதினொன்றாம் ஆண்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்ததால், அன்டர் செவன்டீன் (Under 17) பிரிவில் விளையாடிக்கொண்டு இருந்தேன்.

சினாஸ் ஒன்பதாம் ஆண்டு. எனவே அவன் அன்டர் பிஃப்டீன் (Under 15). இருப்பினும் அவன் பெரிய நாநாமார்களுடன் கூட விளையாடிக் கலக்குவான்.

எனது சிறப்பாட்டம் காரணமாக எமது பாடசாலை அணி மாவட்ட சம்பியனாகி, மாகாண சம்பியனாகி, கடைசியில் அகில இலங்கைச் சம்பியனானோம். மூன்று தொடர்களிலும் நானே தொடர் நாயகன் (Man of the tournament). எனது திறமையைக் கண்டறிந்த இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் (Srilankan Foodball Federation), மலேசியாவில் நடக்கும் under 17 ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு நானும் தெரிவு செய்யப்பட்டேன். இவ்வளவு சிறப்பாகச் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை, இப்படியே தொடர்ந்து சென்றிருந்தால் இன்று உலகின் மிகப்பெரிய கிளப்களில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு இலங்கை வீரனாக என்னைப் பார்த்து பெருமைப் பட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால்,

தொடரும்
Ifham Aslam (Beruwala)

பெனால்டி பொக்ஸ் (Penalty Box) இற்கு சற்று வெளியே ஃப்ரீ கிக் (Free Kick). கோல்கீப்பராக சினாஸ். என் நண்பன்! எனக்குத் தெரிந்த சிறந்த கோல்கீப்பர்களில் அவனும் ஒருவன். அவனைத் தாண்டி கோல் அடிப்பது…

பெனால்டி பொக்ஸ் (Penalty Box) இற்கு சற்று வெளியே ஃப்ரீ கிக் (Free Kick). கோல்கீப்பராக சினாஸ். என் நண்பன்! எனக்குத் தெரிந்த சிறந்த கோல்கீப்பர்களில் அவனும் ஒருவன். அவனைத் தாண்டி கோல் அடிப்பது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *