அறிஞர்களின் பொன்மொழி

  • 10

 قال الإمام ابن القيم -رحمه الله-:

فأصل ما تزكوا به القلوب والأرواح: هو التوحيد .

[إغاثة اللهفان(١ / ١٠٨)]

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உள்ளங்களும், ஆத்மாக்களும் தூய்மையடைவதின் அடிப்படை ஓரிறைக்கொள்கையாகும். (நூல்: இஙாஸதுல் லஃஹ்பான், பாகம்: 01, பக்கம்: 108)

قال الإمام ابن القيم -رحمه الله-:

إن العبد ليأتي يوم القيامة بحسنات أمثال الجبال، فيجد لسانه قد هدمها عليه كلها .

(الجواب الكافي (١٦١)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நிச்சயமாக மறுமை நாளில் ஒரு அடியான் மலைகள் போன்று நன்மைகளை கொண்டு வருவான், என்றாலும் தனது நாவு அவை அனைத்தையும் அழித்திருப்பதை காண்பான். (நூல்: அல் ஜவாபுல் காஃபீ, பக்கம்: 161)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

فأطيب ما في الدنيا معرفته، وأطيب ما في الآخرة النظر إليه سبحانه .

[الفتاوى ١٦٣/١٤]

இவ்வுலகில் மிகத்தூய்மையானது அவனை (அல்லாஹ்வை) அறிவதாகும், மறுமையில் மிகத்தூய்மையானது அவனை பார்ப்பதாகும். (நூல்: அல் ஃபதாவா, பாகம்: 14, பக்கம்: 163)

قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

والشرك وسائر البدع مبناها على الكذب والإفتراء .

[اقتضاء الصراط المستقيم ٢٨١/٢]

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: இணைவைப்பு மற்றும் (மார்க்கத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட) ஏனைய அனாச்சாரங்களின் பிறப்பிடம் பொய் மற்றும் இட்டுக்கட்டு போன்றதில் அமைந்துள்ளன. (நூல்: இக்திழாவுஸ் ஸிராதில் முஸ்தகீம், பாகம்: 02, பக்கம்: 281)

‏قال الإمام ابن القيم -رحمه الله-:

والقلبُ المُعلّقُ بالشهواتِ لا يستطيع أن يخشع، ولو بِمقدار غمضة عينٍ، وهو عن ذكرِ اللهِ غافل دائماً.

(الفوائد (٦٢٥/٥)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஆசைகளோடு பிணைக்கப்பட்டுள்ள உள்ளத்திற்கு கண் சிமிட்டும் அளவேனும் பயபக்தியாக இருக்க இயலாது, எப்பொழுதுமே அது அல்லாஹ்வை ஞாபகம் கூறாமல் பராமுகமாக இருக்கும். (நூல்: அல் ஃபவாயித், பாகம்: 05, பக்கம்: 625)

‏ قال الإمام ابن القيم -رحمه الله-:

إن العلم يرفع صاحبَه في الدنيا و الآخرة ما لا يرفعه المُلكُ و لا المال و لا غيرهما
فالعلم يزيد الشريف شرفًا، و يرفع العبد المملوك، حتى يُجلِسه مجالس الملوك .

 (مفتاح دار السعادة (١/٢٥٨)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஆட்சி, செல்வம் மற்றும் அவை அல்லாதது உயர்த்தாத அளவு கல்வியுடையவனை கல்வி இம்மையிலும் மறுமையிலும் உயர்த்தி விடும், கல்வி கண்ணியமுள்ளவனுக்கு மேலும் கண்ணியத்தை அதிகரிக்கும், அரசர்கள் அமரும் சபைகளில் அடிமையை அமர்த்தும் அளவுக்கு அவனை அது உயர்த்திவிடும். (நூல்: மிப்தாஹு தாரிஸ் ஸஆதா, பாகம்: 01, பக்கம்: 258)

قال الإمام ابن القيم -رحمه الله-:

وإذا غفل القلب عن الذكر ساعة واحدة، جثم عليه الشيطان، ووعده، ومناه، وشهّاه، وهام به في كل واد .

(بدائع التفسير ٤٦٦/٣)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: (இறைவனை) ஞாபகம் கூறாமல் உள்ளம் ஒரு மணித்தியாலமாவது பராமுகமாக இருந்தால் அவனின் மீது ஷைதான் குடிகொண்டு விடுவான், அவனுக்கு (கெட்டதை) வாக்களிப்பான், அவனை சோதனை செய்து (கெட்ட) ஆசையை விரும்ப வைப்பான், பிறகு அனைத்து இடமும் கண்ட மாதிரி அலைந்து திரியவைப்பான். (நூல்: பதாயிவுத் தஃப்ஸீர், பாகம்: 03, பக்கம்: 466)

قال الإمام ابن القيم -رحمه الله-:

‏إنما يظفر الشيطان بالإنسان غالبًا عند السخط والشهوة ، فهناك يصطاده.

[ مدارج السالكين 2/202 ]

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பெரும்பாலும் ஷைத்தான் மனிதனை வைத்து வெற்றிபெறுவது கோபமான சந்தர்ப்பத்திலும் (கெட்ட) ஆசையின்போது மட்டும் தான், அப்பொழுது மனிதனை அவன் வேட்டையாடிவிடுவான். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன், பாகம்: 02, பக்கம்: 202)

قال الإمام ابن القيم -رحمه الله-:

إن الدعوة إلى الله ورسوله
جهاد بالقلب وباللسان،
وقد يكون أفضل من الجهاد باليد.

(‏أحكام أهل الذمة ٢/٧٢٩)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பக்கம் அழைப்பது உள்ளத்தாலும் நாவாலும் போராடுவதாகும், சிலவேளை அது கையால் போராடுவதை விட சிறப்பானதாகும். (நூல்: அஹ்காமு அஹ்லித் திம்மா, பாகம்: 02, பக்கம்: 729)

قال الإمام الشافعي -رحمه الله-:

ينبغي للرجل أن يتوخى لصحبته أهل الوفاء والصدق، كما يتوخى لوديعته أهل الثقة والأمانة.

(الانتقاء لابن عبد البر ١٥٧)

இமாம் ஷாஃபியீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு மனிதன் நம்பகமானவரையும், நேர்மையானவரையும் தன்னுடைய அடமானப்பொருளுக்கு தேடுவதை போல (வாக்குறுதியை) நிறைவேற்றுபவரையும், உண்மையாளரையும் தனது தோழமைக்கு தேடுவது கட்டாயமாகும். (நூல்: அலின்திகா லிப்னி அப்தில் பர், பக்கம்: 157)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قال الإمام ابن القيم -رحمه الله-: فأصل ما تزكوا به القلوب والأرواح: هو التوحيد . [إغاثة اللهفان(١ / ١٠٨)] இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உள்ளங்களும்,…

 قال الإمام ابن القيم -رحمه الله-: فأصل ما تزكوا به القلوب والأرواح: هو التوحيد . [إغاثة اللهفان(١ / ١٠٨)] இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உள்ளங்களும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *